Home /News /entertainment /

பிரபல சீரியல் நடிகருக்கு ஒரே நேரத்தில் நடந்த சோகம்! ரசிகர்களும் ரொம்ப மிஸ் பண்ணுவாங்க!

பிரபல சீரியல் நடிகருக்கு ஒரே நேரத்தில் நடந்த சோகம்! ரசிகர்களும் ரொம்ப மிஸ் பண்ணுவாங்க!

விஷ்ணு

விஷ்ணு

அமுல் பேபி - ரவுடி பேபி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சீரியல் நடிகர் விஷ்ணு நடிக்கும் சத்யா 2 மற்றும் இது சொல்ல மறந்த கதை என 2 சீரியல்களும் ஒரே நேரத்தில் முடிவடைகின்றன.இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

    ஆபீஸ் சீரியல் மூலம் அறிமுகம் ஆன விஷ்ணு சின்னத்திரை ரசிகர்களுக்கு ஃபேவரெட் ஹீரோவாக வலம் வருகிறார். குறிப்பாக இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம். விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழ் பக்கம் சென்றவர் சத்யா சீரியல் மூலம் ஹீரோவானர். இவருக்கு சத்யா சீரியல் மூலம் அமுல் பேபி என்ற செல்ல பெயரும் கிடைத்தது. சத்யா சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் ஆயிஷா - விஷ்ணு ஜோடிக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் கூட்டம் உருவானது.

    பணத்திற்காக ரவீந்தரை திருமணம் செய்தேனா.. என் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் கொடுத்த மகாலட்சுமி!

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்யா சீரியல் முடிவடைந்துவிட்ட நிலையில், தற்போது அந்த சீரியலின் சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசன் போலவே 2-வது சீசனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் திடீரென்று நடுவில் சீரியல் டி.ஆர்.பியில் அடி வாங்கியது. தற்போது கதைப்படி ரவுடி பேபி கர்ப்பமாக இருக்கிறார்.இந்நிலையில் சத்யா 2 சீரியல் கூடிய விரைவில் முடிவுக்கு வருவதாக இணையத்தில் தகவல்கள் உலா வருகின்றன.



    இதனால் அமுல் பேபி - ரவுடி பேபி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.இது ஒருபுறம் இருக்க விஷ்ணு கலர்ஸ் தமிழில் நடித்து வரும் இது சொல்ல மறந்த கதை சீரியலும் க்ளைமேக்ஸை நெருங்கி விட்டது. விஷ்ணு நடிக்கும் 2 சீரியல்களும் ஒரே நேரத்தில் முடிவுக்கு வருவது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    அதே நேரம் விஷ்ணு பற்றி மற்றொரு தகவலும் காட்டுத்தீ போல் பரவ தொடங்கியுள்ளன. அதாவது பிக் பாஸ் சீசன் 6ல் விஷ்ணு போட்டியாளராக களம் இறங்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Zee tamil

    அடுத்த செய்தி