• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • டிக் டாக் ஸ்ரேயா ரெட்டி டூ சீரியல் வாய்ப்பு.. யார் இந்த புது கண்ணம்மா வினுஷா தேவி?

டிக் டாக் ஸ்ரேயா ரெட்டி டூ சீரியல் வாய்ப்பு.. யார் இந்த புது கண்ணம்மா வினுஷா தேவி?

வினுஷா தேவி

வினுஷா தேவி

வினுஷா தேவி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். சென்னையில் கல்லூரிப் படிப்பை முடித்துள்ளார்.

  • Share this:
    சின்னத்திரையில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் சீரியல்களில் முதல் இடத்தில் விஜய் டிவியின் மெகா ஹிட் சீரியல் பாரதி கண்ணம்மா இருக்கிறது என்றே கூறலாம்.

    பாரதி கண்ணம்மா சீரியல் ஏகப்பட்ட திருப்பங்களோடு ஒளிபரப்பாகி வந்தாலும், தற்போது நடித்து வரும் ரோஷினி ஹரிப்ரியன் சீரியலில் இருந்து வெளியேறுவது தான் பரபரப்பான பேச்சுக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. பாரதி கண்ணம்மா சீரியல் வெற்றிக்கு கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினியும் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

    கண்ணம்மாவாக மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றிருந்த ரோஷினி ஹரிப்ரியன் சீரியலை விட்டு வெளியேறும் முடிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த செய்தி வதந்தியோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, ரோஷினி அதை உறுதி செய்தார். சில நாட்களுக்கு முன், சீரியல் படபிடிப்பின் இறுதி நாளை கொண்டாடும் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகின.

    சீரியலில் இருந்து ரோஷினி ஹரிப்ரியன் ஏன் விலகினார் என்பதற்கு இதுவரை சரியாக காரணங்கள் கூறப்படவில்லை. ஆனால், அவருக்கு திரைபப்டங்களில் நடிக்க வாய்ப்புகள் வருவதால், சீரியலில் இருந்து வெளியேறி இருக்கிறார் என்றும் கூறப்படுகின்றது. தற்போது ரோஷினிக்கு பதிலாக, புதிய கண்ணம்மாவாக பார்ப்பதற்கு ரோஷினி போலவே இருக்கும் வினுஷா தேவி என்ற புதிய நடிகை தேர்வாகியுள்ளார்.

    பிக் பாஸூக்கு போன பிரியங்காவுக்கு ஜால்ரா பட்டம்.. நிரூப்பை வைத்து கமெண்டுகள் வேற!

    வினுஷா நடித்த பாரதி கண்ணம்மா புரோமோவும் சமூக வலைத்தளங்கள் முழுவதும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட ரோஷினியின் ஜெராக்ஸ் போலவே இருக்கும் வினுஷா தேவி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். சென்னையில் கல்லூரிப் படிப்பை முடித்துள்ளார். இவருடைய நெருங்கிய தோழி, மற்றொரு டஸ்கி ஸ்கின் அழகியான கேப்ரியலா என்பது குறிப்பிடத்தக்கது. வினுஷா, கேப்ரியலா உடன் இணைந்து பல  நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Vinusha Devi (@vinusha_devi)






    வினுஷா தேவி சின்னத்திரைக்கு தான் புதுமுகமாக அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே ஒரு புரொஃபஷனல் மாடல். இவர் மாடலாகவும், டிக்டாக் வீடியோக்கள் மூலமாகவும் சமூக வலைத்தளங்களில் புகழ் பெற்றவர். டிக்டாக் ஸ்ரேயா ரெட்டி என்றால் ரசிகர்கள் மத்தியில் வினுஷாவை உடனேயே அடையாளம் காட்டும் அளவுக்கு திமிரு பட டிக்டாக் வீடியோக்கள் மூலம் புகழ் பெற்றவர். இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ஃபாலோயர்களைக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனக்கு கண்ணம்மா பாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்ததற்கு, பாரதி கண்ணம்மா தொடரின் இயக்குனரான பிரவீன் பென்னட்டிற்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் படப்பிடிப்பில் நடக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் வினுஷா.

    கண்ணம்மா என்ற மிகவும் சக்திவாய்ந்த பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு வரம் கிடைத்தது போல” என்று தெரிவித்தார் வினுஷா.அந்த பதிவுக்கு வாழ்த்து தெரிவித்து, பல ரசிகர்களும் வினுஷா கண்ணம்மா போலவே இருப்பதாக தெரிவித்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: