பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் மகளிர் தினத்தன்று செய்த காரியம் - லைக்ஸ் குவிக்கும் வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் மகளிர் தினத்தன்று செய்த காரியம் - லைக்ஸ் குவிக்கும் வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகைகளுக்கு நடிகர் டேவிட் ராஜா சமைத்து கொடுத்துள்ளார்.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடரில் ஸ்டாலின், சுஜிதா, சரவண விக்ரம், ஹேமாராஜ், குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தமிழில் ஹிட் அடித்த இத்தொடர் இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

இத்தொடரின் முல்லை, மூர்த்தி, கதிர், தனம், மீனா, ஜீவா என்ற கேரக்டர்களுக்கு தனித்தனியே ரசிகர் பட்டாளமிருக்கிறது. இதில் முல்லை கேரக்டரில் நடித்து வந்த விஜே சித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் நடித்த முல்லை கதாபாத்திரத்தில் பாரதிகண்ணம்மா தொடர் நடிகை காவ்யா அறிவுமணி நடித்து வருகிறார்.

மேலும் படிக்க: சித்ரா பற்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய முல்லை உருக்கமான பதிவு

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் குறித்து வெளியாகும் தகவல்கள் சமூகவலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன. இந்நிலையில் மூர்த்தியின் மச்சான் கேரக்டரில் நடித்து வரும் டேவிட் சாலமன் ராஜா மகளிர் தினத்தன்று தன் கையால் உணவு சமைத்து பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிக்கும் நடிகைகளுக்கு உணவளித்துள்ளார். அதை மகளிர் தின ஸ்பெஷல் என்ற தலைப்பில் தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு லைக்ஸ்களைக் குவித்து வருகிறது. 
View this post on Instagram

 

A post shared by David solomon raja (@davidsraja)


மேலும் அந்த வீடியோவில் டேவிட் சாலமன் ராஜாவின் சாப்பாட்டை சாப்பிட்ட நடிகைகள் சுவையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
Published by:Sheik Hanifah
First published: