Home /News /entertainment /

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் முக்கிய நடிகர்? சந்தேகத்தை எழுப்பும் வீடியோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் முக்கிய நடிகர்? சந்தேகத்தை எழுப்பும் வீடியோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி புதிய சீரியலில் நடிப்பதால் இந்த சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகவுள்ள புதிய சீரியலில் நடிக்கவுள்ளார். இந்த சீரியலின் புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி ரோலில் நடித்து வருபவர் நடிகர் ஸ்டாலின் முத்து. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர் வட்டம் மிக அதிகமாக இருந்து வருகிறது. அதே போல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டர்களும் சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். அதில் மூர்த்தியாக நடிக்கும் ஸ்டாலின் மூத்த கலைஞராக பார்க்கப்படுகிறார். இவர் சீரியலில் இயல்பான மற்றும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சீரியலுக்கு பலம் சேர்த்து வருகிறார். மக்களை மகிழ்விப்பது தான் கலைஞர்களின் பணி என்பதை ஆணித்தனமாக நம்பும் ஸ்டாலின் இயக்குனர் பாரதிராஜா குடும்பத்தில் இருந்து கலையுலகிற்கு வந்தவர்.

    தற்போது விஜய் டிவியில் மட்டுமே நடித்துக் கொண்டிருப்பவர் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிப்பரப்பாகவுள்ள புத்தம் புதிய சீரியலான பச்சைக் கிளி சீரியலிலும் ஹீரோயினின் அண்ணனாக நடிக்கவுள்ளார். இந்த சீரியலின் ஹீரோயினாக அரண்மனை கிளி மோனிஷா நடிக்கிறார். இவருக்கு மூத்த அண்ணன் ரோலில் தான் ஸ்டாலின் நடிக்கிறார். இதை உறுதிப்படுத்தும் புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

    பாக்கியலட்சுமியில் கோபிக்கு நடந்த அசிங்கம்.. எல்லோருக்கும் உண்மை தெரிய வருமா?



     




    View this post on Instagram





     

    A post shared by Colors Tamil (@colorstvtamil)




     

    இதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். காரணம், ஸ்டாலின் புதிய சீரியலில் நடிக்க சென்றதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகி விடுவாரோ? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. சமீபகாலமாக புதிய சீரியலில் கமிட் ஆகும் நடிகர், நடிகைகள் பழைய சீரியலில் இருந்து திடீரென்று விலகி விடுகின்றனர். அப்படி மூர்த்தி ரோலில் நடிக்கும் ஸ்டாலினும் புதிய சீரியலில் கவனம் செலுத்த சென்று விடுவாரோ? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு வந்துள்ளது. இதுக் குறித்து அவரின் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    என்னுடைய 19 வயதில் இது நடக்கும் என நினைக்கவில்லை.. யாஷிகா போட்ட பதிவு!

    ரசிகர்களின் இந்த சந்தேகத்திற்கு கூடிய விரைவில் ஸ்டாலின் முத்து பதில் அளிப்பார் என எதிர்பார்க்கலாம். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பொறுத்தவரையில் தற்போது பரபரப்பான திருப்பத்துடன் கதை பயணித்துக் கொண்டிருக்கிறது. மூர்த்தி நெஞ்சு வலி காரணமாக ஆஸ்பிட்டலில் இருக்கிறார். கதிரும் முல்லையும் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Pandian Stores, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி