Home /News /entertainment /

நிரூப்பை இறுதி போட்டிக்கு அனுப்ப பிக் பாஸ் ஆடிய கேம் சரியா? என்ன சொல்கிறார் கமல்ஹாசன்!

நிரூப்பை இறுதி போட்டிக்கு அனுப்ப பிக் பாஸ் ஆடிய கேம் சரியா? என்ன சொல்கிறார் கமல்ஹாசன்!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

பிக் பாஸ் திட்டம் போட்டு விளையாடிய கேம்மால் நிரூப் ஃபைனல்ஸூக்கு சென்றார்.

    பிக் பாஸ் 5 நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ வெளியாகியுள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தப்படி நிரூப் இறுதி போட்டிக்கு சென்றதை பற்றி கமல்ஹாசன் பேசுகிறார்.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சி இறுதி வாரத்தில் பயணித்து கொண்டிருகிறது. அடுத்த வாரம் ஃபைனல்ஸ். இப்போது வீட்டில் 6 போட்டியாளர்கள் உள்ளன. அதில் ஒருவர் இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார். ஒட்டு எண்ணிக்கை அடிப்படையில் நிரூப் இந்த வாரம் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றைய எபிசோடில் அந்த கணிப்பு தவறானது. அதற்கு பதில், நிரூப் இரண்டாவது போட்டியாளராக இறுதி போட்டிக்கு நேரடியாக சென்றார்.

    இதையும் படிங்க.. ராஜு எடுத்த அதிரடி முடிவு... பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் பிரியங்கா?

    நேற்றைய தினம் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் இது மிகப் பெரிய ஏமாற்றமாக அமைந்தது. நிரூப்பை வெளியேற்ற ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் பிக் பாஸ் திட்டம் போட்டு விளையாடிய கேம்மால் நிரூப் ஃபைனல்ஸூக்கு சென்றார். நிருப் தேர்வானது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு மட்டுமில்லை ரசிகர்களுக்கும் கொஞ்சம் கூட விருப்பமில்லை. ஒருவேளை கடைசி வரை விளையாடி நேர்மையான முறையில் நிரூப் இறுதி போட்டிக்கு சென்று இருந்தால் மக்கள் பார்வையில் அது வேற மாதிரி தெரிந்து இருக்கும்.

    இதையும் படிங்க.. கோபியின் தகிடுதத்தம் முடிவுக்கு வரும் நேரம்.. உண்மையை சொல்லும் எழில்!

    ஆனால் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் பாவனியை தேர்வு செய்த பின்பு, பிக் பாஸ் இந்த முடிவை நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு நிரூப் தான் செல்ல வேண்டும் என்ற ஆசையை சூசகமாக சொல்வது போல் சொல்லி, கடைசியில் நிரூப்பை வேண்டா வெறுப்பாக போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்து இறுதி போட்டிக்கு அனுப்பினர்.



    இந்நிலையில், இன்றைய கமல்ஹாசன் நிகழ்ச்சியில் இதுக் குறித்து பேசப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். அதை உறுதி செய்யும் வகையில் இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரமோ வெளியாகியுள்ளது. அதில், “எதிர்பார்க்காத போட்டியாளர்கள் ஃபைனல்ஸூக்கு சென்றனர். எதிர்பார்த்த ஒருவர் வெளியே சென்று விட்டார். இன்னும் 1 வாரத்தில் என்னென்ன நடக்க போகிறதோ” என்று வார்த்தை ஜாலங்களால் விளையாடுகிறார் கமல்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி