Home /News /entertainment /

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல்.. யாரெல்லாம் நடிக்கப்போறாங்க தெரியுமா?

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல்.. யாரெல்லாம் நடிக்கப்போறாங்க தெரியுமா?

ஹூசைன் அகமது கான்

ஹூசைன் அகமது கான்

Vijay TV Serial : சின்னத்திரை ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளது ஸ்டார் விஜய் டிவி.

சின்னத்திரை ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளது ஸ்டார் விஜய் டிவி. விஜய் டிவி-யில் ரசிகர்களின் மனங்களை கவர்ந்த நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

ஒருகாலத்தில் சீரியல்கள் என்றாலே அது சன் டிவி சீரியல்கள் தான் என்ற நிலையை மாற்றிய பெருமை விஜய் டிவி-க்கு இருக்கிறது. குடும்பம் மற்றும் காதல் இரண்டை மட்டுமே மையமாக வைத்து பெரும்பாலான சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்த நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையை மையமாக வைத்து சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்தில் ஒளிப்பரப்பி தமிழ் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை அளித்தது விஜய் டிவி.

விஜய் தொலைக்காட்சி ட்ரெண்டிங்கிற்கு ஏற்றார் போல் ரசிகர்கள் மனதை புரிந்துக் கொண்டு அதற்கு ஏற்றார் போல் சீரியல் மற்றும் ஷோக்களை ஒளிபரப்பி மக்களின் மனதில் தனது முத்திரையை ஆழமாக பதித்துள்ளது. சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒருபக்கம், வரிசையான மெகாஹிட் ரியாலிட்டி ஷோக்கள் மறுபக்கம் என்று சின்னத்திரையில் தனி ஆதிக்கம் செலுத்தி முன்னணி சேனல்களில் ஒன்றாக தொடர்ந்து இருக்கிறது. ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘பாரதி கண்ணம்மா’, ‘பாக்கியலட்சுமி’ , ‘தமிழும் சரஸ்வதியும்’ உள்ளிட்ட ஏராளமான சீரியல்கள் வெற்றிக்கொடி கட்டி வரும் நிலையில், விரைவில் புதிய சீரியல் ஒன்றை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது.



also read : பிக்பாஸ் அல்டிமேட்டின் இறுதி கட்டம்.. வெற்றியாளர் இவர் தானா?

தற்போது விஜய் டி.வியில் ‘வேலைக்காரன்’ என்ற  தொடர் ஒளிபரப்பாகி வருகிறது, இந்த சீரியலை இயக்கி வரும் கதிரவன், மற்றொரு சீரியலையும் இயக்க உள்ளார். விஜய் தொலைக்காட்சியில் விரைவில் செல்லம்மா என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இதையும் கதிரவன் தான் இயக்குகிறார். இந்த சீரியல் மூலம் நிகழ்ச்சி தொகுப்பாளரான ஹூசைன் அகமது கான் மீண்டும் ஹீரோவாக களமிறங்க உள்ளார். இதற்கு முன்னதாக ஹூசைன் அகமது கான் ’சன்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்திருந்தார்.



also read : கயல் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்... இனி மராத்தியிலும் பார்க்கலாம்!

இந்த தொடரில் கதாநாயகியாக சாந்தினி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. சித்து +2, பில்லா பாண்டி, வில் அம்பு, கட்டப்பாவ காணோம், மன்னர் வகையறா உள்ளிட்ட பல படங்களில் நடித்த சாந்தினிக்கு வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். 2018ம் ஆண்டு திருமணத்திற்கு பிறகு படங்களில் நடித்து வரும் சாந்தினி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தாழம்பூ’ என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார். இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜீ தமிழின் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்றான ரெட்டை ரோஜா தொடரில் ஹீரோயினாக இணைந்தார் சாந்தினி.

இதனையடுத்து சாந்தினி தான் செல்லம்மா சீரியலின் கதாநாயகி எனக்கூறப்பட்டு வந்த நிலையில், அவர் சீரியலை விட்டு விலகியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது செல்லம்மா சீரியலில் மலையாள நடிகை ஒருவரை ஹீரோயினாக நடிக்க வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ‘செல்லம்மா’ சீரியல் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. விரைவில் சீரியல் ஒளிபரப்பாக உள்ள நேரம், யாரெல்லாம் நடிக்கப்போகிறார்கள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளது.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Album, Vijay tv

அடுத்த செய்தி