• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • என்னை திருமணம் செய்து கொள்வீர்களா எனக் கேட்ட ரசிகர்... மகன் மூலம் பதில் சொன்ன பிரபல சீரியல் நடிகை!

என்னை திருமணம் செய்து கொள்வீர்களா எனக் கேட்ட ரசிகர்... மகன் மூலம் பதில் சொன்ன பிரபல சீரியல் நடிகை!

கிருத்திகா அண்ணாமலை

கிருத்திகா அண்ணாமலை

சமீபத்தில் இன்ஸ்டாவில் Q & A செஷனை நடத்திய கிருத்திகா அண்ணாமலையிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா எனக் கேட்டார்.

  • Share this:
    சன் டிவி-யில் ஒளிபரப்பாகிய பல ஹிட் சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பலர் பிரபலமாக மாறியுள்ளனர். அந்த வகையில் தற்போது மதியம் 1.30 முதல் 2 மணி வரை சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் கவர்ந்து ஹிட் சீரியலாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது பாண்டவர் இல்லம். பரம்பரை பாரம்பரியத்தை பின் பற்றி வாழும் சகோதர்களின் குடும்ப கதையாக காமெடி மற்றும் வில்லத்தனம் கலந்து வித்தியாசமான கதை களத்தில் ஒளிபரப்பாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்த ஹிட் சீரியலில் ரேவதி என்ற கேரக்டர் மூலம் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே பிரபலமாக இருப்பவர் சீரியல் நடிகை கிருத்திகா அண்ணாமலை. இவர் ஏற்கனவே பல ஆண்டுகளாக சின்னத்திரையில் நடித்து வருகிறார். மெகா ஹிட் சீரியலான மெட்டி ஒலியில் நடித்து புகழ்பெற்ற சீரியல் கலைஞர்களில் இவரும் ஒருவர். மெட்டி ஒலியில் அருந்ததி என்ற அமைதியான ரோலில் நடித்து மக்களிடம் பிரபலமானார். பின்னர் நடிகை ராதிகா தயாரித்து நடித்த செல்லமே என்ற சீரியலில் கோமதியாக நெகட்டிவ் கேரக்ட்ரில் நடித்தார்.

    கேளடி கண்மணி, வம்சம், முந்தானை முடிச்சு, ஆனந்தம், மரகத வீணை, கல்யாண பரிசு, பாசமலர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான சின்னத்தம்பி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். இவரது உயரம் மற்றும் உருவ தோற்றத்திற்கு பெரும்பாலும் நிறைய நெகட்டிவ் ரோல்கள் கிடைத்தன. எனினும் அதில் எந்த ஒரு ஓவர் ஆக்டிங்கும் செய்யாமல் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் பதிந்தது இவரின் திறமைக்கு சான்று.

    வெள்ளித்திரையில் சத்யராஜின் ஆண்டான் அடிமை, குணால் நடித்த பேசாத கண்ணும் பேசுமே உள்ளிட்ட சில படங்களில் பள்ளி பருவத்திலேயே நடிகை கிருத்திகா தோன்றி இருக்கிறார். சன் டிவி-யின் சுந்தரி மற்றும் பாண்டவர் இல்லம் ஆகிய சீரியல்களில் தற்போது நடித்து வந்தாலும் சோஷியல் மீடியாவான இன்ஸ்டாவில் பிசியாக இருக்கிறார் இவர்.

    Krithika Annamalai, Sun TV Pandavar Illam Krithika Annamalai, Krithika Annamalai instagram, krithika annamalai age, krithika annamalai, krithika annamalai  serial list, krithika annamalai transformation, krithika annamalai profile, krithika annamalai height, krithika annamalai metti oli, krithika annamalai family, krithika annamalai serials, krithika annamalai pandavar illam, krithika annamalai weight loss, krithika annamalai body transformation, சன் டிவி பாண்டவர் இல்லம் கிருத்திகா அண்ணாமலை எடை குறைப்பு வீடியோ, கிருத்திகா அண்ணாமலை வயது, கிருத்திகா அண்ணாமலை, கிருத்திகா அண்ணாமலை சீரியல் லிஸ்ட், கிருத்திகா அண்ணாமலை இன்ஸ்டாகிராம், கிருத்திகா அண்ணாமலை சுயவிவரம், கிருத்திகா அண்ணாமலை சீரியல்
    கிருத்திகா அண்ணாமலை


    சமீபத்தில் இன்ஸ்டாவில் Q & A செஷனை நடத்திய இவரிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா ப்ளீஸ்.. என்று ஆசையுடன் கேள்வி எழுப்பி இருந்தார். பாவம் அவருக்கு கிருத்திகா திருமணம் ஆனவர், மற்றும் 6 -வயது மகனுக்கு தாய் என்பது தெரியாது போலும். அவருக்கு பதிலளிக்கும் விதமாக இது என்னுடைய மகன் ப்ரோ என்று தன் மகனுடன் எடுத்து கொண்ட போட்டோ ஒன்றை அவருக்கு பதிலாக கொடுத்து உள்ளார். ரசிகருக்கு நடிகை கிருத்திகா நாசுக்காக கொடுத்த பதிலடி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: