விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்கள் மிகவும் புதுமையானதாக இருந்து வருகிறது. அதனால் தான் பலரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களை அதிகம் விரும்பி பார்க்கின்றனர். குறிப்பாக மக்களின் ரசனைக்கேற்ப சில மாற்றங்களையும் எல்லா தொடர்களில் கொண்டு வருகின்றனர். இது தான் இவர்களின் முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இதனாலேயே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல தொடர்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கில் டாப் இடத்தை பிடித்து வருகிறது. அதே போன்று அரைத்த மாவையே அரைக்காமல் புதுமையான கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் அறிமுகம் செய்து வருகின்றனர். இந்த விஷயங்கள் விஜய் டிவிக்கு கூடுதல் பலமாகவும் அமைகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் சிறந்த தொடர்களில் ஒன்றான 'பாவம் கணேசன்' தொடரும் புதுமையான கதைக்களத்தை கொண்டு தொடங்கியது. ஏழ்மையான மக்களின் குடும்ப கதையை அப்படியே பிரதிபலிப்பதால் இந்த சீரியலுக்கு பல ரசிகர்கள் உண்டு.
தன் சந்தோஷத்தை மறந்து குடும்பத்திற்காக மட்டுமே வாழும் இளைஞன் பற்றிய கதை தான் "பாவம் கணேசன்". விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான நவீன் தான் இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியதில் இருந்தே மக்களின் ஆதரவை பெற்றுவிட்டது. சாதாரண குடும்ப கதைக்களம் கொண்ட இந்த சீரியலில் நவீனுக்கு ஜோடியாக குணவதி என்ற கேரக்டரில் நேகா கவுடா நடித்து வருகிறார். இவர்கள் இருவரின் நடிப்பும் இளம் வயதினருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது.
இந்த தொடரில் கணேசன் கதாபத்திரத்தில் நடிக்கும் நவீன் தந்தை இல்லாத தனது குடும்பத்தை தனி ஆளாக காப்பாற்றி வருகிறார். இவருக்கு ஒரு தம்பி, 2 தங்கை மற்றும் அக்கா ஆகியோர் உடன் பிறந்தவர்களாக உள்ளனர்.
எனவே இவ்வளவு பெரிய குடும்பத்தை கணேசன் தான் தனது உழைப்பு மூலம் காப்பாற்றி வருகிறார். எல்லா தொடரை போன்றும் இதிலும் காதல் கதை உள்ளது. சிறு வயதில் இருந்தே கணேசனும் குணவதியும் ஒருவருக்கு ஒருவர் விரும்பி வருகின்றனர். ஆனால், குடும்ப சூழல் கருதி இருவரும் அதை வெளிக்காட்டி கொள்ளவில்லை.
also read : ஜீ தமிழின் புதிய சீரியலில் களமிறங்கும் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம்..
இருப்பினும் ஒரு கட்டத்தில் இருவரும் அவர்களின் காதலை வெளிக்காட்டி கொள்கிறார்கள். அதன் பிறகு பல பிரச்சனைகளுக்கு இடையே இவர்களுக்கு கல்யாணமும் நடக்கிறது. ஆனால் இந்த கல்யாணம் கணேசனின் அம்மாவான சொர்ணம்-க்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அவர் அடிக்கடி குணாவை பற்றி மோசமாக பேச, அந்த கோபத்தில் தான் கணேசன் குணாவிற்கு தாலி கட்டினார். இப்படி பல திருப்பங்களுடன் இந்த தொடர் சென்று கொண்டிருக்கிறது.
also read : எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் பாலாக்குள்ள இப்படி ஒரு கஷ்டமா!
இந்நிலையில் கணேசனின் அக்கா கதாபத்திரத்தில் நடிகை ஹாசினி நடித்து வந்தார். தற்போது இவர் சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவருக்கு பதிலாக பல சீரியல்களில் நடித்து புகழ்பெற்ற லதா ராவ் அந்த ரோலில் நடிக்க உள்ளார்.
லதா சில ஆண்டுகளாக தொடர்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் இந்த சீரியல் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்னத்திரையில் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.