ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸ் அல்டிமேட்டை தொகுத்து வழங்கும் சிம்பு... வைல்ட் கார்டு எண்ட்ரி இந்த நடிகையா?

பிக் பாஸ் அல்டிமேட்டை தொகுத்து வழங்கும் சிம்பு... வைல்ட் கார்டு எண்ட்ரி இந்த நடிகையா?

சிம்பு

சிம்பு

வைல்டு கார்ட் என்ட்ரியாக ஒரு போட்டியாளர் உள்ளே நுழைய போவதாக கூறப்படுகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

டிவி ரசிகர்களை கவரும் வகையில் தமிழ் டிவி சேனல்களில் எண்ணற்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. சீரியல்கள் துவங்கி ரியாலிட்டி ஷோக்கள் வரை வித்தியாசமான கான்செப்ட்டில் வித விதமான நிகழ்ச்சிகள் மூலம் முன்னணியில் இருக்கும் பிரபல சேனல்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. ரசிகர்கள் டிவி சேனல்களை பார்த்து மகிழ சீரியல்கள் காரணமாக இருந்தாலும், ரியாலிட்டி ஷோக்களின் பங்கும் சீரியல்களுக்கு சற்றும் குறைந்தது இல்லை. குறிப்பாக கலகலப்பான ரியாலிட்டி ஷோக்களுக்கு என்றே பெயர் போனது ஸ்டார் விஜய் டிவி.

ஒரு பக்கம் சூப்பர் ஹிட் சீரியல்கள் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றிருந்தாலும் மறுபக்கம் அவர்களை ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பெரிதும் மகிழ்வித்து வருகிறது. விஜய் டிவி-யின் வரலாற்றில் மட்டுமல்ல தமிழ் சின்னத்திரை வரலாற்றிலேயே மிக அதிக ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டு வரும் ரியாலிட்டி ஷோவாக இருந்து வருகிறது பிக்பாஸ். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க கடந்த 2017-ல் துவங்கிய பிக்பாஸ், தற்போது வரை வெற்றிகரமாக 5 சீசன்களை நிறைவு செய்து உள்ளது.

கொரோனா காலத்தில் திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதால் OTT பிளாட்பார்ம்களில் வெளியானது. இப்போதும் கூட பல படங்கள் வெப் சீரிஸாக எடுக்கப்பட்டு OTT-களில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து மக்களிடையே இதுவரை இல்லாத அளவு OTT பயன்பாடு அதிகரித்து உள்ளது. சின்னத்திரையில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த பிக்பாஸ் ஷோ தற்போது OTT வெர்ஷனில் பிக்பாஸ் அல்ட்டிமேட் என்ற பெயரில் டெலிகாஸ்ட்டாகி வருகிறது. இந்த புதிய பிக்பாஸில் ஏற்கனவே கடந்த 5 சீசன்களில் பங்கேற்ற முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

Valimai Review: அஜித்தின் வலிமை திரைப்படம் எப்படி இருக்கிறது?

வனிதா விஜயகுமார், நிரூப், ஜூலி, அபிராமி வெங்கடாசலம், தாமரை செல்வி, நடிகர் தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், நடிகை சுஜா வருணி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷாரிக், அபிநய், சுருதி, கவிஞர் சினேகன் உள்ளிட்ட 14 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் அல்ட்டிமேட் துவங்கிய நிலையில் தற்போது வரை சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக் மற்றும் அபிநய் ஆகியோர் எலிமினேட் ஆகி இருக்கிறார்கள். திரைப்பட வேலைகள் நிறைய இருப்பதாக கூறி நடிகர் கமல் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் திடீரென்று தானாகவே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ஓவியா

வலிமை முதல் காட்சி தாமதம் - நாட்டு வெடி வெடிக்க முயற்சி செய்த ரசிகர்கள்

இதனிடையே ஷோவை தொகுத்து வழங்கும் பொறுப்பை கமலுக்கு பிறகு நடிகர் சிம்பு ஏற்கிறார். இந்நிலையில், வைல்டு கார்ட் என்ட்ரியாக ஒரு போட்டியாளர் உள்ளே நுழைய போவதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் சீசன் 1-ல் பங்கேற்ற பிரபல நடிகை ஓவியா முதல் வைல்டு கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் அல்ட்டிமேட்டிற்குள் நுழைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த தகவல் உண்மையா என்பது வரும் ஞாயிறன்று தான் தெரிய வரும்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bigg Boss Tamil