ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

’நாம் இருவர் நமக்கு இருவர் 2 ’சீரியலில் வரப்போகும் மிகப் பெரிய ட்விஸ்ட்!

’நாம் இருவர் நமக்கு இருவர் 2 ’சீரியலில் வரப்போகும் மிகப் பெரிய ட்விஸ்ட்!

நாம் இருவர் நமக்கு இருவர்

நாம் இருவர் நமக்கு இருவர்

நாம் இருவர் நமக்கு இருவர் 2வில் மாயனை, பழிவாங்க வேண்டும் என மாறன் வில்லத்தனமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் மாறனுக்கு தகுந்த பாடம் கற்பிக்க மாயன் ஒரு பிளான் செய்கிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பாகி வரும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் இரண்டாம் பாகத்தில் வரும் வார எபிசோடில் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ட்விஸ்ட் காத்துக் கொண்டிருக்கிறது.

  கொரோனாவுக்கு முன்பு ஒளிப்பரப்பை தொடங்கி, சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் முதல் பாகம் நிறுத்தப்பட்டு, இரண்டாம் பாகம் ஒளிபரப்பப்பட்டது. முதல் பாகத்தைப் போலவே இதிலும் மிர்ச்சி செந்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘சரவணன் மீனாட்சி’ புகழ் ரச்சிதா மகாலட்சுமி நடித்து வந்தார். பின்னர் அவர் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக மோனிஷா நடித்து வருகிறார்.சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது.

  மாயனின் தங்கைகளில் ஒருவரான ஐஸ்வர்யாவுக்கு பல பிரச்சனைகளை கடந்து இப்போது தான் மாயன் 2வது திருமணத்தை முடித்து வைத்தார். ஏற்கெனவே ஐஸ்வர்யாவுக்கும் அத்தை மகன் முத்துராசுவுக்கும் திருமணம் நடைப்பெற்றது. ஒருநாள் முத்துராசு இறந்த விஷயம் அதிர்ச்சியை தர, முத்துராசை யார் சுட்டுக் கொன்றார்கள் என்ற வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி கார்த்திக், நாளடைவில் ஐஸ்வர்யாவின் காதலராக மாறி இப்போது திருமணமும் செய்துக் கொண்டார்.

  கலர்ஸ் தமிழில் களைக்கட்டும் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி கொண்டாட்டங்கள்!

  இந்த திருமணத்தின் கடைசி நேரத்தில் முத்துராசு ரீ என்ட்ரி கொடுத்து டி.ஆர்.பியை எகிற வைத்தார். இப்போது முத்துராசு நீதிமன்றத்தின் உத்தரவு படி மனநல காப்பகத்தில் உள்ளார். இது ஒருபுறம் இருக்க, மாயன் உடைய தம்பி மாறன், அப்பாவின் இரண்டாவது மனைவியையும் அவர்களுடைய பிள்ளைகளையும் வெறுத்து ஒதுக்குகிறார். சொந்த அம்மாவை கூட வெறுத்து ஒதுக்கும் மாயனை, பழிவாங்க வேண்டும் என மாறன் வில்லத்தனமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் மாறனுக்கு தகுந்த பாடம் கற்பிக்க மாயன் ஒரு பிளான் செய்கிறார்.

  அதன்படி, ஊரில் இருந்து வந்து இருக்கும் அத்தை மகள் தாமரையை மாறனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என நினைக்கிறார். அவள் கிராமத்து பெண்ணாக  இருப்பதால், அவளை மாறன் நிமிர்ந்துகூட பார்க்கவில்லை. ஆனால் தாமரைக்கு மாறன் மீது ஆசை. இது மாயனுக்கும் தெரியும். கல்யாணம் ஆகிவிட்டால் மாறன் இனி நம்ம பேச்சுக்கு வரமாட்டான் என நினைத்த மாயன், வில்லத்தனமான பிளான் ஒன்றை போட்டு மாறன் ரூமில் தாமரையை படுக்க சொல்லி, அதை எல்லோரும் தப்பாக புரிந்துக் கொள்ளும்படி செய்கிறார்.

  சரவணன் தங்கை பார்வதி பற்றி விக்கிக்கு கிடைத்த ஆதாரம்.. சந்தியாவை மாட்டிவிட்ட அர்ச்சனா!

  தாமரையும் மாறனும் ஒரே அறையில் தூங்கியதை பார்த்த மொத்த குடும்பமும் மாறன் மீது பயங்கர கோபத்தில் உள்ளனர். இதன் முடிவாக வரும் நாட்களில் தாமரைக்கும் மாறனுக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர். இந்த காட்சிகள் வரும் வாரங்களில் ஒளிப்பரப்பாகும் என தெரிகிறது. மாறன் - தாமரை திருமண ஷூட்டிங் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. விருப்பமில்லாமல், பெரியோர்களின் வற்புறுத்தலால் தாமரையை மாறன் திருமணம் செய்து கொள்கிறார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, TV Serial Promos, Vijay tv