’ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ சீரியல் நடிகர் புவியரசு திருமணம்!

புவியரசு - மோகனப்ரியா திருமணம்

’பாதோ பஹு’ என்ற தொடரின் தமிழ் ரீமேக்காக ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ ஒளிபரப்பாகி வருகிறது.

 • Share this:
  ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் புவியரசுக்கு திருமணம் நடந்துள்ளது.

  ஜீ தமிழ் தொலைகாட்சியில் கடந்த 2018-ம் ஆண்டு முதல், திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’. ஒரு குண்டான பெண்ணின் குடும்ப பின்னணியைக் கொண்ட இந்தத் தொடரில் அஸ்வினி மற்றும் புவியரசு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தியில் ஒளிபரப்பான ’பாதோ பஹு’ என்ற தொடரின் தமிழ் ரீமேக்காக ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ ஒளிபரப்பாகி வருகிறது.

  இந்நிலையில் தற்போது சீரியலின் நாயகன் புவியரசுக்கும், மோகனப்ரியா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்தத் திருமணத்தில் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ சீரியலின் ஹீரோயின் அஸ்வினி உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டு, மணமக்களை வாழ்த்தியுள்ளனர். அந்தப் படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வலம் வருகின்றன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: