Home /News /entertainment /

ரசிகர்கள் எதிர்பார்த்த பச்சைக் கிளி - ஆதி திருமணம் சூப்பரா முடிஞ்சிருச்சு!

ரசிகர்கள் எதிர்பார்த்த பச்சைக் கிளி - ஆதி திருமணம் சூப்பரா முடிஞ்சிருச்சு!

பச்சக்கிளி

பச்சக்கிளி

இன்றைய எபிசோடில் பச்சைக் கிளி - ஆதி திருமண சீன்கள் டெலிகாஸ்ட் செய்யப்படுகின்றன

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் பச்சைக் கிளி சீரியலில் ஆதி - பச்சைக் கிளி திருமணம் இனிதே நடந்து முடிந்தது. இந்த காட்சிகள் இன்றைய எபிசோடில் ஒளிப்பரப்பாகவுள்ளன.

    கலர்ஸ் தமிழ் சேனலில் காலை முதல் இரவு வரை பல்வேறு வகையான சீரியல்கள் ஒளிப்பரப்பாகி வருகின்றன. இதில் டெலிகாஸ்ட் செய்யப்படும் நெடுந்தொடர்களுக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை கொடுத்து வெற்றி பாதையில் எடுத்து செல்கின்றனர். அந்த வகையில் கலர்ஸ் தமிழில் வார நாட்களில் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் தொடர் 'பச்சைக் கிளி’ திருமண உறவின் மதிப்பீடுகள், குடும்ப பிணைப்புகள் மற்றும் சகோதர சகோதரிகளுக்கு இடையிலான உறவுகளின் முக்கியத்துவத்தை சொல்லும் இந்த தொடரில் மோனிஷா லீட் ரோலில் நடிக்கிறார். இவருக்கு மூத்த அண்ணனாக பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி நடிக்கிறார்.



    தன்னை பற்றி மிகப் பெரிய உண்மையை சொன்ன பாக்கியலட்சுமி எழில்!

    வக்கீல் ஆதியாக நடிகர் தீபக் நடிக்கிறார். கதைப்படி இப்போது பச்சைக்கிளிக்கும் வக்கீல் ஆதித்யாவுக்கும் திருமணம் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பல தடைகளை தாண்டி இவர்களின் திருமணம் ஒருவழியாக நடந்து முடிந்தது. இன்றைய எபிசோடில் பச்சைக் கிளி - ஆதி திருமண சீன்கள் டெலிகாஸ்ட் செய்யப்படுகின்றன. அதே போல் பச்சைக் கிளியை பிரியும் போது 3 அண்ணன்களும் கண்ணீர் வடிக்கின்றனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Colors Tamil (@colorstvtamil)






    இதுவரை பாசமாக வளர்த்த தங்கை பச்சைக் கிளியை முதன்முறையாக பிரிவதை எண்ணி மூத்த அண்ணன் கலங்கி நிற்கிறார். இவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு மாமியார் வீட்டுக்கு கிளம்புகிறார் பச்சைக் கிளி. இனிமேல் ஆதித்யா வீட்டில் பச்சைக் கிளி எதிர்க் கொள்ள போகும் சவால்கள் இதைவிட சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial

    அடுத்த செய்தி