• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • தொழிலதிபர் டூ யாஷிகா எக்ஸ் லவ்வர்.. பிக் பாஸில் உயர்ந்த மனிதன் நிரூப் உண்மையில் யார்?

தொழிலதிபர் டூ யாஷிகா எக்ஸ் லவ்வர்.. பிக் பாஸில் உயர்ந்த மனிதன் நிரூப் உண்மையில் யார்?

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

யாஷிகா பற்றி மனம் திறந்த நிரூப் அபிராமி பற்றி எந்த இடத்திலும் பேசவில்லை

 • Share this:
  பிக் பாஸ் 5ல் உயர்ந்த போட்டியாளராக வந்திருக்கும் நிரூப் நந்தகுமார் பற்றிய தேடல் இணையத்தில் அதிகரித்துள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம், பிக் பாஸ் வீட்டில் அவருடைய கேம் மூவ் பலரின் கவனத்தையும் பெற தொடங்கியுள்ளது.

  இந்த முறை பிக் பாஸ் சீசனில் போட்டியாளர்களாக களம் இறங்கி இருக்கும் போட்டியாளர்கள் பலரும் அதிகம் பரீட்சையம் இல்லாத முகங்கள் தான். ஆனாலும் நாடியா சேங்கை தவிர மற்ற எல்லோரும் நம்ம தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான். கிட்டத்தட்ட அனைவரும் சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் தான். டாக்டரான ஐக்கி பெர்ரி முதல் தமிழ் ஹிப் பாப் பாடகி ஆவார். இவரின் தலையை பார்த்து பலரும் ஜெர்மனியை சேர்ந்தவர் என நினைக்க தஞ்சாவூர் தான் என சொந்த ஊர் என்று ஷாக் கொடுத்தார். தாமரை செல்வி நாடகம், தெருகூத்து கலைஞர். அதே போல் சின்ன பொண்ணும் நாட்டுப்புற பாடகி. இப்படி கிட்டத்தட்ட எல்லோரும் சினிமாவுடன் தொடர்புடையவர்கள் தான். அந்த வகையில் தொழிலதிபராக இருந்து கொண்டு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசைக்காக பிக் பாஸ் வீட்டில் நுழைந்தவர் தான் நிரூப் நந்தகுமார்.

  பிக் பாஸ் வீட்டில் நடந்த ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்கில் நிரூப் தன்னை பற்றி எல்லா விஷயங்களையும் பிக் பாஸ் ரசிகர்களுக்கும் மற்ற ஹவுஸ்மேட்ஸூக்கும் தெரியப்படுத்திக் கொண்டார். அதுமட்டுமில்லை நிரூப் நடிகையும் பிக் பாஸ் சீசன் 2 முன்னாள் போட்டியாளருமான யாஷிகாவின் முன்னாள் காதலன் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.நிரூப் நந்தகுமார் ஒரு தொழிலதிபர் ஆவார். பெங்களூரில் ஒரு ஆட்டோமேஷன் கம்பெனி நடத்தி வருகிறார் அதே போல் சென்னையில் ஒரு கிளவுட் கிட்சன் நடத்தி வருகிறார். இதை அவரே பிக் பாஸில் உறுதிப்படுத்தினார். ஆனாலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது தான் நிரூப்பின் தீராத ஆசை. இதுவரை பல ஃபோட்டோக்களை ஆடிஷனுக்கு அனுப்பி இருக்கிறாராம். ஆனால் நேரில் செல்லும்போது அவரின் உயரத்தை பார்த்துவிட்டு உயரமாக இருப்பதால் நடிக்க வைக்க முடியாது என சொல்லி நிராகரித்துவிடுவார்களாம். இப்படி இருக்கும் போது தான் மாடலிங் மூலம் யாஷிகாவுடன் நிரூப்புக்கு நட்பு ஏற்பட்டு அது காதலாகவும் மாறியது.   
  View this post on Instagram

   

  A post shared by Niroop (@niroopnandakumar)


  பிக் பாஸ் வீட்டில் யாஷிகா இருக்கும் போது மகத்துடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. அதே நேரம் மகத்துக்கு கேர்ள் ஃபிரண்ட் இருந்தார். இதுக் குறித்த பல விமர்சனங்கள் இணையத்தில் வெளியான போது பிரபல யூடியூப் சேனலுக்கு நிரூப் ,யாஷிகா பற்றி பேட்டி கொடுத்தார். அதில் யாஷிகா - மகத் காதலை ஏற்க முடியாது என்றார். அப்பவே யாஷிகாவின் லவ்வர் இவர் தான் என்று உறுதியானது. அதன் பின்பு யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் லைவ் வீடியோவில் பேசிக்கொண்டு இருந்த போது யாஷிகாவுக்கு லிப்லாப் கொடுத்த காட்சி லைவில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. நெட்டிசன்கள் அவர்களை வறுத்தெடுத்தனர். இந்நிலையில் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் பிரேக்கப் ஆனது.

  ஆனால் யாஷிகா கொடுத்த சில காண்டேக் மூலம் மாடலிங்கில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்ட நிரூப் அதன் மூலமே இப்போது பிக் பாஸ் வீட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். அதுமட்டுமில்லை நிரூப்பின் பேச்சு, கேம் மூவ் எல்லாமே ரசிகர்களை தற்போது பெருமளவில் கவர்ந்து வருகிறது. அபிஷேக்குக்கு இவர் அட்வைஸ் செய்த விதம், தோழியாக இருந்தாலும் பிரியங்காவின் கருத்துக்கு எதிர் விமர்சனங்கள் வைப்பது என நிரூப் பிக் பாஸில் கலக்கி வருகிறார். இறுதி போட்டி வரை செல்லும் அனைத்து திறமைகள் நிரூப்புக்கு இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

  ஸ்ருதியா? தாமரையா? நீதி யாருக்கு.. குறும்படம் யாருக்கு பிக் பாஸ்?

  யாஷிகா மட்டுமில்லை, பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்ட அபிராமியுடனும் நிரூப் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் லீக்கானது. யாஷிகா பற்றி மனம் திறந்த நிரூப் அபிராமி பற்றி எந்த இடத்திலும் பேசவில்லை என்பது புரியாத புதிர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: