• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • குழந்தைகளிடம் பிரபலமாகும் சிக்கு மற்றும் பண்டி!

குழந்தைகளிடம் பிரபலமாகும் சிக்கு மற்றும் பண்டி!

சிக்கு - பண்டி

சிக்கு - பண்டி

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி வளாகத்திற்கு வந்த சிக்கு பண்டி ஆகிய இரண்டு கதாபாத்திரங்களும், தொலைக்காட்சியில் பணியாற்றும் ஊழியர்களை உற்சாகப்படுத்தும் வண்ணம் நடனமாடியும், சேட்டைகள் செய்தும் உற்சாகம் ஊட்டினர்.

  • Share this:
    சிக்கு, பண்டி ஆகிய இரண்டு புதிய கார்ட்டூன் கதாபாத்திரங்கள் தற்பொழுது குழந்தைகள் மத்தியில் அதிகம் பிரபலமடைய தொடங்கியுள்ளனர்.

    வீட்டில் சுட்டித்தனம் செய்யும் குழந்தைகளை, சில நிமிடங்கள் கட்டிப் போட்டு அமைதியாக உட்கார வைக்கும் சக்தி கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கு உள்ளது. டாம் அண்ட் ஜெர்ரி தொடங்கி கார்டூன் உலகில் பல புதிய கதாபாத்திரங்களும் ஒவ்வொரு ஆண்டும் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன. மோட்டு பட்லு, சோட்டா பீம் என புதிது புதிதாக கார்டூனில் அறிமுகப்படுத்தப்படும் கதாபாத்திரங்கள், குழந்தைகள் மத்தியில் அதிக வரவேற்பை பெறுகின்றன.

    இந்த வரிசையில் தற்போது சிக்கு, பண்டி என இரண்டு புதிய கார்ட்டூன் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது நிக் தொலைக்காட்சி. குழந்தைகளின் அபிமான கார்ட்டூன் தொலைக்காட்சிகளில் ஒன்றாக வலம் வரும் நிக் தொலைக்காட்சியில், அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி முதல் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு குழந்தைகள் மத்தியில், பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சிக்கு, பண்டி ஆகிய இருவரும் இணைந்து செய்யும் சேட்டைகள், குழந்தைகளை வெகுவாகக் கவர தற்பொழுது இந்த கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலமடைய தொடங்கியுள்ளன.

    இதையடுத்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி வளாகத்திற்கு வந்த சிக்கு பண்டி ஆகிய இரண்டு கதாபாத்திரங்களும், தொலைக்காட்சியில் பணியாற்றும் ஊழியர்களை உற்சாகப்படுத்தும் வண்ணம் நடனமாடியும், சேட்டைகள் செய்தும் உற்சாகம் ஊட்டினர். பிரபல நட்சத்திர குழந்தைகளான ஐஸ்வர்யா மற்றும் ரியா ஆகியோர் இந்த கார்டூன் கதாபாத்திரங்களுடன் உற்சாகமாக நேரம் செலவிட்டதுடன் இந்த கார்ட்டூன் கதாபாத்திரங்கள் ஏன் தங்களை கவர்ந்துள்ளது எனவும் தெரிவித்தனர்.

    நாளுக்கு நாள் புதிய கார்ட்டூன் கதாபாத்திரங்கள் அறிமுகமாகி வந்தாலும், சிக்கு மற்றும் பண்டி ஆகிய புதிய கதாபாத்திரங்களுக்கு குழந்தைகள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பு, பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: