Home /News /entertainment /

என்ன எப்படி கேவலமா பேசலாம்.. ஜூலி கண்ணீர்.. எல்லை மீறும் நிரூப் - கண்டிப்பாரா சிம்பு?

என்ன எப்படி கேவலமா பேசலாம்.. ஜூலி கண்ணீர்.. எல்லை மீறும் நிரூப் - கண்டிப்பாரா சிம்பு?

Bigg Boss Niroop

Bigg Boss Niroop

Bigg Boss Ultimate Tamil | அது மட்டுமின்றி, நிரூப்பை யார் என்ன சொன்னாலும் உடனடியாக பாய்ந்து வந்து ஆஜராகும் அனிதா மீதும் சகப் போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஒன்றுமில்லாத விஷயத்தை ஜூலி பெரிதுபடுத்தி பேசுகிறார் என்று அனிதா கூறியது மிகப்பெரிய தவறு நெட்டிசன்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
பிக்பாஸ் அல்டிமேட் தற்போது பரபரப்பான டாஸ்க்குகளுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அல்டிமேட் சீசன் தொடங்கி முதல் இரண்டு வாரங்கள் இந்த பரபரப்பு இருந்தது, பின்பு போர் அடிக்க தொடங்கியது என்று பார்வையாளர்கள் பலரும் புகார் தெரிவித்து வந்தனர். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு டாஸ்க்குகளை வைத்து  சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று காலையில் வெளியான புரோமோவில், என்ன எப்படி நீ அப்படி கேவலமா பேசலாம் என்று ஜூலி நிரூப்பைப் பார்த்து அதீத கோவத்திலும், கண்ணீரோடும் கதறும் காட்சிகள் உள்ளன.

தற்பொழுது 10 போட்டியாளர்கள் உடன் பிக்பாஸ் அல்டிமேட் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இந்த வாரம் கோழி முட்டை டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் அனைத்து போட்டியாளர்களும் 3 நபர்கள் கொண்ட மூன்று குழுக்களாக பிரிந்து, பஸ்சர் ஒலிக்கும் போது வைத்திருக்கும் கோழி உருவத்திலிருந்து முட்டைகளை எடுக்க வேண்டும். இந்த டாஸ்கின் நடுவர் சுரேஷ் சக்ரவர்த்தி. இவருக்கு கழுகு வேடம் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த டாஸ்க் விடிய விடிய நடைபெறுகிறது. நேற்று காலையில் இந்த டாஸ்கின் பரபரப்பான புரோமோ ஒன்று வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதில் தான் மேலே கூறியுள்ளது படி, ஜூலியை தகாத வார்த்தைகளால் திட்டி இருக்கிறார் நிரூப்.

நிகழ்ச்சி தொடக்கம் முதலே ஜூலியை நிரூப் டார்கெட் செய்வது போல பல இடங்களில் பேசியிருக்கிறார். அது மட்டும் இன்றி, எப்போது நாமினேட் செய்தாலும் ஜூலியை தவறாமல் நாமினேட் செய்து விடுவார். ஜூலிக்கும் இவருக்கும் பல இடங்களில் கருத்து வேறுபாடுகளும் விவாதங்களும் ஏற்பட்டுள்ளன. அதே போல, ஆபாசமாக சில வாரங்களுக்கு முன்பு ஜூலியை நிரூப் திட்டியுள்ளார். இது போன்ற வார்த்தைகளை பிரயோகப்படுத்தக் கூடாது என்று நிரூப்புக்கு சக போட்டியாளர்கள் கூறினர்.



நேற்று காலை ஏற்பட்ட விவாதத்தில் ஜூலி முழுக்க முழுக்க பொய் சொல்கிறார், ஜூலி வாயில் உண்மையே வராது என்று நிரூப் கடுமையாக பேச, வாக்குவாதம் முற்றி மீண்டும் ஆபாசமான வார்த்தையை கூறி ஜூலியை திட்டியுள்ளார் நிரூப். இது இரண்டாவது முறை நடைபெறுவதால் நிரூப்பை பிக்பாஸால் கடுமையாக கண்டிப்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஒரு பெண் போட்டியாளரை தகாத வார்த்தைகளால் பேசுவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

Also Read : “சிம்புக்கு என்ன தெரியும்?” – காயத்ரி, அர்ச்சனாவை மிஞ்சும் அனிதா சம்பத் சர்ச்சை பேச்சு

ஆனால், நிரூப்புக்கு எந்த எச்சரிக்கையும் வழங்கப்படவில்லை. கடந்த வாரம் விளையாட்டாக ஜூலி எதுவோ சொல்ல, அவரை பிக்பாஸ் கடுமையாக எச்சரித்தார். ஒன்றுமே இல்லாத விஷயத்துக்கு ஜூலிக்கு வார்னிங் கொடுத்த பிக்பாஸ் ஏன் நிரூப் மீண்டும் மீண்டும் அவதூறாக பேசுவதை கன்ஃபேஷன் ரூமுக்கு அழைத்து கண்டிக்க முடியாத என்று பார்வையாளர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

Also Read : ‘பெயர் கெட்டு போய்விடும்’ விஜய் டிவியை விட்டு விலகிய பின் மனம் திறந்த ரச்சிதா மகாலட்சுமி!

அது மட்டுமின்றி, நிரூப்பை யார் என்ன சொன்னாலும் உடனடியாக பாய்ந்து வந்து ஆஜராகும் அனிதா மீதும் சகப் போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஒன்றுமில்லாத விஷயத்தை ஜூலி பெரிதுபடுத்தி பேசுகிறார் என்று அனிதா கூறியது மிகப்பெரிய தவறு என்று நெட்டிசன்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த மாதிரியான வார்த்தைகளை தொடர்ந்து பயன்படுத்துவது நிகழ்ச்சியின் தரத்தை குறைத்துள்ளது என்றும் தெரிவித்து வருகின்றனர். இதை உறுதிபடுத்தும் விதமாக, வனிதா விஜயகுமார் டிவீட் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியின் தரம் தாழ்ந்து விட்டதால் தான் கமல்ஹாசன் வெளியேறியுள்ளார் என்று வனிதா விஜயகுமார் கூறியது உண்மையா என்றும் தோன்றுகிறது. இவ்வாறு ஆபாசமான வார்த்தைகளை மீண்டும் மீண்டும் பேசுவது தவறானது என்று வார இறுதி எபிசோடில் சிம்பு கண்டிப்பாரா என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Published by:Selvi M
First published:

Tags: Bigg boss Julie, Bigg Boss Tamil, Vijay tv

அடுத்த செய்தி