Home /News /entertainment /

’பாண்டவர் இல்லம்’ சீரியல் ரசிகர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா?

’பாண்டவர் இல்லம்’ சீரியல் ரசிகர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா?

பாண்டவர் இல்லம்

பாண்டவர் இல்லம்

ரசிகர்கள் பாண்டவர் இல்லம் சீரியல் குழுவுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

    சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாண்டவர் இல்லம் சீரியல் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளது. கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவத்தை சொல்லும் இந்த சீரியலின் ஒன்லைன் பாண்டவர் இல்லத்தின் 5 மருமகள்கள் எப்படி இந்த குடும்பத்தை பொறுப்புடன் வழி நடத்துகிறார்கள் என்பது தான். இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. கயல், ரேவதி, தேன் மொழி என இவர்களின் கதாபாத்திரங்கள் இல்லத்தரசிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது. இதுதான் இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றே கூறலாம்.

    COOK WITH COMALI : இந்த வார எபிசோடில் குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்பிரைஸ்!

    இதனால் தான் இந்த சீரியல் இப்படியொரு மெகா சாதனையை செய்து உள்ளது. பாண்டவர் இல்லம் சீரியலுக்கு பின்பு தொடங்கப்பட்ட எத்தனையோ சீரியலுக்கு சன் டிவி என்டு கார்டு போட்டுள்ளது. ஆனால் பாண்டர் இல்லம் சீரியல் தொடந்து பிரைம் டைமிங்கில் ஒளிப்பரப்பாகி வருகிறது. அதே போல் இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்த நடிகர், நடிகைகளே தொடர்ந்து நடித்து வருகின்றனர். தற்போது கதைப்படி ராசு, டீச்சர் மகேஸ்வரி வீட்டில் தான் இருக்கிறார். ரேவதி மீது கோபத்தில் இருக்கும்  ராசு பாண்டவர் இல்லத்தை விட்டு சென்று விட்டார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil TV Express (@tamiltvexpresss)






    இப்போது ரேவதி, கயல் தேன் மொழியிடம் வந்து மன்னிப்பு கேட்டு நடித்து கொண்டிருக்கிறார். ஆனால் இதை யாருமே நம்பவில்லை. சீரியலின் கதை இப்படி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க பாண்டவர் இல்லம் சீரியல் சத்தமில்லாமல் ஒரு மாபெரும் சாதனையை  செய்துள்ளது. அதாவது இந்த சீரியல் 800 எபிசோடுகளை கடந்து தொடர்ந்து ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. கண்டிப்பாக இந்த வெற்றிக்கு சீரியல் குழு, நடிகர், நடிகைகள் அனைவரும் தான் காரணம். இதனால் ரசிகர்கள் பாண்டவர் இல்லம் சீரியல் குழுவுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial

    அடுத்த செய்தி