Home /News /entertainment /

அப்படி என்ன வேண்டுதல்? வருங்கால மனைவியுடன் முருகன் கோயிலில் சீரியல் நடிகர்!

அப்படி என்ன வேண்டுதல்? வருங்கால மனைவியுடன் முருகன் கோயிலில் சீரியல் நடிகர்!

நவின் - கண்மணி

நவின் - கண்மணி

நவின், வருங்கால மனைவியான கண்மணியுடன் முருகன் கோவிலுக்கு வழிபாடுக்காக சென்று இருக்கிறார்.

    சீரியல் நடிகர் நவின்குமார் தனது வருங்கால மனைவி கண்மணியுடன் சேர்ந்து முருகன் கோயிலில் வேண்டுதல் நிறைவேற்றிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    செய்திவாசிப்பாளர் கண்மணி - சீரியல் நடிகர் நவின் குமார் நிச்சயதார்த்தம் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த நவின் - கண்மணி கல்யாண தேதியும் முடிவாகிவிட்டது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸ்களை அள்ளின. இவர்களின் ஜோடி பொருத்தம் சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இருவரின் இன்ஸ்டா பக்கத்திலும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. சமீபகாலமாக சின்னத்திரையில் சீரியல் நடிகைகளைப் போலவே செய்திவாசிப்பாளர்களும் ரசிகர்களிடையே பிரபலமடைந்து வருகிறார்கள். அதில்,பிரியா பவானி சங்கர், அனிதா சம்பத் ஆகியோர் வரிசையில் கண்மணியு ம் இடம்பிடித்துள்ளார்.

    கல்யாண வீட்டு பிரட் அல்வா.. இதை செய்வது இவ்ளோ ஈஸியா!

    இவருக்கு சீரியல்களில் நடிக்க கூட வாய்ப்பு வந்தது. ஆனால் அதை மறுத்து விட்டதாக இணையத்தில் சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் பரவின. அதே போல தான் சீரியல் நடிகர் நவின் குமார் கெரியர் லைஃப்வும். இப்போது ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடும் இடத்திற்கு நவின் வளர்ந்து நிற்கிறார். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘இதயத்தை திருடாதே’ தொடரின் முதல் சீசன் மூலம் தான் நவின் நடிகராக சின்னத்திரையில் என் ட்ரி கொடுத்தார். இதில் சிவா என்ற கதாபாத்திரத்தில் நவின் நடித்து வருகிறார். இதில் நடிக்கும் ஹேமா பிந்துவை தான் நவின் காதலிப்பதாக சில வதந்திகள் பரவின. ஆனால் கடைசியில் நவின் - கண்மனி ஜோடி தான் உண்மையானது.

    சத்யாவா இப்படி ஒரு காரியத்தை செய்தார்? ஷாக்கில் வருண்!



     




    View this post on Instagram





     

    A post shared by Navin Kumar (@navinactor_official)






    இப்படி இருக்கையில், நவின், வருங்கால மனைவியான கண்மணியுடன் முருகன் கோவிலுக்கு வழிபாடுக்காக சென்று இருக்கிறார். இங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நவின், கண்மணி இருவரும் தங்களுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து உள்ளனர். அதுமட்டுமில்லை, இந்த புகைப்படத்தில் நவின் காவடி எடுப்பது போன்ற புகைப்படங்களும் உள்ளனர். இதனால் ரசிகர்கள் அவரிடம் என்ன வேண்டுதல்? என வினவி வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், Sun TV, TV Serial

    அடுத்த செய்தி