• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு பாதியில் போன லட்சுமி அம்மா.. மீண்டும் அழைத்த விஜய் டிவி!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு பாதியில் போன லட்சுமி அம்மா.. மீண்டும் அழைத்த விஜய் டிவி!

லட்சுமி அம்மா

லட்சுமி அம்மா

லட்சுமியாக நடித்து கொண்டிருந்த ஷீலாவின் கேரக்டரை வேண்டுமென்றே முடித்து விட்டதாகவும் தகவல்கள் பரவி சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது

  • Share this:
    பாக்கியலட்சுமி சீரியலில் புதிய கேரக்டராக அறிமுகம் ஆகிறார் ஷீலா. ராதிகாவின் தாயாக இன்றைய எபிசோட் மூலம் அறிமுகமாகி உள்ளார்.

    ரசிகர்களின் பேராதரவுடன் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் 2 சூப்பர்ஹிட் சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. இரவு 8 - 8.30 வரை பாண்டியன் ஸ்டோர்ஸ், இரவு 8.30 - 9- வரை பாக்கியலட்சுமி ஒளிபரப்பாகி வருகிறது. சில வாரங்களுக்கு முன்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்கள் மிகவும் உணர்ச்சிபூர்வமாக காட்டப்பட்டு, ரசிகர்களை சோகத்திலும் கண்ணீரிலும் ஆழ்த்தியது. இதற்கு காரணம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்களின் அம்மா கேரக்டர் இறப்பது போல ஒளிபரப்பான காட்சிகள் தான்.

    லட்சுமி பாண்டியன் என்ற கேரக்டரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்களின் அம்மா கேரக்டரில் நடித்தவர் நடிகை ஷீலா. இவர் பிரபல வெள்ளித்திரை நடிகர் விக்ராந்த்தின் தாய் ஆவார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் டிஆர்பி கண்ணன் - ஐஸ்வர்யா திருமணத்தின் காரணமாக எகிறிய நிலையில், அடுத்த சில வாரங்களிலேயே லட்சுமி அம்மாவின் கேரக்ட்டர் முடித்து வைக்கப்பட்டது. அவரது இறப்பு மற்றும் இறுதி சடங்கு காட்சிகள் கிட்டத்தட்ட 1 வாரம் வரை ஒளிபரப்பாகி ரசிகர்களை உணர்ச்சிமயமாக ஆக்கியது நினைவிருக்கலாம்.

    இதனிடையே நடிகர் விக்ராந்தை பிக்பாஸ் சீசன் 5-ல் பங்கேற்க வைக்க விஜய் டிவி தரப்பு முயற்சித்ததாகவும், ஆனால் அவர் விஜய் டிவி ஆஃபரை ஏற்று கொள்ளாமல், ஜீ தமிழ் சேனலின் சர்வைவர் ஷோவில் பங்கேற்க முடிவு செய்ததாகவும் முன்பு தகவல் வெளியானது. பிக்பாஸிற்கு முன்பே சர்வைவர் துவங்கியதன் மூலம், நடிகர் விக்ராந்த் ஜீ தமிழ் ஆஃபரை ஏற்று கொண்டது நமக்கு தெரிய வந்தது.

    இதனால் விக்ராந்தின் மீது அதிருப்தி அடைந்த விஜய் டிவி, பாண்டியன் ஸ்டோர்ஸில் லட்சுமியாக நடித்து கொண்டிருந்த அவரது தாயான ஷீலாவின் கேரக்டரை வேண்டுமென்றே முடித்து விட்டதாகவும் தகவல்கள் பரவி சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இந்த தகவலை ஷீலா அப்போதே திட்டவட்டமாக மறுத்து விட்டார். கதைக்கு தேவையாக இருந்ததால் தான் தனது கேரக்டர் இறப்பது போல காட்டப்பட்டதாகவும், விரைவில் புதிய சீரியல் ஒன்றில் விஜய் டிவி-யிலேயே தோன்றுவேன் என்றும் கூறி இருந்தார்.

    இதனிடையே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் புதிய கேரக்டராக அறிமுகம் ஆகிறார் ஷீலா. ராதிகாவின் தாயாக இன்றைய எபிசோட் மூலம் அறிமுகமாகி உள்ளார். விஐபி மெம்பர்களுக்கு விஜய் டிவி சீரியல்கள் காலை 6 மணி முதலே ஹாட்ஸ்டாரில் அன்லாக் செய்யப்படும் நிலையில், ஷீலா ராதிகாவின் தாயாக அறிமுகமாகும் சீன்கள் சோஷியல் மீடியாவில் வெளிவந்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிகை ஷீலாவின் கேரக்டர் முடிக்கப்பட்டாலும், பாக்கியலட்சுமி மூலம் மீண்டும் விஜய் டிவி-க்கு ஷீலா திரும்பி உள்ளது சின்னத்திரை ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்து இருக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: