முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிகை நிக்கி கல்ராணி - நடிகர் ஆதி ரகசிய நிச்சயதார்த்தம்?

நடிகை நிக்கி கல்ராணி - நடிகர் ஆதி ரகசிய நிச்சயதார்த்தம்?

நிக்கி கல்ராணி - ஆதி

நிக்கி கல்ராணி - ஆதி

யாகவராயினும் நா காக்க மற்றும் மரகத நாணயம் ஆகிய இரண்டு தமிழ் படங்களில் ஒன்றாக நடித்த ஆதியும் நிக்கியும் நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகை நிக்கி கல்ராணிக்கும், நடிகர் ஆதிக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோலிவுட்டில் திருமண சீசன் மீண்டும் வந்துவிட்டது போல் தெரிகிறது. ஓரிரு வருடங்களாக காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நடிகர்கள் ஆதியும், நிக்கி கல்ராணியும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வலம் வந்தன.

“இந்த ஜோடி முதலில் ஒரு நெருக்கமான குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்த விழாவை நடத்தவுள்ளது, அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே முழு வீச்சில் தொடங்கியுள்ளன. திருமண தேதி பின்னர் முடிவு செய்யப்படும்” என நெருங்கிய வட்டாரத்தினர் கூறுவதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

படையப்பா படத்தில் வரும் இந்த குழந்தை இன்று பிரபல சீரியல் நடிகை!

தற்போது அது நடந்திருக்கிறது. ஆம்... நிக்கி கல்ராணிக்கும், ஆதி பின்னிஷெட்டிக்கும் நேற்று நெருங்கி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்த விழா நடந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நண்பர்களைப் பொறுத்தவரை, தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் மட்டும் இதில் கலந்துக் கொண்டார்களாம்.

சன் டிவி எதிர்நீச்சல் சீரியலால் வெடித்த சர்ச்சை... இயக்குநர் திருச்செல்வம் சொல்வது என்ன?

யாகவராயினும் நா காக்க மற்றும் மரகத நாணயம் ஆகிய இரண்டு தமிழ் படங்களில் ஒன்றாக நடித்த ஆதியும் நிக்கியும் நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர். ஆனால் ஜூலை 2020-ல் ஆதியின் தந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நிக்கி கலந்துகொண்டபோது அவர்கள் இருவரும் காதலில் இருப்பதாகக் கூறப்பட்டது. அதிலிருந்து அவர்கள் காதலிப்பதாக செய்திகள் வலம் வரத் தொடங்கின. ஆனால் இதற்கு, ஆதி, நிக்கி கல்ராணி இருவரிடமும் இருந்து மறுப்போ, ஒப்புதலோ வராமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அவர்கள் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Nikki Galrani, Tamil Cinema