Home /News /entertainment /

யாஷிகாவை பற்றி ரசிகர் ஒருவர் கேட்ட அந்த கேள்விக்கு ஆடிப்போன பிக் பாஸ் நிரூப்!

யாஷிகாவை பற்றி ரசிகர் ஒருவர் கேட்ட அந்த கேள்விக்கு ஆடிப்போன பிக் பாஸ் நிரூப்!

பிக் பாஸ் நிரூப்

பிக் பாஸ் நிரூப்

நிரூப் - யாஷிகாவின் காதல் விவகாரம் பற்றிய கேள்விகளை கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த நிரூப், “என் காதலை பற்றி கேட்கிறீர்களா? அதை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நிறைய சம்பவங்கள் இருக்கிறது

  "இதுவரை நடந்த சீசன்களிலேயே இது தான்பா தரமான சீசன்!" என்று விஜய் டிவி ரசிகர்கள் பேசும் அளவிற்கு ஒரு சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவாக நடந்து முடிந்தது - பிக் பாஸ் சீசன் 5.

  இந்த சீசனின் ஃபினாலே வரை சென்றவர்களுள் பிரபல மாடல் நிரூப் நந்தகுமாரும் ஒருவர் ஆவார். இவர் பிரபல நடிகை யாஷிகா ஆனந்த்-தின் முன்னாள் காதலர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

  முதல் நாள் தொட்டு, கடைசி வாரம் வரை வருவது மட்டுமன்றி, டைட்டில் வின்னராக மாறுவதற்கான அத்தனை வாய்ப்புகளும் கொண்ட ஒரு போட்டியாளராகவே நிரூப் பார்க்கப்பட்டார். ஆனால் இடையில் பல சறுக்கல்களை சந்தித்து ரசிகர்கள் மனதில் இருந்து புறந்தள்ளப்பட்டார்.

  இதையும் படிங்க.. பங்கார்ராஜு இயக்குனரின் படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்...?

  ஃபினாலே வரை வந்தாலும் அவர் டைட்டில் வெல்ல மாட்டார் என்கிற எண்ணங்களே மேலோங்கி இருந்தது. அது உண்மையாகும் படி, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ராஜூ அறிவிக்கப்பட்டார். அவரை அடுத்து விஜய் டிவியின் பிரபல விஜே பிரியங்கா, பிக் பாஸ் சீசன் 5-யின் ரன்னர்-அப்பாக அறிவிக்கப்பட்டார்.

  பிக் பாஸ் சீசன் 5- முடிந்த வேகத்திலேயே, தொடர்ந்து 24 மணி நேரமும் ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் அல்டிமேட் என்கிற நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இது ஒரு ஓடிடி நிகழ்ச்சி ஆகும், அதாவது இதை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வழியாக மட்டுமே பார்க்க முடியும்.

  இதையும் படிங்க.. ஒரு மாசத்துக்கு ரூ. 5 லட்சம்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுப்பவரின் சம்பளம் இதுதான்!

  இதில் "அல்டிமேட் ஆன மேட்டர்" என்னவென்றால் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியில் முந்தைய பிக் பாஸ் சீசன்களில் கலந்து கொண்டு வெற்றி பெறாத போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.   
  View this post on Instagram

   

  A post shared by Niroop (@niroopnandakumar)


  ரசிகர்களிடம் நேரலையில் உரையாடிய நிரூப்!

  இந்நிலையில், நிரூப் நந்தகுமார் தன் ரசிகர்களிடம் நேரலையில் உரையாடியுள்ளார். அதில் முந்தைய பிக் பபாஸ் சீசன் போட்டியாளரும், பிரபல கவர்ச்சி நடிகையுமான யாஷிகா ஆனந்த் உடனான காதல் குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஷாக் ஆகிப்போனார் நிரூப் நந்தகுமார்.
  .
  நேரலை வழியாக ரசிகர்கள் உடனான இந்த உரையாடலின் தொடக்கத்தில், தனக்கு சரியாக டான்ஸ் ஆட வராது, சக போட்டியாளரான அமீர் தனக்கு டான்ஸ் கற்றுத்தருவதாக சொல்லி இருக்கிறார்; எனக்கு இன்னும் பிக்பாஸில் இருந்து சம்பளம் வரவில்லை என்று பல்வேறு விஷயங்களை பற்றி நிரூப்  மிகவும் ஜாலியாக பகிர்ந்து கொண்டிருந்தார்.

  "ஏன் யாஷிகாவை விவாகரத்து செய்தீர்கள்?”

  அப்போது தான் ரசிகர்கள், நிரூப் - யாஷிகாவின் காதல் விவகாரம் பற்றிய கேள்விகளை கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த நிரூப், “என் காதலை பற்றி கேட்கிறீர்களா? அதை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நிறைய சம்பவங்கள் இருக்கிறது. எனக்கு அரேஞ்ச் மேரேஜ் மேல் நம்பிக்கை இல்லை. அதற்கு சில காரணங்களும் உள்ளன" என்று கூற, அதை கேட்ட ரசிகர் ஒருவர், “பிறகு ஏன் யாஷிகாவை விவாகரத்து செய்தீர்கள்?” என்று கேட்க, நிரூப்பிற்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு!

  ஷாக் ஆன வேகத்தில் சிரித்துவிட்டு “விவகாரத்து பண்ணேனா? அதெல்லாம் பண்ணலங்க, எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஒரு கட்டத்துக்கு மேல் பிரியாமல் இருந்தால், ஒன்று நாம் கஷ்டப்படுவோம், இல்லை என்றால் உடன் இருப்பவர்கள் கஷ்டப்படுவார்கள்!” என்று நிரூப் மிகவும் தெளிவான ஒரு பதிலை அளித்தார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

  அடுத்த செய்தி