அக்கா மாதிரி இருக்காங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்

சாய் காயத்ரி கண்ணனை விட வயது மூத்தவர் போல இருப்பதாக கூறுகின்றனர் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள்.

 • Share this:
  தமிழ் டிவி ரசிகர்களை வெகுவாக கவருவதில் சீரியல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பிரபல தமிழ் முன்னணி சேனல்கள் அனைத்துமே ஞாயிற்றுகிழமை தவிர வாரத்தின் மீதி 6 நாட்களிலும் எண்ணற்ற சீரியல்களை ஒளிபரப்பி தங்களது டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றி கொள்கின்றன.

  ஸ்டார் விஜய் டிவி-யின் டிஆர்பி ரேட்டிங்கை வார நாட்களில் உயர்த்துவது அந்த சேனலில் பிரைம் டைமிங்கில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தான். அந்த வகையில் மிகப்பெரிய அளவில் ஃபேமிலி ஆடியன்ஸை கவர்ந்துள் ஒரு சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
  4 சகோதரர்களுக்கு இடையில் நடக்கும் பாச நிகழ்வுகள், குடும்ப உறுப்பினர்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகள்,  ஒருவருக்கொருவர் ஜாலியாக பேசி குடும்பத்தை கலகலப்பாக்குவது என சராசரி கூட்டு குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை கண்முன் கொண்டு வந்து ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். கூட்டு குடும்பத்திற்குள் நடக்கும் சின்ன சின்ன விஷயங்கள் கூட மிக சுவாரசியமாக காட்டப்பட்டு வருவதால் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற சீரியலாக இருந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ், அண்மையில் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முதலிடம் பிடித்தது.

  இதற்கு முக்கிய காரணமாக இருந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கடைசி தம்பியான கண்ணன், திருமணம் நிச்சயமான உறவுக்கார பெண்ணை வீட்டிற்கே தெரியாமல் திருமணம் செய்து கொள்ளும் எபிசோட்கள் ஒளிபரப்பானது தான். இடையில் விறுவிறுப்பின்றி சென்ற இந்த சீரியல் கண்ணன் - ஐஸ்வர்யா திருமண களேபரத்தால் மிக பரபரப்பாக சென்றது. இதனிடையே ரீல் ஜோடிகளாக காட்டப்பட்டு வரும் கண்ணன் - ஐஸ்வர்யா கேரக்டர்கள் நெட்டிசன்களின் ஜாலி விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

  ஏனென்றால் இந்த சீரியலில் வரும் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வந்த இருவர் மாற்றப்பட்டு தற்போது மூன்றாவதாக ஒரு நடிகை களமிறக்கப்பட்டுள்ளது தான் நெட்டிசன்களை கலாய்க்க காரணமாக உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் முதன் முதலாக நடித்தவர் நடிகை வைஷாலி. திடீரென இவர் மாற்றப்பட்டு விஜே தீபிகா பல மாதங்களாக ஐஸ்வர்யா ரோலில் நடித்து வந்தார். ரசிகர்களின் மனதிலும் விஜே தீபிகா, ஐஸ்வர்யா கேரக்டருக்கு நன்கு செட் ஆகி விட்டார். ஒரு வழியாக பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் ஐஸ்வர்யாவை (விஜே தீபிகா) கரம் பிடித்த கண்ணன் (நடிகர் சரவணன் விக்ரம்) தனியே வீடு பிடித்து வாழ துவங்குவது போல எபிசோட் சென்றது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சட்டென்று பார்த்தால் சீரியல் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்யும் இவருக்கு பதில் இனி இவர் என்ற வார்த்தைகளுடன் ஐஸ்வர்யாவாக ஈரமான ரோஜாவே சீரியல் புகழ் நடிகை சாய் காயத்ரியை காட்டினர். இந்த மாற்றம் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தவிர சில ரசிகர்களும் நெட்டிசன்களும் காதலித்தது நடிகை வைஷாலியை, கல்யாணம் செய்து கொண்டது விஜே தீபிகாவை ஆனால் வாழப்போவது சாய் காயத்ரியுடன். இதெல்லாம் நியாயமா கண்ணன்.!! என்று ஜாலியாக கேள்வி எழுப்பி மீம்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் மூலம் கலாய்த்து வருகின்றனர்.

  மேலும் ஒரு கேரக்டர் தங்கள் மனதில் நன்கு செட் ஆகிவிட்ட பிறகு சட்டென்று அந்த கேரக்டரில் நடிக்கும் நடிகர்களை மாற்றுவது ஏற்று கொள்ள முடியவில்லை என்றும், விஜே தீபிகா தான் கண்ணனுக்கு பொருத்தமாக இருந்ததாகவும், நடிகை சாய் காயத்ரி கண்ணனை விட வயது மூத்தவர் போல இருப்பதாகவும் பல பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களை சோஷியல் மீடியாக்களில் தெரிவித்து வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: