ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவி சீரியல் நடிகை.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவி சீரியல் நடிகை.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

பாவம் கணேசன்

பாவம் கணேசன்

கன்னட ரியாலிட்டி ஷோவான ராஜா ராணி நிகழ்ச்சியில் தனது கணவருடன் சேர்ந்து வெற்றி வாகை சூடினார்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விஜய் டிவி பாவம் கணேசன் சீரியல் நடிகை நேகா கவுடா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று இருக்கிறார். ஒரு சின்ன திருத்தம் அவர் சென்று இருப்பது பிக் பாஸ் கன்னடம் சீசன் 9 நிகழ்ச்சிக்கு.

  சின்னத்திரையில் இப்போது அடுத்த மிகப் பெரிய எதிர்பார்ப்பு பிக் பாஸ் குறித்து தான். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்கள் வெற்றிக்கரமாக முடிவடைந்த நிலையில் அடுத்து பிக் பாஸ் 6வது சீசனுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். வழக்கம் போல் இந்த முறை பிக் பாஸ் வீட்டுக்குள் யார் யார் வர போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே உள்ளது. சமூகவலைத்தளங்களில் இதுப்பற்றிய தகவல்கள், வதந்திகள் பல தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த லிஸ்டில் மகாலட்சுமி , தர்ஷா குப்தா, ரவீந்தர், ஆங்கர் ரக்‌ஷன், மாகாபா, மதுரை முத்து, என விஜய் டிவி பிரபலங்கள் பலரின் பெயரும் அடிப்படுகின்றனர்.

  மனைவியுடன் வெளிநாட்டு பயணம்.. வாவ் சொல்ல வைக்கும் பிக் பாஸ் ராஜூ!

  அதே போல் சீரியல் நடிகை அர்ச்சனா, அஸ்வின் இவர்களை தவிர  பொதுமக்களும் இதில் கலந்த கொள்ள போகிறார்கள். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாவம் கணேசன் சீரியல் நடிகை பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பதாக இணையத்தில் தகவல்கள் உலா வந்தன. கடைசியில் பார்த்தால் அவர் சென்றது பிக் பாஸ் கன்னடம் சீசனுக்கு. பிக் பாஸ் கன்னடம் சீசன் 9 கலர்ஸ் கன்னடத்தில் 6 நாட்களுக்கு முன்பு தொடங்கி விட்டது.
   
  View this post on Instagram

   

  A post shared by Neha Ramakrishna (@neharamakrishna)  இதில் போட்டியாளராக பாவம் கணேசன் சீரியல் நடிகை நேகா கவுடா கலந்து கொண்டுள்ளார். நேகா கவுடாவுக்கு தமிழ் மற்றும் கன்னடத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர் இதற்கு முன்பு சன் டிவியில் ஒளிப்பரப்பான கல்யாண பரிசு சீரியலில் நடித்துள்ளார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Neha Ramakrishna (@neharamakrishna)  கன்னட ரியாலிட்டி ஷோவான ராஜா ராணி நிகழ்ச்சியில் தனது கணவருடன் சேர்ந்து வெற்றி வாகை சூடினார்.. தற்போது பிக் பாஸ் கன்னடம் சீசன் 9க்கு சென்றுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, TV Serial, Vijay tv