கண்ணைப் பற்றி, உடையைப் பற்றி... பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா வெளியிட்ட கலக்கலான காமெடி வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் சித்ரா, கலகலப்பான காமெடி வீடியோ ஒன்றை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கண்ணைப் பற்றி, உடையைப் பற்றி... பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா வெளியிட்ட கலக்கலான காமெடி வீடியோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா
  • News18 Tamil
  • Last Updated: September 29, 2020, 6:08 PM IST
  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் கதை கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையப்படுத்தி அமைக்கப்பட்டிருப்பதால் கிராமங்களிலும், நகரங்களிலும் இத்தொடருக்கு பார்வையாளர்கள் அதிகம். அதேபோல் திருமணத்துக்குப் பின் காதலித்து வரும் கதிர் - முல்லை ஜோடிக்கும் அதிக ரசிகர் கூட்டம் இருக்கிறது.

சமீபத்தில் இத்தொடரில் யோகேஸ்வரன் - மைனா நந்தினி தம்பதி இணைந்திருக்கும் நிலையில் சென்னையில் இருக்கும் அவர்களைப் பார்க்க கதிர் - முல்லை தம்பதி குன்னக்குடியில் இருந்து சென்னை வந்துள்ளனர். பெரும்பாலும் இவர்களுக்கிடையேயான காட்சிகளே இந்த வாரம் வெளியாகியிருக்கும் புரமோ வீடியோவிலும் இடம்பெற்றிருப்பதால் கதிர் - முல்லை ஃபேன்ஸ் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் முல்லை கேரக்டரில் நடிக்கும் நடிகை சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நகைச்சுவையான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், கலக்கப்போவது யாரு பாலாவிடம் தன்னைப்பற்றி வர்ணிக்குமாறு இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தில் வரும் காட்சி போல சித்ரா கூறுகிறார். உடனே கலக்கப்போவது யாரு புகழ் பாலா, தனது காமெடியான கவிதைகளால் சித்ராவை வர்ணிக்க, கடைசியில் அவருக்கு தலையணையை பரிசாக கொடுக்கிறார் சித்ரா.

 
View this post on Instagram
 

with @bjbala_kpy @sivaangi.krish


A post shared by Chithu Vj (@chithuvj) on


இந்த கலகலப்பான காமெடி வீடியோவுக்கு அவரது ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் கணேஷ் வெங்கட்ராமனின் மனைவியும், நடிகையுமான நிஷா கிருஷ்ணனும் இந்த வீடியோவை பார்த்து மகிழ்ந்திருக்கிறார்.
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading