Home /News /entertainment /

சீரியலில் மட்டுமில்லை நிஜத்திலும் அதுதான் உண்மை! ரகசியம் சொன்ன பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை!

சீரியலில் மட்டுமில்லை நிஜத்திலும் அதுதான் உண்மை! ரகசியம் சொன்ன பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை!

பாண்டவர் இல்லம் அனு

பாண்டவர் இல்லம் அனு

பாண்டவர் இல்லம் சீரியலில் ஷாலினி என்ற ரோலில் நடிப்பவர் சீரியல் நடிகை அனு

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை சீரியலில் மட்டுமில்லை நிஜத்திலும் 4 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இந்த தகவலை அவரே தனது இன்ஸ்டாவில் உறுதி செய்துள்ளார்.

    சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாண்டவர் இல்லம் சீரியல் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளது. பாண்டவர் இல்லம் சீரியலுக்கு பின்பு தொடங்கப்பட்ட எத்தனையோ சீரியலுக்கு சன் டிவி என்டு கார்டு போட்டுள்ளது. ஆனால் பாண்டவர் இல்லம் சீரியல் தொடந்து பிரைம் டைமிங்கில் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் ஒன்லைன் பாண்டவர் இல்லத்தின் 5 மருமகள்கள் எப்படி இந்த குடும்பத்தை பொறுப்புடன் வழி நடத்துகிறார்கள் என்பது தான்.

    பாண்டியன் ஸ்டோர்ஸில் அடுத்த முல்லை யார்? அந்த சீரியல் நடிகையின் பெயர் தான் அடிபடுது!

    இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. கயல், ரேவதி, தேன் மொழி என இவர்களின் கதாபாத்திரங்கள் இல்லத்தரசிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது. இதனால் தான் இந்த சீரியல் இப்படியொரு மெகா சாதனையை செய்து உள்ளது. அதாவது தற்போது பாண்டவர் இல்லம் சீரியல் 800 எபிசோடுகளை தாண்டி வெற்றிக்கரமாக டெலிகாஸ்ட் ஆகி வருகிறது. கூடிய விரைவில் 1000 எபிசோடுகளை தாண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.



    அதெல்லாம் நம்பாதீங்க.. மகாலட்சுமி ஆடி கார் வச்சி இருக்காங்க! போட்டு கொடுத்த ரவீந்தர்

    இந்த சீரியலில் மூத்த மருமகள் ஷாலினி என்ற ரோலில் நடிப்பவர் சீரியல் நடிகை அனு. இவர் இதற்கு முன்பு ஜீ தமிழ், விஜய் டிவி, ஜெயா டிவி தொடர்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ஆபீஸ் சீரியல் தான் அனுவின் முதல் சீரியல் . அதன்பின்பு தொடர்ந்து வாய்ப்புகள் குவிய பெரும்பாலும் நெகட்டிவ் ரோல்களை தேர்வு செய்து அனு நடித்து வருகிறார். பாண்டவர் இல்லம் தொடரில் கூட ஆரம்பத்தில் ஷாலினி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் அதன் பின்பு அவர் திருந்தி விட்டது போல் கதை மாறியது.

    தற்போது சீரியல் கதைப்படி ஷாலினி ரோல் கர்ப்பமாக இருப்பது போல் காட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீரியலில் மட்டுமில்லை நிஜத்திலும் ஷாலினி ரோலில் நடிக்கும் அனு  கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். இவர் விக்கி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஜீ தமிழ் நிகழ்ச்சியிலும் ஜோடியாக கலந்து கொண்டனர். இந்நிலையில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்து அதன் மூலம் தனது ரசிகர்களிடம் சந்தோஷமான விஷயத்தை  அனு ஷேர் செய்துள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Anu 🧚 (@anu_chweety)






    ”நாங்கள் பெற்றோர் ஆகிவிட்டோம், கடவுளின் ஆசீர்வாதத்துடன் இப்போது 4வது மாதம்”  என கூறியுள்ளார். ரசிகர்கள் பலரும் அனு - விக்கி ஜோடியை வாழ்த்தியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial

    அடுத்த செய்தி