Home /News /entertainment /

இப்படியொரு அதிர்ச்சியை எப்படி தாங்கி கொள்வார் கணேசன்! கவலையில் குணா

இப்படியொரு அதிர்ச்சியை எப்படி தாங்கி கொள்வார் கணேசன்! கவலையில் குணா

பாவம் கணேசன்

பாவம் கணேசன்

தங்கை நித்யா வாழ்க்கையில் கணேசன் எடுக்க போகும் முடிவு என்ன?

    பாவம் கணேசன் சீரியலில் குணாவின் தம்பி பிரவீன், நித்யாவுக்கு கோயிலில் வைத்து தாலி கட்டி விடுகிறார். இதுக் குறித்த பரபரப்பான புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்கள் மிகவும் புதுமையானதாக இருந்து வருகிறது. இதனாலேயே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல தொடர்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கில் டாப் இடத்தை பிடித்து விடுகிறது. அதே போன்று அரைத்த மாவையே அரைக்காமல் புதுமையான கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் அறிமுகம் செய்து வருகின்றனர்.அதனால் தான் பலரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களை அதிகம் விரும்பி பார்க்கின்றனர். குறிப்பாக மக்களின் ரசனைக்கேற்ப சில மாற்றங்களையும் எல்லா தொடர்களிலும்  கொண்டு வருகின்றனர். இந்த வரிசையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் 'பாவம் கணேசன்' சீரியலை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

    ரோபோ ஷங்கர் கையில் கொடுக்கப்பட்ட பெரிய பொறுப்பு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

    ஏழ்மையான மக்களின் குடும்ப கதையை அப்படியே பிரதிபலிப்பதால் இந்த சீரியலுக்கு பல ரசிகர்கள் உண்டு.தன் சந்தோஷத்தை மறந்து குடும்பத்திற்காக மட்டுமே வாழும் இளைஞன் பற்றிய கதை தான் "பாவம் கணேசன்".இப்போது சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. போன வாரம், கணேசனின் தங்கை நித்யா தனது காதலன் லட்சுமியுடன் வீட்டை விட்டு சென்று விட்டார். குணாவும் கணேசனும் எல்லா இடத்திலும் தேடி அலைந்தனர். கடைசியில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஃபோன் வந்தது.

    பிக் பாஸ் ஓவியாவின் திடீர் முடிவு.. ரசிகர்கள் செம்ம ஹேப்பி!

    பதறி ஓடி போன கணேசனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. நித்யாவை தப்பான வழக்கில் போலீசார் ஹோட்டல் ரூமில் இருந்து கைது செய்து இருந்தனர். இதை கேட்டு கணேசன் உடைந்து போனார். பின்பு அந்த மகளிர் போலீஸ் நித்யா மீது எந்த தப்பும் இல்லை என அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்தனர். ஆனால் இந்த விஷயம் அக்கம் பக்கத்தினருக்கு தெரிந்து விட்டது. குணாவின் தம்பி பிரவீனுக்கும் இந்த விஷயம் தெரிய வருகிறது.



    பிரவீனுக்கு ஏற்கெனவே நித்யா மீது காதல். இந்நிலையில் நண்பர்கள் நித்யாவை பற்றி தப்பு தப்பாக பேச, குடித்து விட்டு பிரவீன் நேராக நித்யாவை பார்க்க செல்கிறார். எல்லோரும் கோயிலுக்கு சென்று இருக்கும் விஷயம் பிரவீனுக்கு தெரிய வர அங்கே போய் நித்யாவுக்கு தெரியாமல் அவர் கழுத்தில் தாலி கட்டி விடுகிறார். குடி போதையில் பிரவீன் இந்த தவறை செய்ய மொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. அடுத்து நித்யா வாழ்க்கை என்ன ஆகும்?  தங்கை வாழ்க்கையில் கணேசன் எடுக்க போகும் முடிவு என்ன? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Television, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி