• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாவம் கணேசன் ப்ரமோ... ஒரு நாளைக்கு ஆடியன்ஸூக்கு எத்தனை ஷாக் தான்யா கொடுப்பீங்க!

பாவம் கணேசன் ப்ரமோ... ஒரு நாளைக்கு ஆடியன்ஸூக்கு எத்தனை ஷாக் தான்யா கொடுப்பீங்க!

பாவம் கணேசன் சீரியல் ப்ரமோ

பாவம் கணேசன் சீரியல் ப்ரமோ

அண்ணன் தங்கை, தம்பி, அக்கா பாசம் என ஒரே சென்டிமெண்ட் பாணியில் பயணிக்க தொடங்கியது.

  • Share this:
    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாவம் கணேசன் சீரியல் ப்ரமோ இன்று ஒரே அழுகாட்சி காவியமாக வெளியாகியுள்ளது.

    பாவம் கணேசன் சீரியல் குறித்த அறிவிப்பு ப்ரமோ சில மாதங்களுக்கு முன்பு வெளியான போது, நகைச்சுவையில் பட்டையைக் கிளப்பும் நவீன் இருப்பதால் செம்ம ஜாலியான சீரியலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போக போக பாவம் கணேசன் பாசமலர் படத்திற்கே  டஃப் கொடுக்கும் அளவுக்கு அண்ணன் தங்கை, தம்பி, அக்கா பாசம் என ஒரே சென்டிமெண்ட் பாணியில் பயணிக்க தொடங்கியது. இந்த சீரியலில் ஆறுதலாக அவ்வப்போது சிரிக்க வைத்திருந்த நேத்ரனும் இப்போது கொடூர வில்லனாக மாறி மச்சானை பழி வாங்க துடித்து வருகிறார்.

    இதற்கிடையில், ஏகப்பட்ட பிளான்கள் போட்டு காதலியை கரம் பிடிக்க நினைத்த கணேசனின் கனவும் மண்ணோடு மண்ணானது. சரி, கடைசியில் தங்கை பிரியா ஆசைப்பட்டது போல் அவளுக்கு விருப்பமான கல்யாணத்தை செய்து வைத்துவிட்டோம் என்ற சந்தோஷத்தில் இருந்த கணேசனுக்கு அது சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. ஆம் பூட்டான் சுந்தரி அம்மா வழக்கம் போல் வில்ல தனத்தை காட்டிவிட்டார். அதுக்குறித்த ப்ரமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.



    கல்யாணம் முடித்த கையோடு பிரியாவையும் மாப்பிள்ளையையும் பூட்டான் சுந்தரி வீட்டுக்கு கணேசன் அழைத்து போகிறான். ஆனால் அந்தம்மா, வீடு கிடைக்கும் என்ற ஆசையில் தான் உங்க பொண்ணா கட்டிக்க சம்மதம் சொன்னேன். இப்ப அது நடக்காதுன்னு தெரிஞ்சிடுச்சி, உங்கள் பொண்ண நீங்களே வீட்டுக்கு கூடிட்டு போங்கன்னு ஷாக் கொடுக்கிறார் ( எந்த ஊர்ல இப்படி நடக்கும்... ஆடியன்ஸ் மைண்ட் வாய்ஸ்)

    அடுத்த எழரைத் தொடங்கி விட்டது என்பது போலவே கணேசன் செய்வதறியாமல் திகைத்து நிற்கிறான்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: