திருமணம் முடிந்த கையோடு நிக்கி கல்ராணி தமிழ் சின்னத்திரையில் முகம் காட்ட இருப்பதாக தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
‘டார்லிங்’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’, ‘கோ-2’,‘கலகலப்பு-2’, ‘சார்லி சாப்ளின்-2’உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பரீட்சையமான முகமாக மாறியவர் நடிகை நிக்கி கல்ராணி. இவருக்கும் நடிகர் ஆதிக்கும் கடந்த மே 18 ஆம் தேதி திருமணம் நடைப்பெற்றது. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் சேர்ந்து 2 படங்களில் ஜோடியாகவும் நடித்துள்ளனர். ஆரம்பத்தில் நட்பாக தொடங்கிய இவர்களது பழக்கம் காதலாக மாறி கடைசியில் திருமணத்தில் முடிந்துள்ளது.
இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து ஐதராபாத்தில் மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. அதனைத்தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இவர்களது திருமணம் நடந்தது. இதில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. திருமண பந்தத்தில் இணைந்து இருக்கும் இந்த ஜோடிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க..கல்யாண விஷயத்தில் அவளை ஏமாத்திட்டாங்க.. பிரபல சீரியல் நடிகைக்காக கண்ணீர் விட்டு கதறிய ஸ்ரீநிதி!
திருமணத்தை தொடர்ந்து ஆதி - நிக்கி கல்ராணி திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. இதில் நடிகர் சங்கத் தலைவர் நாசர்,துணைத் தலைவர் பூச்சி முருகன்,இசையமைப்பாளர்கள் இளையராஜா, தேவி பிரசாத், நடிகர்கள்விஜயகுமார், ஜீவா, அருண்விஜய்,ஆர்யா, பாக்யராஜ், பூர்ணிமா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின. திருமணத்திற்கு பிறகு நிக்கி கல்ராணி தொடர்ந்து கெரியரில் கவனம் செலுத்துவார் என கூறப்பட்டது.
இந்நிலையில், நிக்கி கல்ராணி குறித்து புதிய தகவல் ஒன்று இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அதாவது கலர்ஸ் தமிழில் வரும் ஜூன் 3ஆம் தேதி முதல் ஒளிப்பரப்பாகவுள்ள ரியாலிட்டி நிகழ்ச்சியான வெல்லும் திறமை என்ற ஷோவில் நிக்கி கல்ராணி நடுவராக கலந்து கொள்ள போகிறார் என்ற தகவல் வைரலாகி வருகிறது. முழுக்க முழுக்க திறமை அடிப்படையில் போட்டியாளர்கள் இதில் பங்கு கொள்ள போகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் 2 நடுவர்களில் நிக்கி கல்ராணியும் ஒருவர் என கூறப்படுகிறது. அதே நேரம் இதுக் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரையிலும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க.. ’ராஜா ராணி 2’ சீரியல் நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டது! உங்களுக்கு தெரியுமா?
ஒருவேளை நிக்கி கல்ராணி நடுவராக வந்தால் அவருக்காவே நிகழ்ச்சியை மிஸ் செய்யாமல பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதுக்குறித்த உண்மையான தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என தெரிகிறது. ஏற்கெனவே கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் ’போட்டிக்கு போட்டி’ நிகழ்ச்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.இதில் கலா மாஸ்டர் நடுவரக உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.