Home /News /entertainment /

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு இப்படியொரு நிலைமையா? கண்ணீரில் தனம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு இப்படியொரு நிலைமையா? கண்ணீரில் தனம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தியின் மோசமான நிலைமைக்கு கதிரும் முல்லையும் ஒரு காரணம் ஆகிவிட்டனர்.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் - முல்லை வெளியே போன சோகத்தில் நெஞ்சு வலியில் படுத்துவிட்டார் மூர்த்தி. அதனால் இன்றைய எபிசோடில் ஆஸ்பிட்டலில் கண்ணீரில் தவிக்கிறார் தனம்.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பொறுத்தவரையில் 4 அண்ணன் - தம்பிகளை சுற்றி தான் மொத்த கதையுமே. இத்தனை நாட்களாக இந்த குடும்பம் எவ்வளவோ பிரச்சனையை சந்தித்து இருக்கிறது. ஆனால் ஒருபோதும் பிரிந்தது இல்லை. ஆனால் மீனா அப்பாவால் வந்த சண்டையால்  இன்று முல்லையும் கதிரும் வீட்டை விட்டு சென்றுவிட்டனர். ஐஸ்வர்யாவை திருமணம் செய்த காரணத்தால் கண்ணனை வீட்டை விட்டு ஒதுக்கி வைத்தார் மூர்த்தி. லட்சுமி அம்மா இறப்புக்கு கண்ணன் கல்யாணமும் ஒரு காரணம் என்றே கூறப்பட்டது. இந்நிலையில், இப்போது மூர்த்தியின் மோசமான நிலைமைக்கு கதிரும் முல்லையும் ஒரு காரணம் ஆகிவிட்டனர்.

    பாரதி முன்பு அசிங்கப்பட்ட வெண்பா.. கண்ணம்மா நினைச்சது நடந்துடுச்சு!

    கதிர் - முல்லை வீட்டை விட்டு போன அன்று இரவே மூர்த்திக்கு நெஞ்சு வலி வந்து விட்டது. தூக்கத்தில் கத்திய அவரை உடனடியாக ஆஸ்பிட்டல் அழைத்து வந்தனர். பின்பு நெஞ்சு வலி என்று ஆஸ்பிட்டலில் அட்மிட் செய்துள்ளனர். 2 ஆப்ரேஷன் கட்டாயம் செய்ய வேண்டும் என டாக்டர் கூறிவிட்டார். தனம்  ஆஸ்பிட்டலில் இருந்தப்படியே அழுது துடிக்கிறார். அவருக்கு ஆறுதலாக ஜீவாவும் கண்ணனும் உடன் இருக்கிறார்கள்.

    மகனுக்காக பிரியாணி விருந்து போட்ட ஆல்யா - சஞ்சீவ் ஜோடி!

    கதிருக்கு இந்த விஷயம் தெரியாது.அதுமட்டுமில்லை கதிர் - முல்லையும் அங்கு மூர்த்தி தனத்தை பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய எபிசோடில் மூர்த்திக்கு ஆப்ரேஷன் செய்ய தனத்திடம் கையெழுத்து வாங்கப்படுகிறது. ஐ.சி.யூவில் இருக்கும் மூர்த்தியை பார்த்து அழுது துடிக்கிறார் தனம். அடுத்து என்ன நடக்கும்?  விஷயம் தெரிந்து முல்லையும் கதிரும் ஓடி வருவார்களா? பிரிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் எப்போது சேரும்? என்ற கேள்விகளுடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Pandian Stores, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி