செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகர் பிரபல சீரியல் நடிகர் ஒருவரை காதலிக்கும் விஷயத்தை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக தற்போது செய்திவாசிப்பாளர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். செய்திகளின் மூலம் தினம் பார்வையாளர்களை சந்திக்கும் அவர்களின் ஸ்டைல், உடை, அலங்காரம் உள்ளிட்டவைகள் உற்று கவனிக்கப்படுகின்றன. இதில் இன்றைய இளைஞர்களின் மனங்களை பெரிதும் கவர்ந்தவர் செய்திவாசிப்பாளர் கண்மணி சேகர்.
பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் செய்தி வாசிப்பாளராக சினிமாவுக்குள் நுழைந்ததைப் போல கண்மணிக்கும் பல சீரியல், பட வாய்ப்புகள் வந்ததாம். ஒரு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கண்மணி, தான் அடிக்கடி எடுக்கும் புகைப்படம், வீடியோக்களை தவறாமல் ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொண்டு வருகிறார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இளையராஜா - உற்சாகத்தில் இசை ரசிகர்கள்!
அழகான தமிழ் உச்சரிப்பின் மூலம் தமிழ் மக்களின் மனதை கவர்ந்த கண்மணி, தற்போது சன் டிவியில் பணியாற்றி வருகிறார். இதற்கு முன் மாலை முரசு, ஜெயா டிவி மற்றும் காவேரி
தொலைக்காட்சிகளிலும் பணியாற்றி இருக்கிறார். இந்நிலையில் இவர் பிரபல சீரியல் நடிகருடன் காதலில் விழுந்த விஷயத்தை இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.
தனுஷுடன் ஏற்பட்ட பிரிவு... செல்வராகவன் படத்தைப் பகிர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன விஷயம்!

நவீன்
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே தொடரில் சிவாவாக வலம் வருபவர் நவீன். Money Ratnam என்ற மலையாள படத்தின் மூலம் நாயகனாக நடித்துள்ளார். தமிழில் மசாலா படம், பூலோகம், மாயவன், மிஸ்டர் லோக்கல் ஆகியப் படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது
இன்ஸ்டகிராம் பக்கத்தில் Expect The Unexpected என்று பதிவிட்டிருந்தார். இதையடுத்து அது என்னவாக இருக்கும் என அழ்ந்து யோசித்தார்கள் ரசிகர்கள். இந்நிலையில் செய்தி வாசிப்பாளர் கண்மணியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பதிவிட்டு, ஃபேமிலி எனக் குறிப்பிட்டுள்ளார். அதையே கண்மணியும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.