Home /News /entertainment /

அட்லி படத்தை காப்பியடித்த விஜய் டிவி சீரியல் - கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

அட்லி படத்தை காப்பியடித்த விஜய் டிவி சீரியல் - கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

நம்ம வீட்டு பொண்ணு

நம்ம வீட்டு பொண்ணு

அட்லி இயக்கத்தில் ஜெய், ஆர்யா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தில் இடம்பெற்ற கிளைமேக்ஸ் ஏர்போர்ட் சீன் போலவே அப்பட்டமாக காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    தமிழ் டிவி ரசிகர்களின் எண்ணங்களை அறிந்து ரியலிட்டி ஷோக்கள் உட்பட பல நிகழ்ச்சிகளை டெலிகாஸ்ட் செய்வதில் விஜய் டிவி எப்போதுமே சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதே போல ஏராளமான ஹிட் சீரியல்கள் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளது ஸ்டார் விஜய் டிவி. சிறுவர்கள், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் விதத்தில் பல்வேறு நிகிழ்ச்சிகளை ஒளிபரப்பை தனக்கென மிகப்பெரிய ரசிகர்களை வட்டத்தை கொண்டுள்ளது விஜய் டிவி.

    தற்போதெல்லாம் வெள்ளித்திரையை போலவே சின்னதிரை ஷோக்கள் மற்றும் சீரியல்களும் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருவதை பார்க்கிறோம். திரைப்படங்களை போலவே விறுவிறுப்பான சண்டை காட்சிகள் மற்றும் ரொமேன்ஸ் சொட்டும் காதல் காட்சிகள் என சினிமாவை மிஞ்சும் வகையில் சீரியல்களில் சீன்கள் இடம்பெற்று வருகின்றன. பொதுவாக சீரியல்களில் திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் மியூசிக் சீன்களுக்கு ஏற்ப பேக்ரவுண்டில் ஒலிபரப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது மேலும் குறிப்பிட்ட சீன்களுக்கு சுவாரசியம் சேர்ப்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் சில சீரியல்களில் திரைப்படங்களின் சீன்கள் அப்படியே காப்பியடிக்கபடுவதும் பல நேரங்களில் பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட நேரங்களில் அந்த சீரியல்ககள் நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகிறது.

    பிளாட் ஃபார்முக்கு வந்த விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரகேசர் - காரணம் என்ன?

    மதியம் துவங்கி இரவு வரை நிறைய சீரியல்கள் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் திங்கள் முதல் சனி வரை மதியம் 2.30 - 3 மணி வரை ஒளிப்பரப்பாகி வரும் ஹிட் சீரியல் தான் நம்ம வீட்டு பொண்ணு. விஜய் டிவியில் ஏற்கனவே பல ஹிட் சீரியல்களை டைரக்ட் செய்து வரும் பிரவீன் பென்னட் இயக்கத்தில், நம்ம வீட்டு பொண்ணு சீரியல் கடந்த 2021 ஆகஸ்ட் 16 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கார்த்திக் என்ற கேரக்டரில் ஹீரோவாக நடிகர் சுர்ஜித் குமார் நடிக்கிறார். மீனாட்சி கேரக்டரில் நடிகை அஷ்வினி ஆனந்திதா நடிக்கிறார். இந்நிலையில் இந்த் சீரியலின் லேட்டஸ்ட் ப்ரமோ வீடியோவை விஜய் டிவி சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து இருக்கிறது.



    ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷ் வெளியிட்ட மகிழ்ச்சியான புகைப்படம்!

    இந்த லேட்டஸ்ட் ப்ரமோவை தற்போது நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்ற்னர். ஏனென்றால் அட்லி இயக்கத்தில் ஜெய், ஆர்யா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தில் இடம்பெற்ற கிளைமேக்ஸ் ஏர்போர்ட் சீன் போலவே அப்பட்டமாக காட்சிகள் இடம்பெற்றுள்ளதே இதற்கு காரணம். தவிர ராஜா ராணியின் கிளைமேக்சில் வரக்கூடிய அதே பேக்ரவுண்ட் மியூசிக் தான் இந்த சீனிலும் ஒலிக்கிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் நம்ம வீட்டு பொண்ணு சீரியலின் லேட்டஸ்ட் ப்ரமோவை பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர். அதே போல சீரியல் என்பதால் ஏர்போர்ட்டில் இந்த சீனை எடுக்காமல், ஏதோ ஒரு பிரபல ஷாப்பிங் மாலில் ஏர்போர்ட் போல செட் போட்டு இந்த சீனை ஷூட் செய்திருப்பதும் ரசிகர்களின் கலாய்க்கு மற்றொரு காரணமாக இருக்கிறது. மேலும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன் ஒருவர் "ராஜா ராணியவே மிஞ்சிடுச்சு" என்று கமெண்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்க
    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial

    அடுத்த செய்தி