Home /News /entertainment /

பாண்டவர் இல்லம் சீரியலில் ரேவதிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

பாண்டவர் இல்லம் சீரியலில் ரேவதிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

பாண்டவர் இல்லம் ரேவதி

பாண்டவர் இல்லம் ரேவதி

ரேவதி துப்பாக்கியுடன் வந்து இருப்பதாக குட்டி, கயலிடம் சொல்கிறார்.

    பாண்டவர் இல்லம் சீரியலில் இன்றைய எபிசோடில் ரேவதிக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது.

    சன் டிவியில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டவர் இல்லம். இதில் நரேஷ், அப்சர், பாப்ரி கோஷ், ஆர்த்தி என பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். அண்ணன் - தம்பி மற்றும், கூட்டுக் குடும்ப பின்னணியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. டெலிவிஷன் தொடர்களில் பாண்டவர் இல்லம் சீரியல் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளது எனலாம்.பாண்டவர் இல்லத்தின் 5 மருமகள்களும் எப்படி அந்த குடும்பத்தை பொறுப்புடன் வழி நடத்துகின்றனர், பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பது தான் இந்த சீரியலின் ஒன்லைன்.

    கோபியின் காதலி ராதிகாவிடம் அப்படியொரு கேள்வி.. சும்மா விடுவாரா!

    இப்போது கதைப்படி ரேவதியின் கணவர் ராசு, டீச்சரை திருமணம் செய்து கொள்ள போகிறார். ரேவதி கொடுத்த டார்ச்சரால் ராசு இந்த முடிவை எடுக்கிறார். இதனால் ரேவதி, கயல் - மல்லிகாவிடம் உதவி கேட்கிறார். அவர்களும் ராசு மனதை மாற்ற எவ்வளவோ முயற்சி செய்கின்றனர். ஆனாலும் ராசு டீச்சர் தான் வேண்டும் என அடம் பிடிக்கிறார். இதனால் தற்போது ராசுக்கும் டீச்சருக்கும் கல்யாணம் செய்து வைக்க கயல், குட்டி, சுந்தரம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து முடிவு எடுக்கின்றனர். இன்றைய எபிசோடில் ராசு - டீச்சர் திருமண எபிசோடுகள் ஒளிப்பரப்பாகவுள்ளன.

    அந்த விஜய் டிவி சீரியல் முடிய போகிறதா? வருத்தத்தில் ரசிகர்கள்!

    இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான புரமோ வெளியாகியுள்ளது. நடக்க போகும் திருமணத்தை நேரில் பார்க்க ஜமீன் வந்துள்ளார். டீச்சரை அல்ங்காரம் செய்து கயல், மல்லிகா அழைத்து வருகின்றனர். மண்டபத்தில் ரேவதியும் இருக்கிறார், இந்த கல்யாணத்தை நிறுத்த ரேவதி பல முயற்சிகளை எடுப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.



    இந்நிலையில் ரேவதி துப்பாக்கியுடன் வந்து இருப்பதாக குட்டி, கயலிடம் சொல்கிறார். அதாவது டீச்சரை சுட்டு கொள்ள தான் ரேவதி வந்து இருக்கிறார் என்பது குட்டிக்கு தெரிந்து போகிறது. எல்லோரும் அதிர்ச்சியில் நிற்கின்றனர். ஆனால் இதை விட ரேவதிக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது. அதாவது, டீச்சருக்கு தான் கல்யாணம், ஆனால் மாப்பிள்ளை ராசுவாக இருக்க மாட்டார் . கடைசி நேர திருப்பமாக கயல் - மல்லிகா எதாவது செய்து இருப்பார்கள் என ரசிகர்கள் கெஸ் செய்துள்ளனர். ராசு - டீச்சர் கல்யாணம் நடக்குமா? ரேவதி யாரை சுடுவார்? என்பது இன்றைய எபிசோடில் தெரிய வரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, Television, TV Serial

    அடுத்த செய்தி