Home /News /entertainment /

அம்மாவாக இனி நடிக்க மாட்டார்.. சன் டிவி சீரியல் நடிகையின் திடீர் விலகலுக்கு என்ன காரணம்?

அம்மாவாக இனி நடிக்க மாட்டார்.. சன் டிவி சீரியல் நடிகையின் திடீர் விலகலுக்கு என்ன காரணம்?

சன் டிவி சீரியல் நடிகை

சன் டிவி சீரியல் நடிகை

யமுனா என்ற கதாபாத்திரத்தில் நித்யா நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில் இவரின் விலகல் ரசிகர்களுக்கு சோகத்தை தந்துள்ளது

  சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் கண்ணான கண்ணே சீரியலில் நடித்து வந்த மூத்த நடிகை ஒருவர் சீரியலில் இருந்து விலகியுள்ளார்.யார் அவர்? அவரின் திடீர் விலகலுக்கு என்ன காரணம்? வாங்க பார்க்கலாம்.

  கண்ணான கண்ணே சன் டிவியில் ரோஜாவுக்கு அடுத்தப்படியாக பலரின் உள்ளம் கவர்ந்த சீரியலாக இருக்கிறது. இந்த சீரியலில் யுவா- மீரா ஜோடிக்கு பயங்கரமான ஃபேன்ஸ் பட்டாளம். இவர்களின் காதல் காட்சிகள், ரொமான்ஸ் என சோஷியல் மீடியாவில் பயங்கர ரீச். அப்பா மகளின் பாச போராட்டத்தை சொல்லும் இந்த கதையில் பிருத்விராஜ் அப்பாவாக நடிக்க, அவரின் வெறுப்பை சம்பாதிக்கும் மகளாக மீரா ரோலில் நடிகை நிமிஷிகா நடிக்கிறார். நிமிஷிகாவுக்கு இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான பாலோவர்ஸ் இருக்கின்றனர். சீரியலில் ஹோம்லி கேர்ளாக நடிக்கும் அவர், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியில் கலக்குவார். இவரை மீரா என்றால் தான் பலருக்கும் தெரியும். தனது அமைதியான நடிப்பால், ஆர்ப்பாட்டம் இல்லாத அழகால் சின்னத்திரையில் தனக்கென தனி ரசிகர்களை அமைத்துக் கொண்டார் மீரா.

  இதையும் படிங்க... விஜய் டிவி குக் வித் கோமாளியில் சூர்யா பட ஹீரோயினா? சொல்லவே இல்லை!

  கதையில் மீராவாக வரும் நிமிஷிகா, அம்மா, தங்கை, பாட்டி என அனைவரது அன்பிலும் செல்லப் பிள்ளையாக வளர்கிறாள். ஆனால் அவளின் மனதில் ஏதோ இனம்புரியாத கவலை இருந்து கொண்டே இருக்கிறது. தனக்கு தந்தை இல்லாத உணர்வு அவளை வதைப்பதால், தந்தையின் அன்புக்காக ஏங்குகிறாள்.

  இதையும் படிங்க... யாஷிகாவுடன் பிரேக்கப் ஆனது உண்மையா? பிக் பாஸ் நிரூப் சொன்ன அதிர்ச்சி கலந்த உண்மை!-

  திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடர் தெலுங்கில் ஒளிபரப்பான ’பௌர்ணமி’ மற்றும் கன்னட மொழித் தொடரான ’மானசரே’ தொடர்களின் மறு ஆக்கமாக தமிழில் தயாரிக்கப்பட்டுள்ளது. கண்ணான கண்ணே சீரியலின் முதன்மை அம்சமே பல ஆண்டுகளாக மக்களிடம் அறிமுகமான பிரபலங்கள் நடிக்கின்றனர். இதனால் மக்களிடம் எளிதாக ரீச்சான இந்த தொடர், தற்போது அனைவரும் விரும்பி பார்க்கும் தொடராகவும் உள்ளது. பப்ளு என அழைக்கப்படும் பிரபல நடிகர் பிரித்திவி ராஜ், நித்யா தாஸ், அக்ஷிதா, சுலோச்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படி சீரியல் நல்ல ரேட்டிங்கில் சென்று கொண்டிருக்க சீரியலில் யமுனா கேரக்டரில் நடித்து கொண்டிருந்த நித்யா தாஸ் சீரியலில் இருந்து விலகியுள்ளார். இது அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   
  View this post on Instagram

   

  A post shared by Tamil Serials (@tamilserialexpress)


  இவர் தமிழ், மலையாள என பல படங்களில் நடித்துள்ளார். நித்யா தாஸூம் அவரது மகளும் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் படு வைரல். யமுனா என்ற கதாபாத்திரத்தில் நித்யா நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில் இவரின் விலகல் ரசிகர்களுக்கு சோகத்தை தந்துள்ளது. ஏன் சீரியலை விட்டு நித்யா தாஸ் திடீரென்று விலகினார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. நடிகை வினோதினி இனி யமுனா ரோலில் நடிக்கவுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Sun TV, TV Serial

  அடுத்த செய்தி