பாண்டவர் இல்லம் சீரியலில் தேன்மொழி கதாபாத்திரம் திடீரென்று மாற்றப்பட்டுள்ளது. அதற்கான காரணத்தை அந்த சீரியலில் நடிக்கும் சக நடிகரே ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாண்டவர் இல்லம் சீரியல் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளது எனலாம்.பாண்டவர் இல்லத்தின் 5 மருமகள்களும் எப்படி அந்த குடும்பத்தை பொறுப்புடன் வழி நடத்துகின்றனர், பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பது தான் இந்த சீரியலின் ஒன்லைன். இந்த சீரியலில் கயலுக்கு தங்கையாக அழகு சுந்தரத்துக்கு மனைவியாக தேன்மொழி என்ற ரோலில் நடித்து வந்தவர் சீரியல் நடிகை மதுமிதா. இவர் இதற்கு முன்பு மகராசி, அரண்மனை கிளி என பல சீரியல்களில் நடித்துள்ளார்.
எழிலை பற்றி இப்படியொரு பொய்யா? ராதிகாவை ஏமாற்றும் கோபி!
இவர் தான் பாண்டவர் இல்லத்தின் கடைசி மருமகளாக தேன்மொழி ரோலில் நடித்து வந்தார். ஆனால் 2 தினங்களுக்கு முன்பு இவருக்கு பதில் இனி ஐஸ்வர்யா என்பவர் தேன்மொழி ரோலில் நடிக்க போவதாக அறிவிக்கப்பட்டது. சீரியலில் இவரின் அறிமுகமும் முடிந்தது. சின்னத்திரையில் பரவலாக இதுப்போன்ற அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில், தேன்மொழியின் கதாபாத்திரத்தின் மாற்றத்துக்கு என்ன காரணம் என தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வந்தனர்.
கலர்ஸ் தமிழில் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் குஷ்புவின் ‘மீரா’ சீரியல்!
இந்நிலையில் இந்த குழப்பத்திற்கு சீரியல் நடிகரும், இந்த பாண்வர் இல்லம் சீரியலின் ரேவதியின் கணவராக நடிக்கும் நேசன் நெப்போலியன் இதற்கான காரணத்தை தனது ஃபேஸ்புக்கில் வீடியோ மூலம் தெளிவுப்படுத்தியுள்ளார். அதாவது உடல்நிலை பிரச்சனை காரணமாக தான் மதுமிதா தேன்மொழி ரோலில் நடிக்க முடியாமல் போனதாக அவர் காரணத்தை கூறியுள்ளார். அதே போல் புதுசாக வந்திருக்கும் ஐஸ்வர்யா, சின்னத்திரைக்கு புது வரவாக இருந்தாலும் தேன்மொழி ரோலை உள்வாங்கி மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.