• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சீரியல் லைஃப் போலவே மாறி போன திருமணம்.. பாவம் கணேசன் சித்ரா வாழ்க்கையில் சோகம்!

சீரியல் லைஃப் போலவே மாறி போன திருமணம்.. பாவம் கணேசன் சித்ரா வாழ்க்கையில் சோகம்!

பாவம் கணேசன் சித்ரா

பாவம் கணேசன் சித்ரா

மருது படத்தில் ஸ்ரீதிவ்யாவுக்கு அசத்தலான கிராமத்து குரலில் குரல் கொடுத்தவர் இவர் தான்.

  • Share this:
    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாவம் கணேசன் சீரியலில் சித்ரா ரோலில் நடிக்கும் நடிகை விலாஷினி பர்சனல் லைஃப் பற்றி பலருக்கும் தெரியாத சோகங்கள்.

    வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரை நடிகர் நடிகைகள் பலரும் ஈஸியாக ரசிகர்களுக்கு பரீட்சையமான முகமாக மாறிவிடுகின்றனர். அதிலும் சன் டிவி, விஜய் டிவி போன்ற பிரபல சேன்களில் வரும் சீரியல் நடிகர் நடிகைகள் பற்றி கேட்கவே வேண்டாம். அவர்களை அதிகம் விரும்புவதால் தான் ரசிகர்கள் அவர்களை பற்றி தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாவம் கணேசன் சீரியலில் கணேசனின் மூத்த அக்கா சித்ராவாக நடிப்பவர் நடிகை விலாஷினி . சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு இவர் கொடுத்த பேட்டி வைரலாக, அதிலிருந்து ரசிகர்கள் இவர் குறித்து அதிகம் தேடி வருகின்றனர்.

    நடிகை விலாஷினி இசைஞானி இளையராஜவின் உறவுக்கார பெண் ஆவார். இளையராஜா இவருக்கு மாமா முறை. விலாஷினியின் திருமணத்தை நடத்தி வைத்தவரும் அவர் தான். சீரியலில் சித்ராவாக நடிக்கும் இவரின் கதாபாத்திரம் கணவருக்கு மிகவும் பயந்து பயந்து நடப்பவர். அம்மா வீட்டில் பேச வேண்டுமென்றால் கூட கணவரிடம் அனுமதி பெற வேண்டிய சூழலில் வீட்டுக்கு கஷ்டம் தரக்கூடாதுன்னு சோகங்களை மறைத்து வாழு சராசரி பெண். சீரியலில் இவருக்கு காட்டப்படும் திருமண வாழ்க்கை போல தான் நிஜத்திலும் நடந்தது. இவரின் கணவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு இவரை ஏமாற்றியதால் அவரிடம் இருந்து முறையாக விவகாரத்து பெற்று இப்போது தனியாக வாழ்ந்து வருகிறார். இதை இவரே யூடியூப் பேட்டியில் பதிவு செய்திருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தற்சயாம் விலாஷினி கெரியரில் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார். இவர் ஆர்.ஜேவாகவும் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமில்லை டப்பிங் ஆர்டிஸ்டும் கூட. மருது படத்தில் ஸ்ரீதிவ்யாவுக்கு அசத்தலான கிராமத்து குரலில் குரல் கொடுத்தவர் இவர் தான். ஒருபக்கம் ஆர்.ஜே, டப்பிங் என பிஸியாக இருந்தவருக்கு விஜய் டிவி சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டவர் தற்போது பாவம் கணேசன் சீரியலில் சித்ராவாக கலக்கி வருகிறார். கூடவே வெள்ளித்திரையில் இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் இவரை திரையில் பார்க்கலாம். மோசமான திருமண வாழ்க்கையை கடந்து தற்போது தனக்கு பிடித்த துறையில் சாதனைகளை செய்து வருகிறார் விலாஷினி.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: