சன் டிவியில் ஒளிபரப்பான ‘காமெடி டைம்’ இளமை புதுமை நிகழ்ச்சிகளின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமாகி லைம் லைட்டுக்கு வந்தவர் சின்னத்திரை பிரபலமான அர்ச்சனா எனும் BiggBoss VJ Archana. 90ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த ஆங்கராக விளங்கிய அர்ச்சனா சில ஆண்டுகளுக்கு பின் குடும்ப வாழ்க்கையை கவனிப்பதற்காக சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டார். தற்போது மீண்டும் சின்னத்திரையில் கலக்கி வருகிறார். ஜீ டிவியிலும், விஜய் தொலைக்காட்சியிலும் பல ஷோக்களில் கலந்து கொண்டாலும் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டதன் மூலம் தமிழகம் முழுவதும் நட்சத்திரமாக மாறினார்.
அர்ச்சனா சமீபத்தில் தான் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிலையில் மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் இரண்டு நாட்களுக்கு முன்னர் அர்ச்சனாவுக்கு திடீரென அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக அவரே இன்ஸ்டாவில் செய்தி வெளியிட்டார்.
மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்துள்ள அர்ச்சனா, அதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளார். அதில், ஹலோ எனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் குடும்பத்தினர்கள், நீங்கள் அனைவரும் நலமாக இருப்பதாக நம்புகிறேன். எப்போதும் இதயத்திலிருந்து இயங்கும் ஒரு பெண் நான். அதனால் என் மூளை கோபமடைந்து என் இதயத்தை விட அது வலிமையானது என்று எனக்குக் காட்ட விரும்பியுள்ளது. தற்போது அது ஒரு சிறிய பிரச்சினையைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. அது என் மண்டை ஓட்டை லேசாக பாதித்துள்ளது. அதில் இருக்கும் ஒரு சிறு துளையை நான் அடைக்க வேண்டியுள்ளது.
Also Read: ₹96,000 விலை கொண்ட ஏசியை வெறும் ₹5,800க்கு விற்ற அமேசான்... ஏமாந்து போன வாடிக்கையாளர்கள்!
இன்று எனக்கு ‘செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவு’க்கான அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ததில் எனக்கு மூளை இருப்பது உறுதி செய்யப்பட்டதாக வேடிக்கையாக கூறியுள்ள அர்ச்சனா, இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது, அதன் பிறகு ஒரு வாரம் கழித்து வீடு திரும்புவேன். இதன் காரணமாக பலருடைய போன் அழைப்புகளை என்னால் எடுக்க முடியாமல் போகலாம். ஆனால் அதே நேரத்தில் எனது மகள் சாரா எனது உடல் நலம் குறித்த அப்டேட்டை தெரிவிப்பார் என்பதை உறுதி கூறுகிறேன்.
View this post on Instagram
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அர்ச்சனாவின் நிலை குறித்து அவருடைய சகோதரி அனிதாவும், 14 வயது மகள் சாராவும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
Also Read: பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து எல்.முருகனை நீக்கியது அவருக்கு செய்த அவமதிப்பு - திருமாவளவன் கருத்து!
அர்ச்சனாவின் மகளான சாரா வெளியிட்டிருக்கும் சமீபத்திய அப்டேட்டில், தனது தாயாருக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இருந்ததாகவும், அவர் இன்னமும் மயக்க நிலையிலேயே இருந்து வருவதாகவும், தனது தாயார் அர்ச்சனா விரைவில் சுயநினைவை பெறுவார் எனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
மூளை அறுவை கிசிக்கைக்கு பின்னர் ஒருவாரத்திற்கு மருத்துவமனையில் கழிக்க வேண்டும், அதன் பின்னர் தான் வீட்டுக்கு திரும்புவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அர்ச்சனா நிலை குறித்து அவரது மகள் வெளியிட்டிருக்கும் தகவலை பார்த்த சினி பிரபலங்கள் சந்தோஷமடைந்துள்ளனர்.
அர்ச்சனாவும் அவரது மகள் சாராவும், சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் ஒரு கவுரவ வேடத்தில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.