Home /News /entertainment /

பச்சக்கிளி சீரியலில் என்ட்ரி கொடுக்க போகும் முக்கிய பிரபலம்! அதுவும் யாருக்கு ஜோடி தெரியுமா?

பச்சக்கிளி சீரியலில் என்ட்ரி கொடுக்க போகும் முக்கிய பிரபலம்! அதுவும் யாருக்கு ஜோடி தெரியுமா?

பச்சக்கிளி

பச்சக்கிளி

சீரியலில் புதியதாக என்ட்ரி கொடுக்கிறார் நடிகை அஞ்சலி ராவ்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிப்பரப்பாகும் 'பச்சக்கிளி தொடரில்’ மூத்த அண்ணன் மீனாட்சி சுந்தரத்துக்கு ஜோடி வந்தாச்சு.

    காலை முதல் இரவு வரை பல்வேறு வகையான சீரியல்கள் கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகி வருகின்றன. இதில் டெலிகாஸ்ட் செய்யப்படும் நெடுந்தொடர்களுக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை கொடுத்து வெற்றி பாதையில் எடுத்து செல்கின்றனர். அந்த வகையில் கலர்ஸ் தமிழில் வார நாட்களில் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் தொடர் 'பச்சக் கிளி’. காதல் அனைவரையும் ஒன்றிணைக்கிறது என்பதையும், திருமணங்கள் குடும்பத்தை சேர்கிறது என்ற ஒன்லைனில் ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலில்
    பச்சக்கிளி ரோலில் (நடிகை மோனிஷா அர்ஷக்) மற்றும் ஆதித்யாவாக (நடிகர் தீபக்) ஆகியோர் நடிக்கின்றனர்.

    ஸ்ரீநிதி என் தாலியை பார்த்து சொன்ன வார்த்தை..சர்ச்சைகளுக்கு முதன்முறையாக பதிலளித்த நட்சத்திரா!

    பச்சக்கிளியின் மூன்று அண்ணன்களான மீனாட்சி சுந்தரம் (நடிகர் ஸ்டாலின் முத்து), அழகர் (விஜய் ஆனந்த்) மற்றும் வேலு (அஸ்வின்) ஆகியோர் பாசமிகு அண்ணன்கள் ரோலில் நடிக்கின்றனர். அண்ணன்கள் மீது பச்சக்கிளி வைத்திருக்கும் மரியாதையும் பாசமும் மொத்த ஊரையும் அன்னாந்து பார்க்க வைக்கிறது. இந்நிலையில் வக்கீல் ஆதித்யாவை , பச்சக்கிளி திருமணம் செய்து கொண்டார். இவர்களின் ட்ராக் ஒருபக்கம் செல்ல, இப்போது பச்சக்கிளியின் மூத்த அண்ணன் மீனாட்சி  சுந்தரத்துக்கு ஜோடி ரெடி.



    தங்கைக்காக இத்தனை ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் இருந்த மீனாட்சிக்கு ஜோடியாக போறவர் வக்கீல் ரம்யா. இந்த ரோலில் சீரியலில் புதியதாக என்ட்ரி கொடுத்து இருக்கிறார் நடிகை அஞ்சலி ராவ். இவர் இதற்கு முன்பு பல சீரியல்களில் , வெப் தொடர்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ’ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற வெப் தொடரில் இவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களையும் பெற்று இருந்தது.



    இந்நிலையில் வக்கீல் ரம்யா ரோலில் இவர் பச்சக்கிளி தொடரில் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். ஏற்கெனவே கோயிலில் இருவரும்  சந்தித்துக் கொண்டார்கள். இனி வரும் நாட்களில் இருவரும் காதலிப்பது போல் ட்ராக் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial

    அடுத்த செய்தி