Home /News /entertainment /

புத்தகங்கள் வைக்க கூட இடமில்லை.. ரசிகர்களுக்கு வாழும் வீட்டை காட்டிய அறந்தாங்கி நிஷா

புத்தகங்கள் வைக்க கூட இடமில்லை.. ரசிகர்களுக்கு வாழும் வீட்டை காட்டிய அறந்தாங்கி நிஷா

அறந்தாங்கி நிஷா

அறந்தாங்கி நிஷா

ஜன்னல் கம்மியில் இருக்கும் இடைவெளியில் புத்தகத்தை அடுக்கி வைத்திருக்கிறார் நிஷா

  விஜய் டிவி அறந்தாங்கி நிஷா தான் வாழும் வீட்டை ரசிகர்களுக்கு சுற்றி காட்ட, யூடியூப் சேனலில் ஹோம் டூர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது. அப்படி என்ன ஸ்பெஷல் அந்த வீடியோவில்? நிஷாவின் வீட்டை பார்த்த ரசிகர்களின் ரியாக்‌ஷன் என்ன? வாங்க விரிவாக பார்க்கலாம்.

  பெண்களுக்கு காமெடி சாத்தியமாகுமா? என்கிற கேள்வியை உடைத்து எறிந்து சாதித்து காட்டியவர் அறந்தாங்கி நிஷா. கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் என்ட்ரி கொடுத்தார். அந்த நிகழ்ச்சியில் ‘ரன்னர் அப்’ பட்டத்தைக் கைப்பற்றினார்.பின்னர், விஜய் டி.வி-யில் பல ரியாலிட்டி ஷோக்களில் நிஷாவின் குரல் ஒலித்தது. மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷாவும்,அவரது கணவர் ரியாஸூம் கலந்து கொண்டனர்.இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.

  இதையும் படிங்க.. அடங்காத அர்ச்சனா.. சந்தியாவுக்கு எதிராக அடுத்து செய்ய போகும் சதி வேலை இதுதான்!

  விஜய் டிவி மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமான பிறகு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார் நிஷா.  பிக் பாஸில் அவர் அன்பு கேங்குடன் சேர்ந்ததால் பல நெகடிவ் கமெண்டுகளை பெற்றார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தும் அவரை இந்த சர்ச்சைகள், அவமானங்கள் தொடர்ந்தனர்.அந்த சமயத்தில் தான் ‘கருப்பு ரோஜா’ என்ற யூடியூப் சேனலை தொடங்கினார். அதில் பல வகையான காமெடி வீடியோக்கள், விலாக்ஸ், குக்கிங் வீடியோக்களை நிஷா வெளியிட்டு வந்தார். அந்த சேனலுக்கு நல்ல ரீச் கிடைத்தது. நிஷா மீது வைக்கப்பட்ட விமர்சனங்களும் மறைய தொடங்கின. வழக்கம் போல் கேலிகளை ஓரமாக வைத்து விட்டு விஜய் டிவியில் தனது பணியை தொடங்கினார் நிஷா. இப்போது பாரதி கண்ணம்மா சீரியலிலும் நடித்து வருகிறார்.

  பிஸியான நேரத்தை தவிர்த்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது யூடியூப் சேனலில் வீடியோக்களை நிஷா வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் புதுக்கோட்டையில் இருக்கும் அவருடை வீட்டை ரசிகர்களுக்கு சுற்றிக் காட்டஹோம் டூர் செய்துள்ளார். அந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்ர்த்துள்ளது.

  இதையும் படிங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் வீட்டில் ஏற்பட்ட சோகம்… ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்!

  புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தான் நிஜாவின் சொந்த ஊர். பிறந்து வளர்ந்ததெல்லாம் அங்கதான். அங்கு தான் நிஷாவின் சொந்த வீடு உள்ளது. அதாவது நிஷா கல்யாணம் செய்த பின்பு கடின உழைப்பால் கட்டிய முதல் வீடு. அந்த வீட்டை அவர் காதல் சின்னமாகவே பார்க்கிறார். ஒவ்வொரு விஷயத்தை பார்த்து பார்த்து செய்து இருக்கிறார். ’சின்ன சின்ன அன்பில் தான் சொர்க்கம் இருக்கு’ என்ற பாடல் வரிக்கு ஏற்ப நிஷாவின் அவ்வளவு சந்தோஷங்களும் அன்புகளும், பரிசு பொருட்களும் வீட்டில் நிறைந்து இருக்கிறது.  ஹாலில் சோஃபா போடும் பழக்கம் நிஷா குடும்பத்துக்கு இல்லையாம். யார் வந்தாலும் தரையில் வட்டமாக அமர்ந்து தான் கதைப்பார்களாம். அதுமட்டுமில்லை நிஷாவுக்கு நிறைய ஃபோட்டோ பிரேம்கள் அன்பளிப்பாக வந்துள்ளது, ஆனால் அவை அனைத்தும் சுவரில் மாற்ற வழியில்லாமல் தரையிலே பத்திரமாக வைத்துள்ளார். சின்ன சின்ன பரிசு பொருட்களை கூற கபோர்டில் நிரப்பி வைத்திருக்கிறார். அதையும் ரசிகர்களுக்கு காட்டி பூரிப்படைகிறார். தேவையான சின்ன கிச்சன், 2 பெட்ரூம் என நிஷாவின் வீடு இடத்தால் சிறியது என்றாலும் அன்பால்,மகிழ்ச்சியால் பெரியதாக உள்ளது.

  நிஷாவுக்கு புத்தகம் பிடிப்பது அவ்வளவு பிடிக்குமாம். தேடி தேடி புத்தகங்களை வாங்கி படிக்கும் பழக்கமுடையவருக்கு புத்தக்கங்களை அடக்க தனி ரூம் செட் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். ஆனால் அதற்கு இடமில்லாததால் ஜன்னல் கம்மியில் இருக்கும் இடைவெளியில் புத்தகத்தை அடுக்கி வைத்திருக்கிறார் நிஷா. வழக்கம் போல் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நிஷாவின் பேச்சு, அன்பான வீட்டை பார்த்து வியந்து பாராட்டி வருகின்றனர்., தேவைக்கு அதிகமாக ஆடம்பரத்திற்காக பணத்தை கொட்டி வாங்காமல் அழகான, அடக்கமான , அன்பான வீட்டில் நிஷா இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Aranthangi Nisha, Vijay tv, Youtube

  அடுத்த செய்தி