• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • மாஸ்டர் செஃப்புக்கு வரும் பிரபல நடிகை - டி.ஆர்.பியை ஏற்ற பலே ப்ளான்!

மாஸ்டர் செஃப்புக்கு வரும் பிரபல நடிகை - டி.ஆர்.பியை ஏற்ற பலே ப்ளான்!

மாஸ்டர் செஃப் ஷோ

மாஸ்டர் செஃப் ஷோ

இந்த நிகழ்ச்சியானது, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் மிகப்பெரிய ஹிட்டான சமையல் ஷோ.

 • Share this:
  சன் டிவி-யில் ஒளிப்பரப்பாகி வரும் மாஸ்டர் செஃப் ரியாலிட்டி சமையல் ஷோவுக்கு வரும் வாரம் நிக்கி கல்ராணி சிறப்பு விருந்தினராக வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  சன்டிவி-யில் உலகத்தரம் வாய்ந்த பிரம்மாண்ட ஷோவான ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 7 எபிசோடுகள் நிறைவடைந்துள்ளன. நிகழ்ச்சியை வெளித்திரையின் முன்னணி கதாநாயகனாக இருக்கும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க, உலகத் தரம் வாய்ந்த செஃப்களான ஆர்த்தி சம்பத், ஹரீஷ் ராவ், கௌசிக் ஆகியோர் நடுவர்களாக இருக்கின்றனர்.

  இந்த நிகழ்ச்சியானது, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் மிகப்பெரிய ஹிட்டான சமையல் ஷோ. முதன்முறையாக தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாஸ்டர் செஃப் ஷோ-வுக்கு தொடக்கம் முதலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. கல்லூரி மாணவர் முதல் என்ஜினியர் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த சமையல் கலை நிபுணத்துவம் உள்ள 12 பேர் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  வாரம்தோறும் அவர்களுக்கு வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த வார எபிசோடில், சமையல் அறையில் வேண்டாம் என தூக்கியெறியும் பொருட்களை வைத்து சமைக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. உதாரணமாக, மீன் முள், முட்டை ஓடு, நறுக்கப்பட்ட காய்கறிகளின் தோல் என அவற்றில் இருந்து வித்தியாசமான ரெசிபியை செய்யுமாறு போட்டியாளர்களுக்கு செஃப்கள் கட்டளையிட்டனர்.

  வித்தியாசமான போட்டிகளம், பிரம்மாண்ட அரங்கு, முன்னணி கதாநாயகர் தொகுப்பாளர் என பிரம்மாண்டங்கள் அணி வகுத்தாலும், மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை இந்த ஷோ இதுவரை பெறவில்லை. நிறைய பேர் விஜய் டிவி-யின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியுடன் மாஸ்டர் செஃபை கம்பேர் செய்கிறார்கள். குக் வித் கோமாளி என்ற டைட்டிலிலேயே கோமாளித்தனங்கள் இருக்கும் என்பதை அனைவரும் புரிந்துக் கொள்ள முடியும். ஆனால் மாஸ்டர் செஃப் அப்படியல்ல, இது முழுக்க முழுக்க சீரியஸான ஷோ. சமையலை கோமாளித்தனமாக கருதாமல், அதன் முக்கியத்துவம் உணர்ந்தவர்களுக்கே இந்நிகழ்ச்சியின் போக்கு புரியும், பிடிக்கவும் செய்யும்.

  Nikki Galrani as a special guest on Sun TV Master Chef Show, masterchef india, masterchef australia, masterchef contestants, masterchef season 11, masterchef legends, masterchef 2020, masterchef wiki, masterchef Tamil, masterchef sun TV, masterchef live, masterchef sunnxt, masterchef vijay sethupathi, சன் டிவி, சன் டிவி மாஸ்டர் செஃப், மாஸ்டர் செஃப் விஜய் சேதுபதி, விஜய் சேதுபதி மாஸ்டர் செஃப், மாஸ்டர் செஃப் நிக்கி கல்ராணி
  நிக்கி கல்ராணி


  இந்நிலையில் வித்தியாசமான கான்செப்டுகளை கொடுக்க வேண்டியிருப்பதால், புதிய யுக்தி ஒன்றை மாஸ்டர் செஃப் குழுவினர் கையிலெடுத்துள்ளனர். அதாவது வெள்ளித்திரையில் பிரபலமாக உள்ளவர்களை ஷோவுக்கு அழைத்துவர முடிவு செய்துள்ளனர். அந்த வகையில், இந்த வாரம் சிறப்பு விருந்தினராக நிக்கி கல்ராணி மாஸ்டர் செஃப் ஷோவில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  இதன்மூலம் பார்வையாளர்கள் அதிகரிக்கும் என மாஸ்டர் செஃப் குழுவினர் நம்புகின்றனர். அவர்களின் இந்த ‘யுக்தி’ எடுபடுமா? என்பது அடுத்த வார டி.ஆர்.பியில் தெரிந்துவிடும். இந்த ஷோவின் தெலுங்கு வெர்சனில் தமன்னா தொகுப்பாளராக களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Shalini C
  First published: