Home /News /entertainment /

பிரியங்கா விஷயத்தில் பின் விளைவுகள் கடுமையாக இருக்கும்.. நிரூப்பை எச்சரிக்கும் கமல்!

பிரியங்கா விஷயத்தில் பின் விளைவுகள் கடுமையாக இருக்கும்.. நிரூப்பை எச்சரிக்கும் கமல்!

பிக் பாஸ் பிரியங்கா நிரூப்

பிக் பாஸ் பிரியங்கா நிரூப்

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடிகளில் பிரியங்காவை எப்போதும் கமல் சரமாரியாக திட்டுவதாக ஒரு குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பிக் பாஸ் சீசன் 5 இன்றைய நிகழ்ச்சியின் 2 வது புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் முதன்முறையாக பிரியங்காவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து நிரூப்பை எச்சரிக்கிறார் கமல்ஹாசன். இதனால் பிரியங்கா ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

    பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் 7 பேர் இந்த வார நாமினேஷனுக்கு தேர்வு செய்யப்பட்டனர். பிரியங்கா, ராஜூ, அக்‌ஷரா, பாவனி, வருண், சிபி, நிரூப் இவர்களில் இந்த வாரம் அக்‌ஷரா வீட்டை விட்டு வெளியே சென்றாக ஒரு பக்கம் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் இன்றைய நிகழ்ச்சியின் 2 வது புரமோவில் கமல்ஹாசன் தலைவர் டாஸ் குறித்து கேள்வி எழுப்புகிறார். அதாவது பிக் பாஸ் வீட்டில் நாமினேஷனுக்கு யார் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிப்பதே தலைவர் டாஸ்க் தான்.

    இதையும் படிங்க.. முதல் நாள் சண்டை.. அடுத்த நாளே சமாதானம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கற்று தருவது இதுதான்!

    அந்த வகையில் இந்த வாரம் கொடுக்கப்பட்ட கயிறு டாஸ்கில் 16 மணி நேரம் கயிற்றை விடாமல் பிடித்திருந்து தலைவரானர் தாமரை. இதனால் அவரின் பெயர் நாமினேஷனில் இருந்து தப்பித்தது. இந்த போட்டியில் முதல் ஆளாக கயிற்றை விட்டவர் பிரியங்கா. அதனால் நிரூப் - பிரியங்காவுக்கு இடையே மிகப் பெரிய சண்டையே வெடித்தது. அதைப்பற்றி கமல்ஹாசன் நிரூப்பிடம் கேள்வி கேட்கிறார். இதற்கு நிரூப் மற்றும் பிரியங்கா இருவரும் பதில் கூறுகிறார்கள். அதே நேரம், இந்த சண்டையில் நிரூப் , பிரியங்காவை பார்த்து மோசமான சில வார்த்தைகளை பயன்படுத்தினார்.

    இதையும் படிங்க.. அப்படி ஒரு லவ்.. யாஷிகாவை பார்த்ததும் காதலில் உருகிய நிரூப்.. இதையெல்லாம் நோட் பண்ணீங்களா?

    இதைப்பற்றியும் கமல்ஹாசன் நிரூப்பிடம் கேள்வி எழுப்புகிறார். அதற்கு நிரூப் பதில் சொல்லி முடித்த பின்பு, “நீங்கள் பேசிய வார்த்தகளின் பின் விளைவு கடுமையாக இருக்கும்” என்று கமல் சூசகமாக கூறுகிறார். இதன் அர்த்தம் ஒருவேளை நிரூப் இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேற்றப்படலாம் என்பதை குறிக்கிறதா? என்ற சந்தேகவும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.



    அதே சமயம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடிகளில் பிரியங்காவை எப்போதும் கமல் சரமாரியாக திட்டுவதாக ஒரு குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. ஆனால் இந்த முறை அந்த பேச்சுக்கு இடம் கொடுக்காமல் கமல்ஹாசன் பிரியங்காவுக்கு ஆதரவாக பேசுகிறார். இதனால் பிரியோ ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி