விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாவம் கணேசன் சீரியல் புரமோவில் ஹாப்பியான சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்நாள் வரை கோபத்தில் இருந்த சொர்ணம் கோபத்தை மறந்து விட்டு கணேசனையும் குணாவையும் ஏற்றுக் கொண்டார்.
பாவம் கணேசன் சீரியல் குறித்த அறிவிப்பு புரமோ கடந்த ஆண்டு வெளியான போது, நகைச்சுவையில் பட்டையைக் கிளப்பும் நவீன் இருப்பதால் செம்ம ஜாலியான சீரியலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போக போக பாவம் கணேசன் பாசமலர் படத்திற்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு அண்ணன் தங்கை, தம்பி, அக்கா பாசம் என ஒரே சென்டிமெண்ட் பாணியில் பயணிக்க தொடங்கியது. இந்த சீரியலில் ஆறுதலாக அவ்வப்போது சிரிக்க வைத்திருந்த நேத்ரனும் இப்போது கொடூர வில்லனாக மாறி மச்சானை பழி வாங்க துடித்து வருகிறார். சீரியல் டி.ஆர்.பியும் சறுக்க,சேனல் நிறுவனம் சீரியல் டைம்மிங்கை மாற்றியது.
கதையில் சில மாறுதல்கள் நிகழ்ந்தன. எப்போதுமே சண்டை போட்டு கொண்டிருந்த குணாவும், கணேசனும் கணவன் மனைவி ஆகினர். குணாவின் 15 வருட காதலை தெரிந்து கொண்ட, கணேசன் குணாவை கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் இந்த கல்யாணத்தில் கணேசனின் அம்மா சொர்ணம்-க்கு விருப்பமில்லை. அவர், குணாவை பற்றி இழியாக பேச, அந்த கோபத்தில் தான் குணாவுக்கு , கணேசன் தாலி கட்டினார்.
இதையும் படிங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக இப்படியொரு பொன்னான வாய்ப்பை நிராகரித்த சஞ்சீவ்!
இப்படி இருக்க, கோபத்தில் சொர்ணம், கணேசன் - குணாவை வீட்டை விட்டு துரத்தினர். இனிமேல் உங்களுக்கும் இந்த குடும்பத்திற்கும் சம்மந்தம் இல்லை என ஒதுக்கி வைத்தார். இதற்கிடையில், கணேசனின் வீட்டை அபகரிக்க, மூத்த மருமகன் நேத்ரன் பிளான் செய்தார். இனிமேல் இந்த குடும்பம் கணேசனை ஏற்றுக் கொள்ளாது என அவரின் கணக்கு இருந்தது.
ஆனால் சீரியலில் ட்விஸ்டாக, நேத்ரன் பற்றி சொர்ணமுக்கு தெரிந்து விட்டது. அதுமட்டுமில்லை கணேசனையும் - குணாவையும் மன்னித்து ஏற்றுக்கொண்டார். அதுமட்டுமில்லை, இனிமேல் இந்த வீட்டுக்கு சொந்தக்காரன் கணேசன் தான் என்றும் கூறிவிட்டார். இந்த காட்சிகள் அடங்கிய புரமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TV Serial, TV Serial Promos, Vijay tv