Home /News /entertainment /

கலர்ஸ் தமிழ் ’பச்சக்கிளி’ சீரியலில் என்ட்ரி கொடுத்த வெள்ளித்திரை பிரபலம்!

கலர்ஸ் தமிழ் ’பச்சக்கிளி’ சீரியலில் என்ட்ரி கொடுத்த வெள்ளித்திரை பிரபலம்!

பச்சக்கிளி

பச்சக்கிளி

வெள்ளித்திரை புகழ் நடிகர் டி.எஸ்.ஆர். பச்சக்கிளி சீரியலில் சில நாட்களுக்கு கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் பச்சைக் கிளி சீரியலில் வெள்ளித்திரை பிரபலம் நடிகர் டி.எஸ்.ஆர் என்ட்ரி கொடுக்கிறார். இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

    கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளன. புதுமையான திரைக்கதை, புதுமுக நடிகர், நடிகைகள் என வித்தியாசமான முயற்சியால் காலை முதல் இரவு வரை கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் அனைத்து சீரியல்களும் ரசிகர்களின் கவனத்தை பெற்று விட்டன. அந்த வகையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட பச்சக்கிளி சீரியல் டி.ஆர்.பியில் கலக்கி வருகிறது.

    அப்படியொரு வளர்ச்சி.. சூப்பர் சிங்கர் ’பூவையார்’ இப்ப என்ன செய்கிறார் தெரியுமா?

    கலர்ஸ் தமிழில் வார நாட்களில் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் 'பச்சைக் கிளி’ சீரியல் திருமண உறவின் மதிப்பீடுகள், குடும்ப பிணைப்புகள் மற்றும் சகோதர சகோதரிகளுக்கு இடையிலான உறவுகளின் முக்கியத்துவத்தை சொல்கிறது. இதில் மோனிஷா லீட் ரோலில் நடிக்கிறார். இவருக்கு மூத்த அண்ணனாக பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி நடிக்கிறார்.சில் நாட்களுக்கு முன்பு
    ஆதி - பச்சைக் கிளி திருமணம் இனிதே நடந்து முடிந்தது. இப்போது இருவரும் ஹனிமூனுக்கு வந்துள்ளனர்.

    வருண் - சக்தியை பிரிக்க வரும் வில்லன்.. இனி மெளன ராகத்தில் இவர் ஆட்டம் தான்!

    ஹனிமுனுக்கு வந்த இடத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் நகைச்சுவை ட்ராக்கில் வரும் நாட்களில் ஒளிப்பரப்பாகவுள்ளது. இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது. மனைவியுடன் ஹனிமூனுக்கு வந்த இடத்தில் ஆதி பயங்கரமாக டென்ஷன் ஆகிறார் .அதற்கு காரணம், பிரம்மானந்தம்.



     




    View this post on Instagram





     

    A post shared by Colors Tamil (@colorstvtamil)






    இந்த பிரம்மானந்தம் ரோலில் நடித்து இருப்பவர்  வெள்ளித்திரை புகழ் நடிகர் டி.எஸ்.ஆர். இவர் பச்சக்கிளி சீரியலில் சில நாட்களுக்கு கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளார். இவருக்கும் ஆதிக்கும் இடையே நடக்கும் நகைச்சுவையான ட்ராக்கை ரசிகர்கள் வரும் நாட்களில் கண்டு ரசிக்கலாம். நடிகர் டி.எஸ்.ஆர் இதற்கு முன்பு விஜய் சேதுபதியுடன், யோகி பாபுவுடன் நடித்து வெள்ளித்திரையில் பிரபலமானவர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial

    அடுத்த செய்தி