• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • முதல் நாள் விவாகரத்து.. அடுத்த நாள் அம்மா.. அழு மூஞ்சி குமாரான அபிஷேக்!

முதல் நாள் விவாகரத்து.. அடுத்த நாள் அம்மா.. அழு மூஞ்சி குமாரான அபிஷேக்!

பிக் பாஸ் அபிஷேக்

பிக் பாஸ் அபிஷேக்

Bigg Boss Tamil 5 - Day 3 Review : போட்டியாளர்கள் நோட் பண்ணுங்க பையன் எப்படி கண்டெண்ட் தர்றான் பாருங்க

 • Share this:
  பிக் பாஸ் 5ல் 3 ஆவது நாள் மொத்த வீட்டிலும் சோக கீதங்கள் ஒலித்து கொண்டிருந்தன. அதிலும் யூடியூபர் அபிஷேக் ராஜா, டாஸ்க் தொடங்குவதற்கு முன்பே அழுது தீர்த்துவிட்டார்.

  மூன்றாவது நாள் ’நாங்க வேற மாதிரி’ சாங் உடன் தொடங்கியது. புது ஸ்டைல் நடனம் பிரியங்காவால் வீட்டுக்கு அறிமுகமானது. நகராமல், உடம்பை அசைக்காமல், ஒரே இடத்தில் இருந்து கொண்டே மூஞ்சிலேயே நடனம் ஆடினார். பிக் பாஸ் வீட்டில் எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஐடியாவுடன் பிரியங்கா வந்திருக்காரு போல, ”நானே சமைக்கறதால சாப்பிட பிடிக்கல’ என புலம்பல். ஆனா பாத்ரூம் போகும் போகும் போது கூட ஹவுஸ்மேட்ஸ் கிட்ட சாப்பாடு பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு போறாங்க. கிடைக்குற கேப்பில் எல்லாம் கடா வெட்ட நினைக்கும் அபி அவ்வப்போது ஜோக் என்ற பேரில் பிரியங்காவை கலாய்க்கும் இடங்கள் பார்க்கவும் சகிக்கல. கேட்டவும் சகிக்கல. டாஸ்க் எதுவும் தொடங்காததால் ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் ஓடிப்புடிச்சி விளையாடி பொழுதை கழித்தனர்.

  நோட் பண்ண பிக் பாஸ் உடனே, ‘சிபி... கன்ஃபெஷன் ரூமூக்கு வாங்க” என்று அழைத்தார். இந்த முறை கன்ஃபெஷன் ரூம் சுமார் தான். அந்த கம்பீரம் மிஸ். வெள்ளை மற்றும் நீலம் கலந்த காமினேஷனில் சற்று வித்யாசமாக இருந்தது. சிபிக்கும் அப்படித்தான் இருந்தது போல் ஒன்னுக்கு இரண்டும் முறை கன்ஃபெஷன் ரூமை சுற்றி சுற்றி நோட்டம் விட்டார். ‘’ஒரு கத சொல்லட்டுமா?” லக்ஷுரி பட்ஜெட் டாஸ்க்கை கொடுத்தார் பிக் பாஸ். ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்கையில் நடந்த கதை பற்றி சொல்ல வேண்டும். அதாங்க ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களை அழ வைக்கும் அழுகாச்சி டாஸ்க். இந்த போட்டி குறித்த விவரங்களை லிவ்விங் ஏரியாவில் படித்து காட்டி விளக்கினார் சிபி. ஆக்டிவிட்டி ஏரியாவுக்கு போட்டியாளர்கள் வந்தவுடன் பிள்ளையார் சுழி போட்டார் இசைவாணி. புரமோவில் பார்த்த மாதிரி தான் வறுமையை வென்று ஜெயித்த கதையை அழதப்படியே சொன்னார். கடைசியில் அந்த கனா சாங் செம்ம மாஸ். இந்த கதைக்கு டிஸ் லைக்ஸ், லைக்ஸ், ஹார்ட் எல்லாமே கொடுக்கலாம் என ஏற்கெனவே கூறப்பட்டிருந்தது, அதன்படி எல்லோருமே லைக்ஸ் கொடுக்க அழுத இசைவாணி முகத்தில் சிரிப்பு. அதிலும் நம்ம ராஜூ பாய்க்கு ஒரு வருத்தம் அதை இசைவாணியிடம் தனியாக தெரியப்படுத்தினார்.

  இப்ப தான் நம்ம அபி ஆட்டம் ஆரம்பமானது. மூஞ்சிலேயே ஜோசியம் சொல்வேன் என்று அபிஷேக் பண்ண அட்ராசிட்டி எல்லாமே வேற லெவல். சிபி, வருண், அபிநய், நிரூப் என அபி ஒவ்வொருவர் பற்றியும் தான் கணித்ததை கூறினார். ஆனால் யாரு முகத்திலும் பெரியதாக ரியாக்‌ஷனே இல்லை. அதையும் பிரியங்கா வந்து கலைத்துவிட்டு போக, அடுத்து என்ன பண்ணலாம் என யோசித்த அபி, ஆக்டிவிட்டி ஏரியாவில் நடத்த வேண்டிய டாஸ்கை வெளியே கார்டனில் அரங்கேற்றினார். அம்மா பற்றி அபி சொன்னது எல்லாமே ஓகே தான். தாய் பாசம் போற்றப்பட வேண்டிய ஒன்று. ஆனா எதுக்கு இவ்வளவு அழுகை என்பது தான் புரியவில்லை. அதிலும் கேமரா ஃபோக்கஸ் செய்வது தெரிந்தது அபியின் முகத்தில் அப்படி ஒரு மாற்றம். (மற்ற போட்டியாளர்கள் நோட் பண்ணுங்க பையன் எப்படி கண்டெண்ட் தர்றான் பாருங்க)

  also read.. ராஜு தவிர கன்டெண்ட் தர யாரும் தயாரா இல்லை.. இவங்கள வச்சி 100 நாள் முடியுமா பாஸ்?

  அடுத்தது சின்ன பொண்ணு கதை சொன்னார். அவர் கதை நல்லா இருக்கு, ஆனா சொன்ன விதம் நல்லா இல்லை என்று ராஜூ டிஸ்லைக் கொடுத்துவிட்டார். அதற்கான காரணத்தை ஓப்பனாக சொல்லி விட்டார். பின்பு இதுக் குறித்து ராஜூ, சின்ன பொண்ணு வெளியே கார்டனிலும் தனியாக டிஸ்கஸ் செய்தனர். தாமரை செல்வி வழிநடத்த மினி கும்மியடி கச்சேரியும் நடந்தது. இந்த பக்கம் பவானி ரெட்டி, மிகப் பெரிய சந்தேகத்தை தீர்த்து கொண்டிருந்தார். இமான் அண்ணாச்சி பேரு எப்படி வந்தது? யாரு நீங்க? உங்க பேர்ல வேலு வருது அப்ப நீங்க கிறிஸ்டின் சொல்றீங்க? சின்ன கவுண்டர் செந்தில் ரேஜிக்கு பவானி கேட்ட கேள்விக்கு நாம டிவிய ஆஃப் பண்றதுக்குள்ள பிக் பாஸே லைட் ஆஃப் பண்ணிட்டாரு.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: