• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 86 கிலோ டூ 63 கிலோ.. வெயிட் லாஸ் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்த பாண்டவர் இல்லம் ரேவதி!

86 கிலோ டூ 63 கிலோ.. வெயிட் லாஸ் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்த பாண்டவர் இல்லம் ரேவதி!

பாண்டவர் இல்லம் ரேவதி

பாண்டவர் இல்லம் ரேவதி

அவருடைய உடலை காரணம் காட்டி பெரிய கதாபாத்திரங்கள் சீரியலில் வழங்கப்பட்டதாம்.

  • Share this:
    சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டவர் இல்லம் சீரியலில் ரேவதி ரோலில் நடிக்கும் நடிகை கிருத்திகா சின்னத்திரைக்கு கம்பேக் கொடுத்த கதை.

    சின்னத்திரையில் வாய்ப்புகள் கிடைப்பது எளிது என்றாலும் அதை நிரந்தரமாக தக்க வைத்து கொள்வது என்பது கடினமான விஷயம். சேனல் விட்டு சேனல் மாறி நடித்தாலும் அந்த பயணத்தை நேர்த்தியாக கொண்டு செல்ல தனி திறமை வேண்டும். அந்த திறமையை கிருத்திகா 15 வயதிலே தொடங்கி விட்டார் என்று தான் கூற வேண்டும். தற்போது பாண்டவர் இல்லம் சீரியலில் ரேவதியாக கலக்கி கொண்டு இருக்கிறார் கிருத்திகா. இவரை மெட்டி ஓலி அருந்ததி என்றால் பலருக்கும் தெரியும்.

    இவரின் முதல் சினிமா பயணம் இவர் 10ஆம் வகுப்பு படிக்கும்போது தொடங்கியது. ஆண்டான் அடிமை என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு பேசாத கண்ணும் பேசுமே படத்தில் ஹீரோவுக்கு தங்கையாக நடித்தார். அதன் பின்பு தான் சின்னத்திரையில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இவரின் முதல் சீரியல் மெட்டி ஒலி தான். இதில் செல்வத்தை பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடி போன அருந்ததி கேரக்டரில் நடித்தார். தொடர்ந்து ஆனந்தம், ஆடுகிறான் கண்ணன், கணவருக்காக, செல்லமே, முந்தாணை முடிச்சு என சன் டிவியில் ஒளிப்பரப்பான ஹிட் சீரியல்களில் நடித்தார். பின்பு கல்யாணம் குழந்தைகள் என பிஸியானவர் மரகத வீணை சீரியல் மூலம் மீண்டும் நடிப்பு பயணத்தை தொடங்கினார்.

    பெரும்பாலும் இவருக்கு வில்லி ரோல் தான் கொடுக்கப்படும். கொடுத்த கதாபாத்திரத்தை மிக சரியாக செய்து நடிப்பில் அசத்திவிடுவார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சின்னதம்பி சீரியலில் இவரின் நெகட்டிவ் ரோல் பெரிதளவில் பேசப்பட்டது. சீரியலை தவிர ரியாலிட்டி ஷோ, டான்ஸ் ஷோ, கபடி ஷோ தனது திறமையை எல்லா இடத்திலும் வெளிப்படுத்தினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் தான் கிருத்திகா சில சீரியல்களில் குண்டாக தெரிய தொடங்கினார். திருமணத்திற்கு பிறகு பெண்கள் குண்டாவது இயல்பு என்றாலும் கூட அதை சீரியஸாக ஏடுத்துக் கொண்டவர் நம்ப முடியாத வெயிட் லாஸ் செய்தார். 86 கிலோவிலிருந்து 63 கிலோ வரை உடல் எடையை குறைத்து பலருக்கும் ஆச்சரியத்தை தந்தார். தனது வெயிட் லாஸ் வீடியோ ஒன்றையும் இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார். இதற்கு மிக முக்கிய காரணம் கிருத்திகா வயது 30 ப்ளஸ் தான். ஆனாலும் அவருடைய உடலை காரணம் காட்டி பெரிய கதாபாத்திரங்கள் சீரியலில் வழங்கப்பட்டதாம்.



     




    Instagram இல் இந்த இடுகையை காட்டு





     

    Krithika Annamalai இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@krithika.annamalai)






    அதை சற்றும் விரும்பாத அவர், 6 மாத கடின உழைப்பை கொட்டி இப்போது சின்னத்திரையில் இளம் நாயகியாக கம்பேக் கொடுத்து இருக்கிறார். தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டவர் இல்லம் தொடர் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்துள்ளது. மூத்த மருமகள் ரேவதியாக சீரியலில் கலக்கி வருகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: