பாண்டியன் ஸ்டோர்ஸ் சீர்யலில் இன்றைய எபிசோடில் கடன் வாங்கியவரிடம் அசிங்கப்பட்டு நின்ற மூர்த்தி குடும்பத்திற்கு கடைசி நேரத்தில் பணம் கொடுத்து உதவுகிறார் மீனா.
பாண்டியன் ஸ்டோர்ஸில் தனம் அண்ணி பிறந்த நாளுக்காக மொத்த குடும்பமும் திரண்டுள்ளனர். மீனாவின் அப்பா, அம்மா, முல்லையின் அம்மா, அப்பா, தனத்தின் அம்மா, அண்ணன், அண்ணி என ஒட்டுமொத்த சொந்தங்களும் வந்து இருக்கிறார்கள். ஐஸ்வர்யாவுக்கும் மீனாவுக்கும் நடந்த சமையல் போட்டியில் ஐஸ்வர்யா ஜெயித்து விட்டார்., இதற்கு கைத்தட்டியதற்காக ஜீவாவை மீனா வறுத்து எடுத்தார். வழக்கம் போல் ஜீவாவை மீனா வச்சி செய்தார்.
பேச்சிலர் பார்ட்டி வைத்து கொண்டாடிய சீரியல் நடிகை.. திரண்டு சென்ற பிரபலங்கள்!
இந்த பக்கம் முல்லையின் அப்பா அம்மா அவரின் உடல்நலம் குறித்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். மூர்த்தி தனது தம்பிகள் ஜீவா, கதிருடன் சேர்ந்து வெளியில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கடன் கொடுத்தவர் மூர்த்தியின் வீட்டுக்கு வந்து சத்தம் போடுகிறார். முல்லையின் மருத்துவ செலவுக்காக மூர்த்தி ஒருவரிடம் கடன் வாங்கி இருந்தார். அவருக்கு வட்டி பணம் கொடுக்க வேண்டிய தேதி இன்று. மூர்த்தி முன்பே வட்டி பணத்தை கடையில் இருக்கும் பசங்களிடம் கொடுத்துவிட்டு தான் வீட்டுக்கு வருகிறார். ஆனால் அவர்கள் தெரியாமல் அரிசி அண்ணாச்சிக்கு அந்த பணத்தை கொடுத்து விடுகிறார்கள்.
அந்த கோபத்தில் வீட்டுக்கு வரும் அந்த நபர், மூர்த்தியிடம் சத்தம் போடுகிறார். வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு இது தெரிய கூடாது என்பதற்காக ஜீவா, மீனாவிடம் உதவி கேட்கிறார். மீனாவும் அவரின் அப்பா ஜனார்த்தன் கொடுத்த பணத்தை எடுத்து கொடுத்து உதவுகிறார். அந்த பணத்தை வட்டிக்காரரிடம் கொடுத்து ஜீவா பிரச்சனையை முடித்து வைக்கிறார். ஆனால் இந்த விஷயம் மீனா அப்பா, ஜனார்த்தனுக்கு தெரிந்து விடுகிறது.
தமிழ் சினிமாவின் இசை பொக்கிஷம்.. இளையராஜா பிறந்தநாள் ஸ்பெஷல்!
அவர் கதிரை அசிங்கப்படுத்தி பேசுகிறார், முல்லையின் மருத்துவ செலவுக்கு வாங்கிய கடனை ஏன் மீனா கொடுக்கணும் என்று மூர்த்தியிடம், கதிரிடம் சண்டைக்கு போகிறார். இதோடு இன்றைய எபிசோட் முடிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.