நீட் தேர்வு கோச்சிங் சென்றவரின் வாழ்க்கையை மாற்றிய சின்னத்திரை.. பாவம் கணேசன் சீரியல் நடிகை ஷேரிங்க்ஸ்!

பாவம் கணேசன் சீரியல் நடிகை

பெற்றோர்கள் அவரை மருத்துவராக்க வேண்டும் என்று நினைத்திருந்தனர். ஆனால் அவருக்கோ சினிமா மீது ஆசை

 • Share this:
  பாவம் கணேசன் சீரியலில் நடித்து வரும் பிரனிகா ரசிகர்களின் இளம் கவர்ந்த சின்னத்திரை நடிகையாக வலம் வருகிறார்.

  தற்போது சின்னத்திரை சீரியல்களில் பெரும்பாலும் புதுமுகங்களில் வருகை தான் அதிகம் உள்ளது. அதிலும் குறிப்பாக விஜய் டிவி சீரியலில் நிறைய புதுமுகங்களை பார்க்கலாம். டிக் டாக் போன்ற சமூக வலைத்தளம் மூலம் பிரபலமடைந்த பலருக்கும் சீரியலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் டிக் டாக் மூலம் வாய்ப்பு கிடைத்து சின்னத்திரையில் தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்ட பிரனிகா தக்‌ஷன்யா. நீட் தேர்வுக்காக கோச்சிங் சென்றவர். அவரின் பெற்றோர்கள் அவரை மருத்துவராக்க வேண்டும் என்று நினைத்திருந்தனர். ஆனால் அவருக்கோ சினிமா மீது ஆசை அதிகம்.

  அதனால் திருச்சியில் இருந்து சென்னை கிளம்பி வந்தவர் நண்பர்களுடன் சேர்ந்து டிக் டாக் செய்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வந்தார். அதன் மூலம் தான் அவருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. சோஷியl மீடியாவில் டிக்டாக் பிரனிகா என்றால் படு ஃபேமஸ். அடுத்தடுத்து ஏராளமான ஷார்ட் பிலிம்களில் நடித்தார். யூடியூப்பில் இவரின் வீடியோக்கள் லைக்ஸ்களை அள்ளியது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  குறும்படங்களில் இவரின் நடிப்பை பார்த்த விஜய் டிவி இயக்குனர், சீரியல் ஆடிஷனுக்கு அழைத்திருந்தார். ஆடிஷனில் சூப்பராக நடித்து பாவம் கணேசன் சீரியலில் ஹீரோயின் தங்கையாக நடிக்க ஒப்பந்தமானார். தனக்கு கொடுத்த ரோலை சரியாக செய்தவர் சீக்கிரமாகவே ரீச் ஆனார். அதனைத்தொடர்ந்து விஜய் டிவியில் ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ என்ற ரியாலிட்டி ஷோவிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பாவம் கணேசனில் ஸ்ரீமதி ரோலில் பிரணிகாவின் நடிப்பு பாராட்டுக்களை பெற்றுள்ளது.   
  Instagram இல் இந்த இடுகையை காட்டு

   

  PRANIKA DHAKSHU OFFICIAL இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@pranikadhakshu)


  இந்த இளம் வயதில் தானகவே வாய்ப்பு தேடி அலைந்து தனது திறமை மூலம் இன்று சின்னத்திரை பிரபலமாகி இருக்கும் பிரனிகா வெள்ளித்திரையிலும் கால் பதித்துள்ளார். எங்கள் பாட்டன் சொத்து படத்தில் இரண்டாவது கதாநாயகியாகவும், நடிகர் விஷ்ணு பிரியன் நாயகனாக நடிக்கும் வடசேரி படத்திலும் நடித்துள்ளார். சினிமா மீது ஆர்வம் அதிகம் என்றாலும் படிப்பிலும் அவரின் கவனம் குறையவில்லை. மீடியா படிப்பு தேர்ந்தெடுத்து படிக்கவுள்ளார் பிரனிகா. ஹோம்லி லுக் இவருக்கு சூப்பராக இருப்பதால் சோஷியல் மீடியா ட்ரெண்டான, பிரைடல் லுக் ஃபோட்டோ ஷூட்டில் அதிகம் ஈடுப்பட்டு வருகிறார். இளம் வயதிலே பிசியான சின்னத்திரை நடிகையாக வலம் வரும் பிரனிகாவின் இன்ஸ் பக்கத்தின் ஃபாலோவர்ஸ் 8 லட்டங்களை தாண்டிவிட்டது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: