வஞ்சகமும் துரோகமும் நிறைந்த காதல் கதையான பாதி காதல் பாதி துரோகம் வெப்சீரிஸில் கவனிக்க வேண்டிய ஐந்து விஷயங்கள். ஆம்னா ஷெரீப், பிரதிபா ரந்தா மற்றும் கௌரவ் அரோரா ஆகியோர் நடிப்பில் இந்தியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற 9 எபிசோடுகள் கொண்ட வெப் சீரிஸான "ஆதா இஷ்க்" வெப்சிரிஸை தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தமிழில் மொழி பெயர்த்து பாதி காதல் பாதி துரோகம் என்ற பெயரில் ஜனவரி 25 முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பி வருகிறது. தாயும் அவரது மகளும் ஒரே நபரைக் காதலிக்கும் ஒரு புதிரான காதல் கதைதளத்தை கொண்ட இந்த சிக்கலான காதல் நாடகத்தில், பல சுவாரசியமான நிகழ்வுகள் உள்ளன. ஜனவரி 25 முதல் இரவு 9 மணிக்கு உங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பொழுதுபோக்குக்கு மட்டுமின்றி அடுத்தடுத்து நடக்கும் பல சுவாரஸ்யமான திருப்பங்கள் பார்வையாளர்களை கண்டிப்பாக இருக்கையின் துணியில் கொண்டு செல்லும்.
பாதி காதல் பாதி துரோகம் வெப்-சீரிஸ், தாய் மற்றும் மகளின் வாழ்க்கையில் நடைபெறும் இருவேறு பக்கங்களை நேர்த்தியாக காட்டி பார்வையாளர்களை இருக்கையின் நுணிக்கு ஈர்க்கும் வகையில் மெய்மறக்க செய்யும் அற்புதமான எழுத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
தாயும் மகளும் ஒரே ஆணுடன் எப்படி காதலிக்கத் தூண்டப்படுகிறார்கள் என்பது வெவ்வேறு வயதினரால் காதலிக்கும்போது காதல் எவ்வாறு உணரப்படுகிறது என்பதற்கான சில குறிப்பிடத்தக்க நுணுக்கங்களைக் கொண்டுவருகிறது. அதோடு கதாநாயகர்களின் தத்ரூபமான நடிப்பு மர்மமும் அடுத்தடுத்த திருப்பங்களையும் நேர்த்தியாக வெளிகாட்டி பார்வையாளர்களை இந்த தொடருக்குள்ளே அழைத்து செல்கிறது. தாயும் மகளும் ஒருவரையொருவர் பற்றிய விஷயங்களைப் அறிந்துகொள்ளும் போது, கதை கிளைமேக்ஸின் ஒரு சுவாரஸ்யமான புள்ளிக்கு வருகிறது. பல ஆச்சர்யங்களை வெளிக்கொண்டு வரும் வகையில் அற்புதமாக அமைந்துள்ளது இந்த தொடரின் கிளைமேக்ஸ்.
அழகான காதல் மற்றும் பல திடுக்கிடும் மர்மங்கள் அடங்கிய இந்த தொடர் நெருக்கமான உறவுகள் மற்றும் துரோகம் பற்றிய புதிரான கதையை கண்டு பார்வையாளர்கள் நிச்சயமாக மகிழ்வார்கள்.
வயகாம் 18 இன் தமிழ் சேனலான கலர் தமிழில் 25 ஜனவரி, 2023 இரவு 9:00 மணி முதல் இந்த வெப் சீரிஸ்கள் ஒளிபரப்பாகிறது. வெப்-சீரிஸ் நிச்சயமாக பார்வையாளர்களுக்கு அடுத்த என்ன நிகழப் போகிறது என்ற உணர்வைத் தரும் ஒரு சுவாரஸ்யமான மற்றும் ஈர்க்கக்கூடிய தொகுப்பை வழங்கப் போகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.