பாவம் கணேசன் சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை - ரசிகர்கள் வருத்தம்

பாவம் கணேசன்

குடும்ப கதைக்களம் கொண்ட இந்த சீரியலில் நவீன் முரளிதரனை போல முதன்மை கதாபாத்திரத்தில் குணவதி என்ற கேரக்டரில் நேகா கவுடா நடித்து வருகிறார்.

  • Share this:
விஜய் டிவி-யில் ரசிகர்களின் மனங்களை கவர்ந்த ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இவற்றில் சில சீரியல்கள் கடந்த ஆண்டு போடப்பட்டிருந்த கொரோனா லாக்டவுனிற்கு பிறகு ஒளிபரப்பாக துவங்கியவை. அந்த வகையில் பாவம் கணேசன் சீரியல் கடந்த சில மாதங்களாக விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகிறது. தன் சந்தோஷத்தை மறந்து குடும்பத்திற்கென்றே வாழும், உழைக்கும் இளைஞன் பற்றிய கத்தி தான் "பாவம் கணேசன்". விஜய் டிவி-யின் கலக்கப் போவது யாரு புகழ் நவீன் இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ஒளிபரப்பாக துவங்கியதில் இருந்து ஏராளமான முறை நேர மாற்றங்களை சந்தித்து விட்டது.

கொஞ்சம் கொஞ்சமாக இந்த சீரியல் ரசிகர்களை ஈர்த்து வரும் நிலையில் இதன் பிறகாவது ஒரே நேரத்தில் ஒளிபரப்ப வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுக்கும் அளவிற்கு அடிக்கடி இந்த சீரியல் டைமிங் மாற்றப்பட்டிருக்கிறது. குடும்ப கதைக்களம் கொண்ட இந்த சீரியலில் நவீன் முரளிதரனை போல முதன்மை கதாபாத்திரத்தில் குணவதி என்ற கேரக்டரில் நேகா கவுடா நடித்து வருகிறார்.

கணேசனாக நடிக்கும் நவீன் தந்தை இல்லாத தனது குடும்பத்தை தனியாக உழைத்து காப்பாற்றி வருகிறார். வாட்டர் கேன் சப்ளை, பேப்பர் போடுவது முதல் இன்சூரன்ஸ் ஏஜெண்ட் வரை கிடைக்கும் எல்லா வேலைகளையும் செய்து கொண்டு ஒரு தம்பி, 2 தங்கை மற்றும் அக்கா அடங்கிய பெரிய குடும்பத்தை காப்பாற்றுகிறார்.

Also Read : நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் டாப்ஸியின் ’ஹசீன் தில்ருபா’!

கணேசன் குடும்ப சொத்தான வீடு மீது நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் வாடகை வீட்டில் கணேசன் குடும்பம் கஷ்டப்படுகிறது. தனது வீட்டில் வசிக்கும் குணவதி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இருந்து வீட்டை மீட்பது என்ற கோணத்தை நோக்கி கணேசனின் வாழ்க்கை நகர்வதாக காட்டப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 

Also Read : விஷால் 31 படப்பிடிப்பு ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தொடக்கம்!

பாவம் கணேசன் சீரியலில் யமுனா என்ற கேரக்டரில் ஷயீமா என்பவர் நடித்து வந்த நிலையில், இவருக்கு பதிலாக காற்றின் மொழி சீரியலில் நடித்த ஷிவன்யா யமுனா கேரக்டரில் நடிக்கிறார். இடையில் கடந்த மாதம் தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக இருந்ததை அடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு போடப்பட்டு, பின்னர் 3 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 
View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)


இதை அடுத்து ஷூட்டிங் நடைபெறாத காரணத்தால் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் பழைய எபிசோட்கள் ஒளிபரப்பப்பட்டன. இந்நிலையில் நேற்று முதல் விஜய் டிவி சீரியல்களின் புத்தம் புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாகின. இந்நிலையில் பாவம் கணேசன் சீரியலின் டைமிங் மற்றும் கேரக்டர் மாற்றம் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

 
Published by:Vijay R
First published: