ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Paleo Diet: சீரியல் நடிகரின் மனைவி உயிரை பறித்த பேலியோ டயட்... ஊட்டச்சத்து நிபுணர் சொல்வது இதுதான்!

Paleo Diet: சீரியல் நடிகரின் மனைவி உயிரை பறித்த பேலியோ டயட்... ஊட்டச்சத்து நிபுணர் சொல்வது இதுதான்!

மனைவி பிரியாவுடன் சீரியல் நடிகர் பரத் கல்யாண்

மனைவி பிரியாவுடன் சீரியல் நடிகர் பரத் கல்யாண்

மற்ற உணவுமுறைகளை விட பேலியோவில் 2 மினிட்ஸ் மேகி மாதிரி சட்டென உடல் எடை குறைகிறதென்று ஆர்வம் காட்டுகிறார்கள் சிலர். 

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சீரியல் நடிகர் பரத் கல்யாணின் மனைவி பிரியா, நேற்று மரணமடைந்தது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பேலியோ டயட்டில் இருந்த பிரியாவுக்கு நீரிழிவு அதிகமாகியது. இதையடுத்து சில நாட்கள் கோமாவில் இருந்து, சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். 

இன்றைய வேகமான காலகட்டத்தில் நேரம் செலவிட்டு உடற்பயிற்சி செய்ய முடியாத பலர், பேலியோ டயட், லோ கார்ப் டயட், கீட்டோ டயட், வீகன் டயட் என உணவு முறைகளை பின்பற்றி எடையைக் குறைக்க விரும்புகிறார்கள். ஆனால் பல நேரங்களில் அதுவே அவர்களுக்கு எமனாய் ஆகி விடுகிறது. அப்படி என்றால் எப்படித்தான் எடையைக் குறைப்பது என்ற கேள்வி உங்களுக்கு நிச்சயம் எழும். தவிர, பேலியோ டயட்டை இந்திய மக்கள் பின்பற்றலாமா என்ற கேள்வியும் எங்களுக்கு எழுந்தது. இதனை ஊட்டச்சத்து நிபுணர் சாதனா ராஜ்குமாரிடம் கேட்டோம்.

''பேலியோ எனப்படும் குகைமனிதன் டயட் (Caveman diet) இளைய தலைமுறையினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்போது நாம் யாரும் குகையில் இல்லை. வீட்டில் வாழ்கிறோம். குகைமனிதன் இந்த மாதியான உணவுப்பழக்கத்தை சராசரியாக 10,000 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டிருந்தான். வேட்டையாடிய விலங்குகள் மாமிசத்தை சாப்பிட்டான், சில வேர்களை பிடுங்கி உண்டான். என்ன பழம் விளைந்திருக்கிறதோ அதை பறித்து சாப்பிட்டான். அவன் நம்மைப் போல் தினமும் 3 வேளை சாப்பிடவில்லை. எப்போதெல்லாம் பசிக்கிறதோ, எப்போது வேட்டைக்கு செல்கிறானோ அப்போது மட்டும் தான் சாப்பிட்டான்.

இப்போது நம் உடல் குகைமனிதனைப் போல இல்லை. எல்லாமே மாறிவிட்டது. இன்றைய தலைமுறைக்கு புரியும்படி சொல்லவேண்டும் எனில், நம் உடலின் வெர்ஷன் அப்டேட் ஆகிவிட்டது. அவனுடைய ஜீரண மண்டலம் வேறு, நம்முடைய ஜீரண மண்டலம் வேறு. அவன் வேட்டையாடிய உணவுகளை தான் சாப்பிட்டான். நம்மைப் போல வீட்டில் உட்கார்ந்து ஆர்டர் பண்ணி சாப்பிடவில்லை. குகைமனிதனின் வாழ்நாள் காலம் மிகக் குறைவு. அதிகபட்சமாக 25 வயதோடு அவன் வாழ்க்கை முடிந்துவிடும். இப்போது இருக்கும் பலருக்கு 30 வயதுக்கு மேல் தான் வாழ்க்கை தொடங்குகிறது. இன்றைய நிலவரப்படி மனிதனின் சராசரி ஆயுட்காலம் 69 ஆண்டுகள். அதனால் நாம் கற்காலத்தில் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் மனைவி உயிரை பறித்த பேலியோ டயட்

ஒவ்வொரு ஒருமணி நேரத்துக்கும் நமக்கு 30 கலோரி தேவை. அது கார்போ ஹைட்ரேட்டில் இருந்து தான் வரும். என்னுடைய அனுபவத்தில் முன்பு என்னிடம் ஆலோசனை பெற வருபவர்கள், அரிசி சோறு 4-5 கப் சாப்பிடுவதாக சொல்வார்கள். ஆனால் இப்போது யாரும் அப்படியில்லை. கடும் உடல் உழைப்பாளியாக இருக்கட்டும், ஒயிட் காலர் வேலைகளில் இருப்பவர்களாகட்டும் எல்லாருமே இப்போது கார்போ ஹைட்ரேட்டை குறைந்த அளவு தான் எடுத்துக் கொள்கிறார்கள். எல்லாரும் ஏசி-யுடன் வாழ பழகிவிட்டதால், அந்த அளவுக்கு எனெர்ஜி தேவைப்படுவதில்லை.

இந்திய உணவு வழிகாட்டுதல்களைப் பொறுத்தவரை ஹை-கார்போஹைட்ரேட், மாட்ரேட் புரோட்டீன், லோ ஃபேட் டயட் தான் நம்முடைய உணவுமுறை. அதாவது நமது உணவில் 60-70% மாவுச்சத்து, 10-15% புரதம், இறுதியாக கொழுப்பு. இவை தான் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளின் அளவீடுகள். இதை உடனடியாக ஹை-ஃபேட் டயட்டாக மாற்ற முடியாது.

பேலியோ டயட்டில் அதிக மாமிசம் சேர்த்துக் கொள்கிறார்கள். பச்சையான மாமிசத்திற்கும், வேகவைத்ததற்கும் நிறைய வேற்றுமைகள் உள்ளன. அதில் சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகமாக இருக்கும். இந்த வகை கொழுப்பு ஒருநாளைக்கு 15 கிராம் தான் சாப்பிட முடியும்.

Saturated fats, Monounsaturated fats, Polyunsaturated fats என மூன்று வகை கொழுப்புகள் உள்ளன. இவை மூன்றுமே காம்பினேஷனாக தான் சாப்பிட வேண்டும். குறிப்பாக இதில் சாச்சுரேட்டட் கொழுப்பு நம் உடலுக்கு கம்மியான அளவு தான் தேவை. ஆனால் பேலியோ டயட்டில் ஃபேட்டை அதிகரிக்கிறார்கள். கல்லீரல் தான் கொழுப்பை புராசஸ் பண்ணும். நீங்கள் அளவுக்கு அதிகமான கொழுப்பை சாப்பிடும் போது கல்லீரலின் வேலையை அதிகரிக்கிறீர்கள். எந்த ஒரு உடல் உறுப்பும் அதற்கு இயற்கையில் விதிக்கப்பட்ட வேலையை அதற்கேற்ற அளவு தான் செய்ய முடியும். மனிதர்கள் ஓவர் டைம் ஒர்க் பண்ணுவதைப் போல, அவர்களின் ஆர்கன்ஸ் பண்ண கூடாது.

பேலியோ டயட்டில் இருப்பவர்கள் முழுக்க முழுக்க கொழுப்பை அதிகமாக உட்கொள்கிறார்கள். இது கலோரியை அதிகமாக தரும். ஆனால் இன்சுலின் எப்படி வரும்? பரத் கல்யாணின் மனைவி பிரியாவை பொறுத்தவரை அவரது சர்க்கரை அளவு குழப்பமடைந்து கீட்டோஸிஸ் என்ற நிலையை அடைந்திருக்கிறது. உடல் தன்னிடம் இருக்கும் கொழுப்புகளை எனெர்ஜியாக பயன்படுத்துவதற்கு கீட்டோன்கள் முக்கியம். அந்த கீட்டோன்கள் அளவு அதிகரிக்க அதிகரிக்க நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். இதனால் சோர்வு, குழப்பம், கோமா என படிப்படியாக உடல் அடுத்தடுத்த நிலையை அடையும். இது தவிர நிறைய வளர்ச்சிதை மாற்ற மாறுபாடுகளும் ஏற்படும். இறுதியில் உயிரே போகும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

Nutritionist Sadhana Rajkumar about paleo diet side effects, Bharathi Kannamma serial actor Bharath Kalyan wife Priya passed away, bharath kalyan wife, bharath kalyan serials, bharath kalyan wikipedia, bharath kalyan age, bharath kalyan wife death, bharath kalyan wife death reason, bharath kalyan wife priya paleo diet, paleo diet, paleo diet good or bad, பேலியோ டயட், பரத் கல்யாண், பரத் கல்யாண் மனைவி, நடிகர் பரத் கல்யாண், பரத் கல்யாண் மனைவி பிரியா மரணம், paleo diet side effects, paleo diet chart, paleo diet food list, paleo diet 7-day meal plan, paleo diet recipes, why paleo diet is unhealthy, பேலியோ டயட், பேலியோ டயட் பக்கவிளைவுகள், சாதனா ராஜ்குமார்
ஊட்டச்சத்து நிபுணர் சாதனா ராஜ்குமார்

அதனால் லோ-கார்போஹைட்ரேட் டயட் எப்போதும் சோர்வை உண்டாக்கும். பேலியோ டயட்டில் இருப்பவர்களிடம், கார்போ ஹைட்ரேட் இல்லை என்று எனெர்ஜிக்காக புரதத்தை உடல் எடுத்துக் கொள்ளும். தசைகளில் கிளைக்கோஜனாக இருக்கும் எக்ஸ்ட்ரா குளுக்கோஸும் எனெர்ஜிக்காக பயன்படுத்தப்படும். இதனால் தசைகளில் உள்ள கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும். இதனால் மற்ற உணவுமுறைகளை விட பேலியோவில் 2 மினிட்ஸ் மேகி மாதிரி சட்டென உடல் எடை குறைகிறதென்று ஆர்வம் காட்டுகிறார்கள் சிலர்.

லோ கார்போஹைட்ரேட் டயட்டில் இருப்பவர்களுக்கு சோர்வு அதிகரிக்கும். பேலியோவில் பால் பொருட்களை தவிர்க்கிறார்கள். அதுபோல அரிசி, ராகி, திணை போன்ற தானியங்களையும் சாப்பிடுவதில்லை. ஆனால் பால், ராகி போன்றவற்றில் கால்சியம் நிறைய உள்ளது. கால்சியம் இருந்தால் தான் விட்டமின் டி-யை உடல் எடுத்துக் கொள்ளும். உங்கள் உடலில் கால்சியம் இல்லாமல், என்ன தான் நீங்கள் காலை, மாலை என சூரியன் முன்பு நின்றாலும், உடல் விட்டமின் டி-யை எடுத்துக் கொள்ளாது. அதனால் பேலியோவில் இருப்பவர்களுக்கு எலும்பு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு அதிகம். விரைவில் ஜாயிண்ட் பெயின், எலும்பு தேய்மானம் போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பேலியோவில் நிறைய மாமிசம் சாப்பிடுவதால் இதயம் சம்பந்தமான பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். இதில் புரதமும் அதிகளவில் உட்கொள்ளப்படுவதால் கிட்னி பிரச்னைகளும் வரக்கூடும். சாச்சுரேட்டட் ஃபேட் அதிகமாக எடுத்துக் கொள்வது இதயத்துக்கும், கிட்னிக்கும் நல்லதல்ல. இன்னொரு விஷயம் அதிக மாமிச உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது நம்மிடம் கெட்ட பாக்டீரியாக்கள் அதிகரிக்கின்றன. நாம் சாப்பிடுவதால் உயிர் வாழவில்லை, நமக்குள் இருக்கும் பாக்டீரியா தான் அதற்கு முக்கியக் காரணம். இதில் குட் பாக்டீரியா நமது நண்பன். ஆனால் பேட் பாக்டீரியா அதிகரித்தால், ஜீரண கோளாறு ஏற்படும். குட் பாக்டீரியா நிறைய இருந்தால் அது டாக்ஸின்களை வெளியேற்றும். அதுவும் குகை மனிதன் விலங்குகளை வேட்டையாடி ஃப்ரெஷ்ஷாக சாப்பிட்டான். ஆனால் நாம் அப்படியில்லை. புராசஸ் செய்த உணவுகளை தான் அதிகம் சாப்பிடுகிறோம்.

அதனால் நீங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முன்னோர்கள் உணவு முறையை பின்பற்றுவதற்கு பதில், உங்கள் தாத்தா, பாட்டியின் உணவுமுறையை பின்பற்றுவது சாலச்சிறந்தது" என பேலியோ டயட் குறித்து நம்மிட விளக்கினார் ஊட்டச்சத்து நிபுணர் சாதனா ராஜ்குமார்.

Published by:Shalini C
First published:

Tags: Diet, Paleo Diet, TV Serial