• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முன்னாள் நடிகைக்கு திருமணம் - வைரலாகும் எமோஷ்னல் வீடியோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முன்னாள் நடிகைக்கு திருமணம் - வைரலாகும் எமோஷ்னல் வீடியோ!

வைஷாலி தனிகா

வைஷாலி தனிகா

காதலர் தேவ் தன் கழுத்தில் தாலி கட்டி கணவனாக மாறிய அந்த தருணத்தில் எமோஷ்னலாகி கண் கலங்கும் வீடியோவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வைஷாலி வைத்து இருக்கிறார்.

  • Share this:
ஸ்டார் விஜய் டிவி-யில் நடித்து வரும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளனர். அந்த வகையில் விஜய் டிவி-யின் சூப்பர் ஹிட் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் முன்பு ஐஸ்வர்யாவாக நடித்தவரும், தற்போது நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் மலர் என்ற கேரக்டரில் நடிப்பவருமான வைஷாலி தனிகா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார். இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே வெள்ளித்திரையில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான 'கதகளி' படத்தில் நடித்துள்ளார்.

தவிர காதல் கசகுதய்யா, திரி, எங்க அம்மா ராணி, கடுகு, ராஜா மந்திரி, சர்கார், பைரவா, ரெமோ போன்ற பல படங்களில் சிறிய மற்றும் முக்கிய கேரக்டர் ரோல்களை செய்து இருக்கிறார். கடந்த 1994-ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ல் சென்னையில் பிறந்த வைஷாலி தனிகா, மாலை நேரம் என்ற குறும்படத்திலும் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர். சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான மாப்பிள்ளை மற்றும் ராஜா ராணி சீசன் 1 உள்ளிட்ட சீரியல்களில் நடித்தன் மூலம் சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகம் ஆனார் நடிகை வைஷாலி தனிகா.

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையிலேயே முடித்தார். கோகுலத்தில் சீதை, மகராசி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ள நடிகை வைஷாலி தனிகாவிற்கு சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் அதிகம். சுமார் ஐந்தரை லட்சத்திற்கும் அதிகமானோர் இன்ஸ்டாவில் இவரை ஃபாலோ செய்து வருகிறார்கள்.

Also read... நடிகை ரவீனாவின் காதலரா இவர்? பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு கொடுத்த சர்பிரைஸ்!

இந்நிலையில் தனது நீண்டநாள் காதலரான சத்யதேவ் என்பவரை மிக சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் நடிகை வைஷாலி தனிகா. இருவீட்டார் முன்னிலையில் சத்யதேவ் - வைஷாலி தனிகா திருமணம் கோலாகலமாக நடந்தேறியது. இன்ஸ்டாவில் தனது திருமண நிகழ்வுகள் தொடர்பான ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து இருக்கிறார்.



 




View this post on Instagram





 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)








 




View this post on Instagram





 

A post shared by Mani 😊 (@mani_stylist_)






காதலர் தேவ் தன் கழுத்தில் தாலி கட்டி கணவனாக மாறிய அந்த தருணத்தில் எமோஷ்னலாகி கண் கலங்கும் வீடியோவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வைஷாலி வைத்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கடந்த செப்டம்பர் இறுதியில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை, ஒரு பேச்சுலராக இதுவே தனது கடைசி பிறந்தநாள் என்றும், விரைவில் காதலர் சத்யதேவை திருமணம் செய்து கொண்டு திருமதி சத்யதேவ் ஆக உள்ளதாகவும் இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டிருந்தார். தொடர்ந்து தனது திருமண ஷாப்பிங் பற்றிய போஸ்ட்களையும் நடிகை வைஷாலி தனிகா இன்ஸ்டாவில் ஷேர் செய்து ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: