Home /News /entertainment /

பிரியங்காவை பற்றி தப்பு தப்பாக பேசும் நிரூப் - தாமரை கூட்டணி!

பிரியங்காவை பற்றி தப்பு தப்பாக பேசும் நிரூப் - தாமரை கூட்டணி!

பிக் பாஸ்

பிக் பாஸ்

”யாருமே தைரியமாக பிரியங்காவை எதிர்த்து சண்டை போட மாட்டேங்கிறாங்களே" என்று கேட்கிறார் தாமரை.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் இப்போது போட்டியாளர்களுக்கு டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. நேற்று நடந்த முதல் டாஸ்கில் யார் இந்த டிக்கெட்டை பெற தகுதியானவர்கள் இல்லை என்பதை முடிவு செய்ய வேண்டும் என போட்டியாளர்களிடம் கேட்கப்பட்டது. அதில் பிரியங்காவும், நிரூப்பும் மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டனர். இறுதியில் தாமரை மற்றும் நிரூப் இருவரில் ஒருவரை வெளியேற்ற முடிவு செய்தனர்.

    அப்போது தாமரை நிரூப்பிற்காக விட்டுக்கொடுக்க முடிவு செய்திருந்தார். பிறகு, அனைவரும் கலந்து பேசி இறுதியில் நிரூப்பை வெளியேற்றினர். இந்நிலையில், 86ம் நாளான இன்று டிக்கெட் டு ஃபினாலே-வுக்கான அடுத்தகட்ட டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்களுக்கு கூடையில் முட்டைகள் வைக்கப்பட்டுள்ளது. போட்டியின் இறுதியில் யார் கூடையில் முட்டைகள் கம்மியாக இருக்கிறதோ அவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்பட்டது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மற்றவரின் முட்டையை உடைக்க செல்கின்றனர். அதில், பிரியங்காவுக்கும் தாமரைக்கும் இடையே மோதல் வலுக்கிறது. இருவரும் குழாயடி சண்டை போட்டுக்கொள்வது போல தெரிகிறது. மேலும்,பாவனி முட்டைகளை பிறரிடம் கொடுத்துவிட்டு டாஸ்கில் இருந்து வெளியேறியதோடு, தேம்பி தேம்பி அழுகிறார். அதோடு ப்ரோமோ முடிக்கப்பட்டது.

    இதையும் படிங்க.. சமந்தா முதல் சம்யுக்தா வரை.. பிரபலங்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்

    அதன் தொடர்ச்சியாக வெளியான 2வது ப்ரோமோவில், தாமரைக்கும் பிரியங்காவிற்கும் இடையே டாஸ்கில் நடந்த மோதல் குறித்து பிரியங்கா, பாவனியிடம் மிகக்கடுப்பாக பேசுகிறார். அப்போது பிரியங்கா கூறியதாவது, " நான் ஏதும் பண்ணல. என்ன யாரு அட்டாக் பண்றங்களோ, அவங்கள நா அட்டாக் பண்ணுவேன். நா என்ன அவளோட இதுவா? இளிச்சவாயின்னு என் மண்டையில எழுதி ஒட்டிருக்கா என்ன? தாமரைக்காக நான் பலமுறை நின்றுருக்கிறேன். ஆனால் எவ்வளவு தைரியம் என்னை டாஸ்கில் அப்படி தாக்கியிருக்கிறாள். நான் காட்டாயம் தாமரையிடம் இனி பேசப்போவதில்லை. இந்த ஷோ முடியும் வரை எனக்கு தாமரையிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் இல்லை." என்று பாவனியிடம் பிரியங்கா தெரிவிக்கிறார். தாமரையோ மிக சோகமாக படுத்திருக்கிறார்.

    இதையும் படிங்க.. ஆல்யா மானசாவா? ஷபானாவா? அதிக ரசிகர்கள் வைத்திருக்கும் சீரியல் நடிகைகள் யார்?

    இதனை தொடர்ந்து, இன்று வெளியான 3வது ப்ரோமோவில், பிரியங்கா ராஜூவை கட்டி பிடித்துக்கொண்டு அழுகிறார். ராஜுவும் பிரியங்காவிற்கு ஆறுதல் சொல்கிறார். அதனை பார்க்கும் போது இன்று கொடுக்கப்பட்ட டாஸ்கில் தாமரைக்கும், பிரியங்காவிற்கும் நடந்த மோதலால் பிரியங்கா அழுவது போலத் தெரிகிறது. உடனே அடுத்த காட்சியில் நிரூப்பும், தாமரையும் பேசிக்கொள்வது போல ப்ரோமோ அமைந்துள்ளது. அதில், "எல்லாரும் ஏன் பிரியங்காவை எதிர்க்க மாட்டார்கள் என்பது எனக்கு தெரியும் என நிரூப் சொல்கிறார். அதற்கு உடனே, ஆமாம் ஏன் பிரியங்காவை யாரும் எதிர்க்கவில்லை என தாமரை கேட்கிறார்.



    மீண்டும் பேசிய நிரூப், பிரியங்கா சொல்றதெல்லாம் கரெக்டுனு ஏன் தெரியுமா நினைக்கிறார்கள்?, என்னை பொறுத்தவரை, பிரியங்காவிற்கு வெளியில் ஒரு ஃபேன் பேஸ் இருக்கு." என்று கூறுகிறார். பின்னர் தொடர்ந்து பேசிய நிரூப் "இந்த கூட்டத்தில் பிரியங்காவை யாராவது பகைத்து கொண்டார்கள் என்றால்" என்று சொல்லி முடிப்பதற்குள், தாமரை தலையிட்டு " ஆமாம். யாருமே தைரியமாக பிரியங்காவை எதிர்த்து சண்டை போட மாட்டேங்கிறாங்களே" என்று கேட்கிறார். உடனே அதற்கு பதிலளித்த நிரூப் "இங்க யாருக்கும் தைரியம் என்பதே இல்லை. ஏன் என்று எனக்கு தெரியவில்லை" என்கிறார். டாஸ்கில் ஏன் என்னிடம் வந்த, வந்த என்று பிரியங்கா என்னிடம் கேட்கிறார். பிறகு ஏன் அவர் இந்த விளையாட்டிற்கு வந்தார் என ஆதங்கத்துடன் தாமரை நிரூப்பிடம் கேட்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி